இயற்கையான முறையில் வயிற்றில் உள்ள குழந்தை பிறந்த தழும்புகளை நீக்க உதவும் எண்ணெய்கள்!!!

இயற்கையான முறையில் வயிற்றில் உள்ள குழந்தை  பிறந்த தழும்புகளை நீக்க உதவும் எண்ணெய்கள்!!!

அழகைக் கெடுக்கும் விஷயங்களில் ஸ்ட்ரெட்ச் மார்க் முக்கிய பிரச்சினையாக உள்ளது.. இத்தகைய ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் உடலின் வயிறு, தொடை, பேக் போன்ற இடங்களில் தான் பெரும்பாலும் வரும். சில சமயங்களில் சிலருக்கு மார்பகங்களில் கூட வரும்.

இந்த ஸ்ட்ரெட்ச் மார்க் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் கருத்தரித்தல், உடல் எடை அதிகரித்தல், ஜிம் சென்று பயிற்சி செய்தல் போன்ற காரணங்களால், சருமமானது திடீரென்று விரிந்து சுருங்கும் போது, தழும்புகளாக மாறுகின்றன.

ஆகவே இத்தகைய ஸ்ட்ரெட்ச் மார்க்குளை போக்குவதற்கு பல க்ரீம் மற்றும் ஜெல் கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் இவை எந்த ஒரு பலனையும் தருவதில்லை. அதுவே இயற்கை பொருட்களைக் கொண்டு முயற்சித்தால், நிச்சயம் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்கலாம்.

அதிலும் இயற்கை எண்ணெய்கள் கொண்டு தினமும் மசாஜ் செய்து வருவதன் மூலம், விரைவில் சருமத்தில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறைய வைக்கலாம். அதுமட்டுமின்றி, சருமத்தில் வறட்சி ஏற்படுவதையும் தடுக்க முடியும். அவை என்னவென்று பார்க்கலாம்..

• ரோஸ்மேரி ஆயிலை பாதாம் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, தினமும் ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடம் மசாஜ் செய்து வந்தால், தழும்பானது படிப்படியாக மறைய ஆரம்பிக்கும்.

• ஆலிவ் ஆயிலைக் கொண்டு, மசாஜ் செய்து வந்தாலும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளைப் போக்கலாம். மேலும் இதனால் சருமம் நன்கு ஈரப்பசையுடன் வறட்சியடையாமல் இருக்கும்.

• பாதாம் எண்ணெயில் நிறைய அழகு நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் ஒன்று தான் ஸ்ட்ரெட்ச் மார்க்கை போக்குவது. அதற்கு பாதாம் எண்ணெயை, ஆலிவ் ஆயில் மற்றும் கோதுமை எண்ணெயுடன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் 15 நிமிடம் மசாஜ் செய்து கொண்டு படுக்க வேண்டும். இதனால் நாளடைவில் தழும்புகள் மறைந்துவிடும்.

• லாவெண்டர் எண்ணெயுடன், ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 20 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இதை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.