நீண்ட ,நீங்காத இளமையைத் தரும் சங்கு பூ!!

நீண்ட ,நீங்காத இளமையைத் தரும்  சங்கு பூ!!

கிராமப்புறங்களில் ஆங்காங்கே பூத்து கிடக்கும் இந்த சங்குப் பூவை நாம் பூஜைக்கு மட்டும் தான் பயன்படுத்துவோம். ஆனால் சங்கு பூவில் உடல் அழகை மேம்படுத்தக்கூடிய சத்துக்கள் நிறைந்திருக்கின்றது. இளமையான தோற்றத்தைப் பெற, முதுமையான தோற்றத்தை தள்ளிப் போட முகத்தை பொலிவாக மாற்ற, இந்த சங்கு பூவை அழகுக் குறிப்புக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றிய ஒரு தீர்வைத்தான் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணி பாருங்க. கூடிய சீக்கிரத்தில் உங்களுடைய சரும அழகில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும். நீண்ட நாட்களுக்கு இளமையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த டிப்ஸ் ட்ரை பண்ணலாம். எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது.

நீல நிறத்தில் இருக்கும் ஐந்து சங்கு பூவை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் இந்த பூக்களை போட்டு கொதிக்கின்ற 1 சிறிய டம்ளர் அளவு தண்ணீரை அந்த சங்குப்பூவில் ஊற்றி மூடி வைத்து விடுங்கள். ஐந்து நிமிடம் அப்படியே இருக்கட்டும். சங்கு பூவில் இருக்கும் நீல நிறம் அனைத்தும் அந்த தண்ணீரில் இறங்கி தண்ணீர் நீல நிறத்தில் மாறும்.

இப்போது தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் சங்கு பூ நமக்கு தேவையில்லை. நீல நிற சங்கு பூ தண்ணீரில், 2 ஸ்பூன் அலோவேரா ஜெல் சேர்த்து, 1 விட்டமின் E கேப்ஸ்யூல் உள்ளே இருக்கும் ஜல்லை சேர்த்து, அடித்து கலக்கினால் இந்த தண்ணீர் பர்பிள் நிறத்திற்கு அழகாக மாறிவிடும். ஓரளவுக்குத் தான் இந்த சீரம் திக்காக இருக்கும்.

அதாவது ஆலோவேரா ஜெல் நிறைய சேர்த்தால் செமி சாலிடாக தல தலவென இந்த ஜெல் நமக்கு கிடைக்கும். அலோவேரா ஜெல் கொஞ்சமாக சேர்த்தால் லிக்விடாக தான் இருக்கும். உங்களுக்கு எப்படி தேவையோ அந்த அளவிற்கு ஆலோவேரா ஜெல் சேர்த்துக் கொள்ளலாம். தவறு கிடையாது. இந்த ஜெல்லை லேசாக கையில் தொட்டு முகம் கழுத்து பகுதிகளில் லேசாக அப்ளை செய்து அப்படியே விட்டுவிடலாம்.

சீரம் போலதான் இதை உங்களுடைய முகம் இழுத்துக் கொள்ளும். பின்பு முகம் கழுவ வேண்டும் என்று அவசியம் கிடையாது. அப்படியே விட்டு விடுங்கள். எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும் நீங்கள் இந்த சீரமை முகத்தில் அப்ளை செய்து கொள்ளலாம். ஒரு மணி நேரம் கழித்து, இரண்டு மணி நேரம் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளலாம்.

இரவு இந்த சீரமை அப்ளை செய்தால் மறுநாள் காலை முகம் கழுவிக் கொள்ளலாம். தவறு கிடையாது. தினம் தோறும் இந்த சீரமை முகத்தில் அப்ளை செய்து வரலாம். நாம் தயார் செய்த இந்த சீரம் பிரிட்ஜில் வைத்தால் ஏழு நாட்கள் வரை கெட்டுப் போகாது. ஆனால் அலோவேரா ஜெல்லை நீங்கள் பிரஷ்ஷாக கற்றாழை செடியிலிருந்து எடுத்து சேர்த்தால் நான்கு நாட்கள் வரை தான் இந்த சீரம் ஃப்ரிட்ஜில் கெட்டுப் போகாமல் இருக்கும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இந்த ரெமிடி பிடிச்சிருந்தா ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க. அழகான அழகை சீக்கிரம் பெறலாம்.