சருமத்தை எந்த வகையிலும் பாதிக்காத chemical free சன் ஸ்கிரீனை நாம் வீட்டிலேயே எப்படி தயாரிப்பது?

சருமத்தை எந்த வகையிலும் பாதிக்காத chemical free சன் ஸ்கிரீனை நாம் வீட்டிலேயே எப்படி தயாரிப்பது?

இன்றைய காலக்கட்டத்தில் வெயிலுக்கு பயன்படுத்தும் இந்த சன் ஸ்கிரீன் லோஷனை எல்லோருமே உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் நாம் பயன்படுத்தும் இந்த சன் ஸ்கிரீன் லோஷன் நம்முடைய சருமத்திற்கு ஏற்றது தானா, இதை பயன்படுத்தலாமா? என்பதை பற்றி தெரிந்து கொண்டு பயன்படுத்துவதும், கெமிக்கல் இல்லாமல் சருமத்திற்கு எந்த வகையிலும் பாதிக்காத சன் ஸ்கிரீன் லோஷனை நாம் வீட்டில் எப்படி தயாரித்து உபயோகிப்பது என்பதை பற்றியும் இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சன் ஸ்கிரீன் லோஷனை பொறுத்த வரையில் நல்ல தரமானவற்றை தேர்ந்தெடுத்து வாங்குவது சிறந்தது. ஏனென்றால் விலை குறைவான சன் ஸ்கிரீன் லோஷன் வாங்குகிறோம் என்ற பெயரில் அதில் இருக்கும் கெமிக்கலின் தன்மைகளை பற்றி தெரியாமல் வாங்கி பயன்படுத்தும் போது, சருமத்திற்கு அதிக பாதிப்பு ஏற்படக்கூடும். அது மட்டுமின்றி சன் ஸ்கிரீன் லோஷன் வாங்கும் போது அதன் காலாவதி நாட்களை கண்டிப்பாக தெரிந்து கொண்டு வாங்குவது அவசியம். காலாவதியான சன்ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்தி விட்டால் சருமம் முற்றிலுமாக பாதித்து விடும்.

இந்த சன் ஸ்கிரீன் லோஷனில் SPF (Sun production factor) இதன் அளவை தெரிந்து கொண்டு பயன்படுத்துவது அவசியம் இதன் அளவு 15 ,30 எனத் தொடர்ந்து பல அளவுகள் வரை இருக்கும். நம் ஊரின் தட்பவெப்ப நிலை ஏற்றவாறு இந்த அளவுகளை பார்த்து வாங்க வேண்டும். இந்த அளவுகளை பொறுத்து தான் சன் ஸ்கிரீன் லோஷன் எந்த அளவிற்கு நம்மை வெயிலிலிருந்து காக்கும் என்பதையும், அது நம் சருமத்திற்கு ஏற்றது தானா என்று தெரிந்து கொள்ள முடியும்.

அதே போல் சன் ஸ்கிரீன் லோஷனை பொறுத்த வரையில் அதை போட்ட உடனே வெளியில் செல்லக் கூடாது. அது நன்றாக காய்ந்த பிறகு தான் வெயிலில் செல்ல வேண்டும். சன் ஸ்கிரீன் லோஷனை முகத்திற்கு மற்றும் பயன்படுத்தாமல் வெயில் படும் இடமான கழுத்து கைகள் போன்றவற்றிலும் கூட இதை பயன்படுத்தலாம்.

சன் ஸ்கிரீன் போட்டு இரண்டு மணி நேரம் வரை தான் வெயிலில் இருக்க வேண்டும். அதற்கு மேலும் இருக்க வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால் முகத்தை ஒரு முறை அலம்பிய பிறகு மறுபடியும் சன் ஸ்கிரீன் பயன்படுத்தி கொள்வது சிறந்தது.

இந்த சன் ஸ்கிரீனை நாம் வீட்டில் கூட தயார் செய்து கொண்டு கொள்ளலாம். சாதாரண சருமம் இருப்பவர்கள் ஒரு உருளைக்கிழங்கு சாறுடன், எலுமிச்சை சாறையும் கலந்து தேய்த்தாலே போதும். வெயில் தான் ஏற்பட்ட கருமை நீங்கி விடும் . வறண்ட சருமம் இருப்பவர்கள் பப்பாளி பழச்சாறுடன், காய்ச்சாத பாலையும் கலந்து அத்துடன் தேன் சேர்த்து முகத்தில் தேய்த்து கொள்ளலாம். எண்ணெய் சருமம் இருப்பவர்கள் முல்தானி மெட்டியுடன் ரோஸ் வாட்டரை கலந்து முகத்தில் தேய்த்து காய்ந்தவுடன் சுத்தம் செய்து விடலாம்.

இதெல்லாம் இயற்கையான முறையில் நாம் வீட்டில் தயார் செய்து கொள்ளக்கூடிய சன் ஸ்கிரீன்கள். இவற்றை பயன்படுத்தி சருமத்தை வெயிலில் இருந்து காத்துக் கொள்ளலாம்.