சர்க்கரை நோய் கால் வீக்கம் மற்றும் எரிச்சல் சரியாக வில்வ இலை பொடி, கஷாயம்
சர்க்கரை நோய் கால் வீக்கம் மற்றும் எரிச்சல் சரியாக வில்வ இலை பொடி, கஷாயம்
தற்போதுள்ள காலகட்டத்தில் நாம் செய்யும் வேலை சுமை காரணமாகவும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகளின் காரணமாகவும் நம் உடலில் எண்ணற்ற நோய்கள் தானாகவே உருவாகின்றது. அதனை சரி செய்ய நாம் பல்வேறு வகையில் மருந்துகளை எடுத்து வருகின்றோம். அந்த வகையில் ஒன்றுதான் நரம்பு மண்டலம் சார்ந்த பிரச்சினைகள்.இந்த பிரச்சினை பெரும்பாலும் வயது முதிர்ந்தோர்க்கு தான் ஏற்படுகிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு கால் மதமதப்பு ,கால் எரிச்சல் போன்றவைகள் ஏற்படுகிறது. அவை ஏற்படாமல் இருக்க நாம் என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பாக சர்க்கரை நோயாளிகளைத் தவிர மற்றவருக்கும் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். நரம்புகளில் ஏற்படக்கூடிய வீக்கத்தால் தான் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. கை மற்றும் கால்களில் இருக்கக்கூடிய நுனி நரம்புகளில் ஏற்படக்கூடிய வீக்கங்கள் தான்.
மேலும் நம் உடலில் உள்ள உறுப்புகளுக்கு செல்லக்கூடிய ரத்தத்தின் நரம்புகளில் வீக்கம் ஏற்பட்டாலும் நெருப்பில் கால் வைத்தது போல எரிச்சல், ஊசி குத்துவது போல வலி உணர்வு போன்றவைகள் தோன்றும்.
அதற்காக அதிக அளவு ஊட்டச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் மதுப்பழக்கம் இருப்பவர்களுக்கு இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இதற்காக வில்வ இலையை நன்கு நிழலில் காய வைத்து அதனை பொடி செய்து கொள்ள வேண்டும்.
அதனை வெறும் வயிற்றில் அரை டம்ளர் நீரில் அந்த பொடியை கலந்து 48 நாட்கள் குடித்து வர காலில் ஏற்படும் பிரச்சினைகள் நீங்கும். ரத்த ஓட்டம் சீராகும் நரம்பு மண்டலம் முழுமையாக ஆரோக்கியமடையும் மற்றும் நரம்பு செல்கள் அனைத்தும் புத்துணர்ச்சி பெறும்.