தொட்டால் சிணுங்கி-யின் பயன்கள்

தொட்டால் சிணுங்கி-யின் பயன்கள்

மனிதர்களுக்கு மட்டும்தான் வெட்கம் வருமா என்ன? டன் கணக்கில் வெட்கப்படும் பெண்கள் இங்கு அதிகமானோர் உண்டு. பெண் பார்க்கச் சொல்லும் போது ஆண்கள்கூட வெட்கப் படத்தான் செய்கிறார்கள்.

ஆண்கள் வெட்கப்படும் தருணம் அவ்வளவு அழகு. 

இங்கே வெட்கப்படும் ஒரு செடியைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

நமஸ்காரி என இந்த மூலிகை அழைக்கப்படுகிறது. இது அதிகளவு காந்த சக்தி கொண்டது. அதனால்தான் தொடும்போது அதன் சக்தி மின்சாரம் போல பாய்கிறது. இதை 48 நாள்கள் போய் தொட்டால் உள் ஆற்றலும் பெருகும். முதலில் இந்த தொட்டால் சிணுங்கி வேர், இலை ஆகியவற்றை சிறிது சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதை நன்கு உலர்த்தி துணியில் சலித்து வைக்க வேண்டும். இந்த சூரணத்தை ஒரு டம்ளர் பாலுக்கு 15 கிராம் வீதம் குடித்து வர ஆசனவாயு பகுதியில் ஏற்படும் கடுப்பு, மூலச்சூடு, சிறுநீரக நோய்கள் போய்விடும்.

இதேபோல் உடலில் ஏற்படும் சொறி, சிரங்கு, படை, தேமல் ஆகியவற்றின் மீது தொட்டால்சிணுங்கி இலையின் சாறைத் தடவினால் போய்விடும். சிலருக்கு மாதவிடாயின் போது இரத்தப்போக்கு அதிகளவில் இருக்கும்.

அவர்கள் தொட்டால் சிணுங்கி இலையைப் பறித்து நன்றாக சுத்தம் செய்து, அந்த இலையோடு கொஞ்சம் சின்ன வெங்காயம், சீரகத்தை சேர்த்து அரைத்து மோரோடு கலந்து சாப்பிட்டால் அது குணமாகும்.

இதேபோல் தொட்டால் சிணுங்கி இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக அரைக்க வேண்டும். இதை மோரில் கலந்து 3 நாள்கள் சாப்பிட்டால் வயிற்றுக்கடுப்பு குணமாகும். உடலும் குளிர்ச்சியாகும்.

அப்புறமென்ன இனி எங்கே தொட்டால் சிணுங்கியை பார்த்தாலும் மிஸ் பண்ணிடாதீங்க.