வாய்ப் புண் குணமாக சித்த மருத்துவம்:

வாய்ப் புண் குணமாக சித்த மருத்துவம்:

பல்வேறு உடல் பிரச்சினைகளால் வாய்ப்புண் வருகிறது. வாய்ப் புண் இருந்தால் சரியாக சாப்பிட முடியாது. குறிப்பாக சூடாகவோ அல்லது காரமாகவோ சாப்பிட முடியாது. இதிலிருந்து மீள சித்த மருத்துகள் துணைபுரியும். 

1) திரிபலா பொடி (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்)- இதை இளம் சூடான தண்ணீரில் கலந்து வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும். 

2) நெல்லிக்காய் லேகியம் காலை, இரவு இருவேளை எடுக்க வேண்டும், இதில் வைட்டமின் சி ஏராளமாக இருப்பதால் விரைவில் வாய்ப்புண் ஆறும். ஏலாதி சூரணம் -1 கிராம், சங்கு பற்பம்-200 மிகி சேர்த்து நெய்யில் சாப்பிட வேண்டும்.

3) வெங்கார மது மருந்தை வாய்ப்புண் உள்ள இடங்களில் போட வேண்டும். 

மேலும், காரமான, சூடான உணவுகளை தவிர்க்க வேண்டும். உணவில் மணத்தக்காளி கீரை, பொன்னாங்கண்ணி கீரை, மாதுளம்பழம், நெல்லிக்காய், சுண்டை வற்றல், மோர் , தயிர், சின்ன வெங்காயம் இவைகளை அதிகளவில் எடுக்க வேண்டும். இரவு நெடுநேரம் கண்விழித்து டிவி, மொபைல் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் உடல் சூடு அதிகரிக்கும்.