குச்சி போல ஒல்லியா இருக்கீங்களா? இனி தயிரை இப்படி சாப்பிட்டு பாருங்கள்!!

குச்சி போல ஒல்லியா இருக்கீங்களா? இனி தயிரை இப்படி சாப்பிட்டு பாருங்கள்!!

உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் அதனை குறைப்பதற்கு ஏராளமான வழிமுறைகள் உள்ளது. ஆனால் பலரால் என்னதான் சாப்பிட்டாலும் உடல் எடையை அதிகரிக்கவே முடியாது. அவர்களுக்கானது தான் இந்த பதிவு. உடல் எடையை அதிகரிக்க வேண்டுமென்றால் இதில் வரும் உணவு முறையை தொடர்ந்து இரண்டு வாரம் பின்பற்றினாலே போதும். அதில் முதல் படியாக இருப்பது தயிர். இது உணவை ஜீரணிக்கும் தன்மை உடையது.

பாலைவிட பாலில் இருந்து வரும் இந்த தயிருக்கு தான் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது. மேலும் இதில் விட்டமின் பி12 புரோட்டின் போன்றவை உள்ளது. உடலில் ஏற்படும் ஹார்மோன் ரீதியான பிரச்சினைகளால் தான் உடல் எடை கூடுதல் மற்றும் உடல் எடை குறைதல் காணப்படும். அந்த ஹார்மோன் பிரச்சனைகளை சரி செய்ய இந்த தயிர் நல்ல வழிவகுக்கும். இதற்கு அடுத்தபடியாக இருப்பது நாட்டு சர்க்கரை. இதுவும் செரிமானம் மற்றும் அது சம்பந்தமான பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வளிக்கும். தினமும் நாட்டு சர்க்கரை மற்றும் தயிர் சாப்பிட்டு வர உடல் எடை கூடும். அதீத பசி எடுக்கும் தன்மையை அதிகரிக்கும்.