சுருக்கமில்லாத இளமையான முகத்தோற்றத்தை இயற்கையாக பெற ஜாதிக்காய்!!

சுருக்கமில்லாத இளமையான முகத்தோற்றத்தை இயற்கையாக  பெற ஜாதிக்காய்!!

சருமத்தில் உண்டாகும் நிறமாற்றம் மற்றும் நிறமிழப்பை குறைக்கும் தன்மை ஜாதிக்காய்க்கு உண்டு என்பது இதன் அற்புத நன்மைகளில் ஒன்றாகும். சருமம் மற்றும் கூந்தலுக்கு ஜாதிக்காய் சிறந்த நன்மைகளை வழங்குகிறது. 

சருமத்தில் உண்டாகும் கருந்திட்டுகள், நிறமிழப்பு, சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் புறஊதா கதிர்களால் உண்டாகும் கட்டிகள் , ஹார்மோன் மாற்றம், வயது முதிர்வு, மருத்துகளால் உண்டாகும் பக்க விளைவுகள் மற்றும் இதர சரும பிரச்சினைகளுக்கு ஜாதிக்காய் மிகச் சிறந்த தீர்வைத் தருகிறது. 

ஜாதிக்காய் சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைக்க உதவுகிறது. இதனால் சருமம் சோர்வடையாமல் தடுக்கிறது. மேலும் வயது முதிர்விற்கான அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. 

ஆர்கானிக் பால் அல்லது தேங்காய் பால் ஜாதிக்காய் தூள் இந்த இரண்டு மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலந்து முகத்திற்கு தடவவும். பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் சருமத்திற்கு மிருதுவான தன்மையை அளிக்க உதவுகிறது. உங்கள் சருமம் அழகாகவும் பொலிவாகும் மாறுகிறது. 

ஜாதிக்காயில் அன்டி ஆக்சிடென்ட் மற்றும் வயது முதிர்வைத் தடுக்கும் தன்மை உண்டு. மேலும் அணுக்களை சேதப்படுத்தும் கூறுகளுடன் இது போராட உதவுகிறது. 

முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றம் பெறவும், முகத்தில் இருக்கும் பருக்கள் மறையவும் ஜாதிக்காயை பாலுடன் குழைத்து முகத்திற்கு பயன்படுத்துவார்கள். 

எண்ணெய் சருமத்திற்கு ஜாதிக்காய் பேக் செய்ய 

தேவையான பொருட்கள் : 

ஜாதிக்காய் தூள், 
தேன்.

செய்முறை : 

இரண்டு மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலந்து உங்கள் சருமத்தில் தடவவும். பத்து நிமிடங்கள் இந்தக் கலவை உங்கள் முகத்தில் இருக்கட்டும். தேன் மற்றும் ஜாதிக்காய் ஆகிய இரண்டிற்கும் கிருமி எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இது சருமத்தை அழுக்கு மற்றும் கட்டிகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.