இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றும் முறைகள்

இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை  வெளியேற்றும் முறைகள்

ஆரோக்கியாக இருக்க வேண்டும் என்று  நினைக்கிறீர்களா? அப்போ உங்கள்  இரத்தத்தை முதலில் சுத்தமாக  வைத்துக் கொள்ள வேண்டும். நமது இரத்தம் சுத்தமாக இருந்தால் மட்டுமே நாம் ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்! இரத்தம் நம் உடலில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கின்றது என்பது அனைவரும் அறிந்ததே! எனவே இரத்த ஆரோக்கியத்திற்கும் நாம் அதிக கவன செலுத்த வேண்டும். இரத்தம் சுத்தமாக இருந்தால் தான் நாம் நோய்களின்றி வாழ முடியும்.

இரத்தத்தை நாம் இயற்கை முறையில் சுத்தம் செய்யலாம். இயற்கையில் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள், கீரைகளை பயன்படுத்தி இரத்தத்தை சுத்தப்படுத்தலாம். நாம் இப்பதிவில் பார்க்க இருப்பது இயற்கையாக இரத்த சுத்திகரிப்பு மற்றும் இரத்த வலுவிற்கு உதவும் உணவுகளை பற்றித்தான்!!!

பீட்ரூட்

பீட்ரூட்டை வாரம் ஒரு முறை நாம் உணவில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பீட்ரூட்டில் விட்டமின் ஏ, விட்டமின் சி, மக்னீசியம், இரும்புசத்து, ஃபோலேட், நார்ச்சத்து இருக்கின்றன. மேலும் இதில் உள்ள நிறமியானது மிக மிக முக்கியம்.

கல்லீரல் செயல்பாட்டை பீட்ரூட் ஊக்குவிக்கின்றது.


இயற்கையான முறையில் இரத்தத்தினை
சுத்திகரிக்கவும் உதவுகிறது. மேலும் இரத்தமானது உடலில் சீராக ஓட உதவுகிறது. இரத்த சிவப்பணுக்கள்
உற்பத்திக்கும் உதவுகிறது.

பீட்ரூட்டினை தோல் சீவி மிக்ஸியில் அரைத்து ஜூஸ் செய்து தினசரி சாப்பிட வேண்டும்.

முட்டைகோஸ்:

முட்டைகோஸ் இரத்தத்தை சுத்திகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

பருப்பு வகைகள் சேர்த்து முட்டைகோஸை கூட்டு செய்து சாப்பிடுவது நல்லது. பச்சையாகவும்
சாப்பிடலாம்.

பூண்டு :

பூண்டும் இரத்தத்தை சுத்திரிகரிக்க உதவுகிறது. மேலும் உடலுக்கு மருந்தாகவும் செயல்படுகிறது. பூண்டை தினசரி உணவில் கட்டாயம்  சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கேரட் :

பீட்ரூட்-க்கு அடுத்து இரத்தத்தினை சுத்திகரிக்க செய்வதில் அதிக பங்கு வகிப்பது கேரட்தான். தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

கேரட்டினை தினசரி ஜூஸ் செய்து சாப்பிட சாப்பிட வேண்டும். பொரியல் செய்தும் சாப்பிட்டு வரலாம்.

நெல்லிக்காய்:

நெல்லிக்காயில் அதிக இரும்பு சத்து உள்ளது. இரத்தத்தை வலுப்படுத்துகிறது. எனவே நெல்லிக்காயினை அடிக்கடி சாப்பிடுவது உடலுக்கு அவ்வளவு நல்லது.

ஆப்பிள்:

ஆப்பிளை சாப்பிடுவதால் இரத்தம் சுத்திகரிக்க படுகிறது. ஆப்பிளை  தினசரி ஜூஸ் செய்து சாப்பிடுவது நல்லது.  ஆப்பிளை தோல் சீவாமல் தோலுடன் சாப்பிடுவது நல்லது. (ஆப்பிள் தோல் மீது மெழுகு பூசி இருந்தால் தோலினை சாப்பிட கூடாது).

நாவல் பழம்:

நாவல் பழத்தில் அதிக இரும்பு சத்து உள்ளதால் நாவல் பழம் கிடைக்கும்போதெல்லாம்  கட்டாயம் அடிக்கடி  சாப்பிட வேண்டும்.

முருங்கைக்கீரை :

முருங்கைக்கீரையில் அதிக இரும்பு சத்து இருப்பதால்  ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்கிறது. தினசரி உணவில் கட்டாயம் முருங்கைக்கீரையை சேர்த்துக்கொள்வது அவசியம்.

வேப்பிலை:

வேப்பிலையினை சிறிதளவு தினசரி சாப்பிடுவதால் இரத்தமானது ரொம்ப சுத்தமாக இருக்கும். வேப்பிலையினை அரைத்து சிறு உருண்டையாகவும் சாப்பிட்டு வரலாம். தினசரி சாப்பிட முடியவில்லை என்றால் மாதம் ஒரு முறை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிக்கப்படும் இரத்தமானது ரொம்ப சுத்தமாக இருக்கும்.

புதினா:

புதினாவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை வடிகட்டி குடித்து வர வேண்டும். அவ்வாறு குடிக்கும் போது புதினா இரத்தத்தை உடனே புத்துணர்ச்சி அடைய செய்யும்.

கீழாநெல்லி:

கீழாநெல்லியானது இரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை அகற்றுகிறது. இதனால் இரத்தமானது சுத்தம் செய்யப்படுகிறது. மாதம் ஒரு முறை கீழாநெல்லியினை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பால்,மஞ்சள்:

தினசரி  பாலை கொதிக்க வைத்து 3 சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து இரவில்  உறங்க செல்லும் முன் ஒரு டம்ளர் குடித்து வர வேண்டும். மஞ்சள் கிருமி நாசினி பொருள் என்பதால் பாலுடன் சேர்ந்து இரத்தத்தை தூய்மை செய்கிறது.

மேற்கூறிய அனைத்தையும் கிடைக்கும்போதெல்லாம் எடுத்துக் கொள்வது உடலுக்கு  நல்லது. தினசரி ஒன்று கட்டாயம் எடுத்துக் கொள்வது அவசியம்.