பாலுடன் கசகசா, தாமரை விதைகள் சேர்த்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள் தாராளம்...
பாலுடன் கசகசா, தாமரை விதைகள் சேர்த்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள் தாராளம்...
பாலுடன் இதை மட்டும் சேர்த்து குடித்துப் பாருங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய எலும்பு பலவீனம், மூட்டு வலி உடல் சோர்வு, தூக்கமின்மை, போன்ற எல்லா பிரச்சினைகளையும் சரி செய்து நமது உடல் ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக இருக்கும். இந்த அற்புதமான பானத்தை எவ்வாறு தயார் செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இதை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் சாப்பிடலாம்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கால் டீஸ்பூன் அளவு நெய்யை சேர்க்கவும். அதில் 11/2 டீஸ்பூன் அளவு கசகசாவை சேர்க்கவும். இதை ஆங்கிலத்தில் பாப்பி சீட்ஸ் என்று கூறுவர். இதைக் குறைவான தீயில் வைத்து இரண்டு நிமிடத்திற்கு நன்றாக வறுக்கவும். கசகசாவில் அளவுக்கு அதிகமாக கால்சியம் சத்து உள்ளது. இது உடல் சோர்வை நீக்கும். மன அழுத்தத்தைப் போக்கும். இரத்தத்தை சுத்திகரிக்கச் செய்யும். நல்ல ஆழ்ந்த உறக்கத்தையும் கொடுக்கும்.
கசகசா நன்றாக வறுபட்டதும் அதில் ஒரு கப் அளவு பசும்பால் சேர்க்கவும். பால் நன்றாக கொதித்து வர வேண்டும்.
இதில் சேர்க்க வேண்டிய மற்றொரு பொருள் தாமரை விதை. தாமரை விதை கருப்பு நிறத்தில் இருக்கும். தாமரை விதைகள் நாட்டு மருந்து கடைகளிலும், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களிலும், பழமுதிர் சோலையிலும், தற்போது ஆன்லைனிலும் எளிதாக கிடைக்கின்றது. இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. மெக்னீசியம், பொட்டாசியம், புரதச்சத்துக்கள், சோடியம், பாஸ்பரஸ் போன்ற எண்ணற்ற சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
நமது உடலில் மக்னீசியம் குறைந்தால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். தாமரை விதைகளில் மெக்னீசியம் அதிகமாக உள்ளதால் நமது ரத்த ஓட்டத்தை சீராக்கி ஆக்சிஜனை மிக எளிதாக வழங்கும். இதனால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது. இதில் உள்ள பொட்டாசியமும் குறைந்த அளவு சோடியமும் இருப்பதால் ரத்த நாளங்களை எளிதாக தளர்வடையச் செய்து ரத்த அழுத்தத்தை சீராக்கும்.
மலச்சிக்கல் பிரச்சினை இருந்தால் அந்த பிரச்சினையை சரி செய்யும். இதில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. இது நமது எலும்பிற்கு வலுவை சேர்த்து உறுதியை கொடுக்கிறது. எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதை தடுக்கிறது. மேலும் தசைப்பிடிப்பு ஏற்படுவதை சரி செய்கிறது. சில பேருக்கு உடல் சோர்வு இருக்கும் கை கால் மதமதப்பு இருக்கும் போன்ற அனைத்து பிரச்சினைகளையும் இது சரி செய்யும்.
பால் நன்றாக கொதிந்ததும் அதில் மூன்று டீஸ்பூன் அளவு தாமரை விதைகளை போடவும். போட்டதும் உடனே சுருங்க ஆரம்பிக்கும். இரண்டு நிமிடம் வைத்து கிளறி விட்டதும் எடுத்து சிறிது நேரம் ஆறவிட்டு ஒரு டம்ளரில் சேர்க்கவும். இதில் கருப்பட்டி அல்லது கல்கண்டு பொடி செய்து சேர்த்து சாப்பிடலாம். இல்லையெனில் தேன் சேர்க்கலாம். நாட்டுச் சர்க்கரை ,வெல்லம் போன்றவற்றை சேர்க்கும்போது திரிந்து போக வாய்ப்பு உண்டு. இதை இரவு சாப்பிட்டதும் அரை மணி நேரம் கழித்து குடிக்க வேண்டும். பின் பத்து நிமிடம் கழித்து தூங்கச் செல்லலாம். பெரும்பாலும் இதை தினமும் குடிக்கலாம் அல்லது வாரத்தில் மூன்று நாட்கள் எடுத்துக் கொள்ளலாம். இதை தொடர்ந்து குடித்து வர 100 வயதானாலும் நமக்கு உடல் சோர்வு மூட்டு வலி வரவே வராது