தங்க நிறத்துக்கு பூலாங்கிழங்கு எண்ணெய்

தங்க நிறத்துக்கு பூலாங்கிழங்கு எண்ணெய்

நம்முடைய முகம் மட்டுமல்ல உடம்பு முழுவதும் தங்கம் போல, சருமம் அப்படியே ஜொலி ஜொலிக்க ஒரு சின்ன குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். பார்ப்பதற்கு சினிமாவில் நடிப்பவர்களுடைய சருமம் எப்படி தங்க போல ஜொலிக்கிறது. அதே ஜொலி ஜொலிப்பை நாமும் பெற வேண்டும் என்றால் இந்த குறிப்பை பின்பற்றி பாருங்கள். சரும பிரச்சினைகள் அனைத்திற்கும் நிரந்தரமாக ஒரு தீர்வு நிச்சயம் கிடைக்கும். மிக மிக மலிவான முறையில் இயற்கையான பொருட்களை வைத்து தான் இந்த எண்ணெய் தயாரிக்க போகின்றோம்.

இந்த எண்ணேயை தயாரிக்க நமக்கு 3 வகையான மஞ்சள் தேவை. பூலாங்கிழங்கு, குண்டு மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், இந்த மூன்றுமே நாட்டு மருந்து கடைகளில் சுலபமாக கிடைக்கும். வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த மூன்று பொருட்களும் பொடியாகவும் கிடைக்கும். இதை பொடியாக வாங்கி எண்ணெய் தயாரிப்பதை விட கிழங்காக வாங்கி எண்ணெய் தயாரித்துக் கொள்ளும் போது அதன் மூலம் நல்ல பலன் நமக்கு கிடைக்கும்.

பூலான் கிழங்கு 1 டேபிள் ஸ்பூன், குண்டு மஞ்சள் – 1, கஸ்தூரி மஞ்சள் – 1 டேபிள் ஸ்பூன், என்ற அளவில் எடுத்து இந்த மூன்று பொருட்களையும் ஒரு சிறிய உரலில் போட்டு ஒன்றும் இரண்டுமாக கொரகொரப்பாக இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இடித்த இந்த மூன்று மஞ்சளையும் ஒரு கிண்ணத்தில் போட்டு 1/4 கப் அளவு தேங்காய் எண்ணெயை இதில் ஊற்றி இதை டபுள் பாய்லிங் மெதடில் ஐந்து நிமிடங்கள் வரை லேசாக சூடு செய்ய வேண்டும்.

உங்களுடைய வீட்டில் நன்றாக வெயில் அடிக்கும் என்றால் 2 மணி நேரம் இந்த எண்ணெயை வெயிலில் வைத்து சூடுபடுத்தி எடுத்தாலும் சரி. சூடான இந்த எண்ணெயை வெள்ளை காட்டன் துணியில் வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு கெட்டுப்போகாது.

3 மஞ்சளின் மகிமையும் சேர்ந்த இந்த எண்ணெயை முகம் மற்றும் கைகால் உடல் முழுவதும் தேய்த்து இரண்டு நிமிடம் போல லேசாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின்பு வழக்கம் போல நீங்கள் சோப்பு போட்டு குளித்துக் கொள்ளலாம்‌. ஆனால் சோப்பு போட்டு குளிப்பதை விட இயற்கையான குளியல் பொடி இருந்தால் அதை போட்டு குளிக்கலாம். அப்படி இல்லை என்றால் கடலை மாவு, பயத்த மாவு போன்ற பொருட்களை போட்டு தேய்த்துக் குளிக்கலாம். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த எண்ணெயை உங்களுடைய சருமத்தில் இந்த மஞ்சள் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வர உங்களுடைய சருமம் பொலிவாக மின்ன தொடங்கி விடும்.

தேங்காய் எண்ணெய் ஒரு சிலருடைய சருமத்திற்கு ஒத்து வராது. உங்களுடைய சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் செட் ஆகாது என்றால் ஆலிவ் ஆயில், பாதாம் ஆயில் போன்ற எண்ணெய்களை பயன்படுத்தலாம். உங்களுக்கு ரொம்பவும் எண்ணெய் வடியக்கூடிய சருமம் இருந்தால் கிரேப் சீட் (grape seed oil) ஆயிலை இந்த குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த எண்ணெய் ஆன்லைனில் நமக்கு கிடைக்கின்றது.