முக சருமத்தை பொலிவாக்கி, வெள்ளையாக்கி அழகாக மாற்ற பியூட்டி டிப்ஸ்...

முக சருமத்தை பொலிவாக்கி, வெள்ளையாக்கி அழகாக மாற்ற பியூட்டி டிப்ஸ்...

உங்க கருமை நிறத்தை மாற்றி வெள்ளையாக்க சூப்பர் டிப்ஸ். அப்புறம் பாருங்க உங்க முக அழகை பார்த்து நீங்களே அசந்து போவீங்க. இதை யூஸ் பண்ணிய பிறகு மறுபடியும் உங்க முகம் கருப்பாக மாற வாய்ப்பே இல்ல!!

இன்றைய காலக்கட்டத்தில் நிறத்தை பாதுகாப்பது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை. அதனால் தான் அழகு நிலையங்கள் அதிக அளவு பெருகி விட்டது. பெண்கள் ஆண்கள் என அனைவரும் அழகு நிலையத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்கள். இனி இந்த வெள்ளை நிறத்திற்காக பெரிதும் மெனக்கிட தேவையில்லை. இந்த குறிப்பில் இருக்கும் கீரிமை நீங்கள் தயார் செய்து கொண்டு உபயோகித்து வாருங்கள் உங்கள் நிறம் நிச்சயமாக மாறும் அதை எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

முதலில் கருமை நிறம் மறைந்து வெள்ளை ஆக மாற எந்த ரசாயனம் கலந்த தீமையும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் இந்த கிரீமில் இருக்கும் கெமிக்கல்கள் தற்காலிகமாக நிறத்தை மாற்றி நிரந்தரமாக உங்கள் அழகை பாதித்து விடும். இந்த இயற்கையான முறை கிரீமை தயாரிக்க ஒரு சில பொருட்கள் மட்டுமே தேவை அதை வைத்து முக அழகிற்கான இந்த கிரீமை தயார் செய்து கொள்ளலாம்.

இதற்கு முதலில் ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேன் எடுத்துக் கொள்ளுங்கள் . அத்துடன் அரை டீஸ்பூன் அளவிற்கு அரிசி மாவையும், அரை டீஸ்பூன் அளவிற்கு மஞ்சளையும், அரை டீஸ்பூன் ரோஸ் வாட்டர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். இது நல்ல பேஸ்ட் பதத்திற்கு வந்தவுடன் பாதாம் ஆயிலை சேர்த்துக் கொள்ளுங்கள். பாதாம் ஆயிலை முதலில் சேர்த்து கலந்தால் கிரீம் சரியாக கலந்து வராது. பாதாம் ஆயிலை சேர்த்து கடைசியாக ஆலுவேரா ஜெல் 2 ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். கடைகளில் விற்கும் ஆலுவேரா ஜெல்லை சேர்த்தால் பத்து நாட்களுக்கு மேல் கெடாமல் இருக்கும்.

ஆனால் இதை முழுவதுமாக இயற்கையான முறையில் செய்வதால் இயற்கையான ஆள்வேரா ஜெல்லையே சேர்த்துக் கொள்ளுங்கள். இவை எல்லாம் கலந்து பிறகு கடைசியாக விட்டமின் இ கேப்சூல் இரண்டை இதில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இதை ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால் கூட ஒன்றும் தவறில்லை உபயோகிக்கும் சிறிது நேரம் முன்பு எடுத்து உங்கள் முகத்தில் தேய்த்து லேசாக மசாஜ் செய்து கொள்ளுங்கள். ஆனால் இது ஒரு மணி நேரம் உங்கள் முகத்தில் இருக்க வேண்டும். எனவே இரவு படுக்கச் செல்லும் முன் இதை தேய்த்து கொண்டால் உங்கள் வேலை எல்லாம் முடித்து தூங்க செல்வதற்குள் இந்த கிரீம் உங்கள் முகத்தில் நன்றாக ஊறி விடும். அதன் பிறகு முகத்தை அலம்பி விட்டு உறங்க செல்லலாம்.

இதில் சேர்த்துக் இருக்கும் பொருட்கள் அனைத்துமே முகத்தில் உள்ள அழுக்கை நீக்கி நிறத்தை காக்க கூடியது தான். இதை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் நிச்சயமாக உங்கள் நிறத்தில் நல்ல மாற்றம் தெரியும் இந்த கிரீமை தயார் செய்து வைத்துக் கொண்டு உங்களை நிறமாக்கிக் கொள்ளுங்கள்.