பப்பாளி ஃபேஸ் பேக்
பப்பாளி ஃபேஸ் பேக்
இனி நீங்க வெளிய போகணும்னா சட்டுன்னு ரெடி ஆகிடலாம். என்னன்னா ரெண்டு நிமிஷத்திலேயே முகத்தை பளிச்சுன்னு மாத்திடலாம். கேக்கவே ஆச்சரியமா இருக்கா வாங்க அது எப்படின்னு பாக்கலாம்!!
இன்றைய அவசர காலக்கட்டத்தில் எல்லாவற்றிற்கும் தீர்வும் அவசரமாகவே கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இதில் அவர்களை சொல்லியும் குற்றமில்லை. ஏனென்றால் இன்றைய சூழ்நிலை அப்படி இருக்கிறது . இந்த அழகு குறிப்பு விஷயத்திலும் அப்படி தான் உடனடி தீர்வை எதிர்பார்க்கிறார்கள் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இரண்டே நிமிடத்தில் முகத்தை பளிச்சென்று மாற்றக் கூடிய ஒரு எளிய அழகு குறிப்பு தகவலை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இந்த ஒரு விஷயத்தை செய்து வைத்துக் கொண்டால் போதும். தினமும் இரண்டு நிமிடம் மட்டும் செலவழித்தால் உங்கள் முகத்தை பளிச்சென்று மாற்றிக் கொள்ளலாம். அது மட்டும் இன்றி வெளியே எங்கே செல்ல வேண்டும் ரெண்டே நிமிஷம் முகத்தை பளிச்சென்று மாற்றிக் கொள்ள முடியும் என்றால் இனி பார்லர் போகும் சொல்லலாம் மிச்சம் தானே.
இதை செய்ய முதலில் பாதி பப்பாளி பழத்தை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் பாதி எலுமிச்சை பழம், ஒரு சின்ன உருளைக்கிழங்கு தோல் உரித்து, 1 டீஸ்பூன் அரிசி மாவு, 2 ஸ்பூன் ஆரஞ்சு தோல் பவுடர், இவற்றை எல்லாம் எடுத்து கொள்ளுங்கள்.
இப்போது எடுத்துக்கொண்ட இந்த பொருட்களை எல்லாம் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். பப்பாளிப்பழம், எலுமிச்சை சாறு உருளைக்கிழங்கு இவை எல்லாமே தண்ணீர் விடக் கூடியவை தான் எனவே தண்ணீர் அதிகம் தேவைப்படாது. உங்களுக்கு அரைக்க சிரமமாக இருந்தால் மட்டும் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து கொள்ளுங்கள். தண்ணீருக்கு பதிலாக ரோஸ் வாட்டர் கலந்து கொண்டாலும் நல்லது தான். இவை எல்லாம் அரைத்து முடித்து இந்த கலவை ஒரு திக்கான பழச்சாறு போல உங்களுக்கு கிடைக்கும்.
இதை அப்படியே பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து கொள்ளலாம். இல்லையென்றால் இதை ஐஸ்கிரீம் கியூப்பில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். இது 20 நாட்கள் வரை பயன்படுத்தலாம். ஐஸ்கிரீம் கியூப்பில் ஊற்றி வைத்து கொண்டால் பயன் படுத்த சுலபமாக இருக்கும்.
இதை உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ, காலை மாலை இரவு என எப்போது நேரம் கிடைக்கிறதோ அதுபோது இந்த ஐஸ் கியூபை எடுத்து உங்கள் முகத்தில் இரண்டு நிமிடம் வரை அப்படியே தேய்த்து மசாஜ் பண்ணிக் கொள்ளுங்கள். அதன் பிறகு சாதாரண தண்ணீர் கொண்டு முகத்தை தேய்ந்து சுத்தமாக கழுவி விடுங்கள் சோப்பு பயன்படுத்தக் கூடாது.
இதை முயற்சி செய்து பாருங்கள் உங்கள் முகம் பிரகாசமாக மாறிவிடும் எங்கள் வெளியில் கிளம்ப வேண்டும் என்றால் கூட அந்த நேரத்திற்கு உடனடியான முகப்பொலிவை இந்த முறையில் பெறலாம். நீங்களும் இது ட்ரை பண்ணி பாருங்க.