கால் மூட்டு வலி உடனே குணமாக!!

கால் மூட்டு வலி உடனே குணமாக!! 

ஆண் பெண் பலருக்கும் 30 வயது தாண்டி விட்டாலே எலும்பு தேய்மானம் ஏற்பட்டு விடுகிறது. இதனால் மாடிப்படி ஏற இறங்க முடியாமல் சிரமப்படுவதுண்டு.

குறிப்பாக பெண்களின் எலும்பானது மிகவும் சீக்கிரமாக தேய்மானம் அடைவதால் அவர்களே அதிக அளவு மூட்டு வலியை சந்திக்கின்றனர்.

அதேபோல கால்சியம் குறைபாடு ஏற்பட்டாலும் மூட்டு வலி முழங்கால் வலி உண்டாகும்.

இவ்வாறு இருப்பவர்கள் தினம் தோறும் பால் வால்நட் பாதாம் போன்றவற்றை தவறாமல் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல வெள்ளை நிற காய்கறிகளையும் அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனையும் மீறி ஒரு சிலரால் மூட்டு முழங்கால் வலி போன்றவற்றை பொறுத்துக் கொள்ள முடியாது.

அவ்வாறு இருப்பவர்கள் கடைகளில் இருக்கும் வலி நிவாரணிகளை வாங்கி பயன்படுத்துவதுண்டு.

இனி அதுபோல செய்யாமல் இந்த பதிவில் வருவதை செய்து வைத்துக் கொண்டால் போதும்.

அதனை தடவி வர ஒரு மணி நேரத்தில் வலிகள் பறந்து போகும்.

தேவையான பொருட்கள் :

கடுகு எண்ணெய் 100 ml

மிளகு இடித்தது கால் ஸ்பூன்

திப்பிலி 5

சுக்கு 1 துண்டு

வெள்ளை பூண்டு

பிரியாணி இலை 2

உளுத்தம் பருப்பு 1 சிட்டிகை

நமது கை கால்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க கடுகு எண்ணெய் மிகவும் உதவும். பிரியாணி இலையில் அதிக அளவு விட்டமின் பி 12 இரும்பு சத்து போன்றவை இருப்பதால் நமது மூட்டு முழங்கால் வலிகளுக்கு மிகவும் உதவும். அதேபோல பூண்டும் இவ்வாறான ஒரு காரணியாக செயல்படுகிறது.

செய்முறை:

எடுத்து வைத்துள்ள கடுகு எண்ணெயை பாத்திரத்தில் ஊற்றி வெதுவெதுப்பாக சூடு படுத்திக் கொள்ள வேண்டும். அந்த வெதுவெதுப்பான சூட்டில் இடித்து வைத்துள்ள மிளகு எடுத்து வைத்துள்ள சுக்கு போன்றவற்றை சேர்க்க வேண்டும்.

அதனுடன் வெள்ளைப் பூண்டு ஆறு பல் மற்றும் பிரியாணி இலை இரண்டு ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும். இது நன்றாக பொரிந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும். அவ்வாறு அணைக்கும் நேரத்தில் ஒரு சிட்டிகை உளுத்தம் பருப்பு இறுதியாக சேர்க்க வேண்டும்.

பின்பு இதில் உள்ள எண்ணெய் மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். உங்க கை கால்களில் உள்ள வீக்கம் மற்றும் முழங்கால் வலி ஆகியவற்றிற்கு இதனை தடவி கொள்ளலாம். ஒரு மணி நேரத்திலேயே வலிகள் அனைத்தும் குணமாகும்.