தேங்காய் நாரில் உள்ள மருத்துவ குணங்கள்

தேங்காய் நாரில் உள்ள மருத்துவ குணங்கள்

நமது வீட்டில் அன்றாட வாழ்க்கைக்கு சமையலில் தேங்காய் உபயோகிப்பது வழக்கம். நாம் உபயோகிக்கும் தேங்காய் மட்டைகளை அதன் பயன அறியாமலேயே தூக்கி எறிந்து விடுகிறோம். நாம் தூக்கி எறியும் தேங்காய் மட்டை ஆனது இயற்கையில் உரமாக பயன்படுவதுடன் நமது உடலுக்கும் அதிக பயனை அளிக்கிறது.

குறிப்பாக தேங்காய் இளநீர் போன்றவற்றை உண்டாலே நமது உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு பல நன்மைகள் உண்டாக்கும். தேங்காய் நாம் சாப்பிடும் பொழுது வயிற்றுப்புண் போன்றவற்றை குணப்படுத்த முடியும்.

அந்த வகையில் தேங்காய் மட்டையுடன் சிறிதளவு அரைத்த மஞ்சள் கலந்து வீக்கம் உள்ள இடத்தில் தடவினால் சட்டென்று வீக்கம் குறையும்.

அதேபோல தேங்காய் மட்டையின் மேலே உள்ள முடியை நன்றாக எரித்து அதில் வரும் பொடியை வைத்து அதனுடன் சிறிதளவு சோடா கலந்து பல் துலக்கும் பொழுது மஞ்சையாக இருக்கும் பற்கள் பல பலவென வெள்ளையாக மாறும்.

அதேபோல பலரும் முடி வெள்ளையாக இருக்கிறது என்று ஹேர்டை வாங்கி அடிப்பது வழக்கமாக வைத்திருப்பர். இதற்கு மாறாக தேங்காய் மட்டையை வாணலில் போட்டு நன்றாக சூடு செய்த பிறகு அதனை பொடி செய்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அந்த பொடியை தேங்காய் எண்ணெயில் கலந்து முடியில் தடவி வந்து ஒரு மணி நேரம் கழித்து குளித்து பார்த்தால் முடி கருமையாக இருக்கும்.

அதுமட்டுமின்றி பலருக்கும் உள்ள பிரச்சினை பைல்ஸ் தான். இந்த பிரச்சினையால் பலரும் அறுவை சிகிச்சை செய்வதும் உண்டு. அவ்வாறு இருப்பவர்கள் தேங்காய் மட்டையின் பொடியை தினந்தோறும் தண்ணீருடன் கலந்து காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பைல்ஸ் சம்பந்தமான பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்.