பச்சை பட்டாணியை தொடர்ந்து சாப்பிட்டால் என்ன நன்மைகள்...?

பச்சை பட்டாணியை தொடர்ந்து சாப்பிட்டால் என்ன நன்மைகள்...?

நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது பச்சை பட்டாணி. 

பச்சைப் பட்டாணியில் பாஸ்பரஸ் நிறைந்து காணப்படுகிறது.

பச்சை பட்டாணியில் ஆண்டி ஆக்சிடண்டுகள் நிரம்பியுள்ளது.
இது இதயத்திற்கு தேவையான ரத்தத்தை தடையின்றி சீராக செல்ல உதவும்.

பச்சை பட்டாணியில் வைட்டமின் கே சத்து மிகுதியாக உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு மூளை செல்கள் புத்துணர்வு பெற்று ஞாபகத் திறன் அதிகரிக்கும், இது அல்சைமர் நோயை தடுக்கும்.

பச்சை பட்டாணியில் ரத்தத்தில் இருக்கும் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சத்துகள் நிறைந்துள்ளது. பட்டாணியை தொடர்ந்து
சாப்பிடுபவர்களுக்கு ரத்த சோகை பிரச்சினை ஏற்படாது.

பச்சை பட்டாணி அதிக அளவு ஃபோலேட்டுகளைக் கொண்டுள்ளது.
ஃபோலேட்டுகள் பிறந்த குழந்தைகளில் நரம்புக் குழாய் சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.

அதிக புரோடீன் மற்றும் நார்ச்சத்து
நிறைந்த பச்சை பட்டாணிகள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.