நொடிப் பொழுதில் பல் வலியை போக்கும் நாட்டு வைத்தியம்:! அனுபவ வைத்தியம்!!

நொடிப் பொழுதில் பல் வலியை போக்கும் நாட்டு வைத்தியம்:! அனுபவ வைத்தியம்!!

தீராத பல்வலி உள்ளவர்கள் நாட்டு பெருங்காயம் எனப்படும் பால் பெருங்காய தூளை இந்த முறையில் பயன்படுத்தினாலே போதும் நொடிப் பொழுதில் பற்களில் உள்ள புழுக்கள் செத்து பல் வலியிலிருந்து நிரந்தர தீர்வினை பெறலாம்.வாங்க நாட்டு பெருங்காயத்தை எப்படி வாங்குவது மற்றும் தூள் தயாரிக்கும் முறை, இதனை சொத்தை பல்லுக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பதனை பற்றி இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

முதலில் பெருங்காயத்தைப் தேர்ந்தெடுக்கும் முறை!

நாம் டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தூள் பெருங்காயம் மனித உடலுக்கு கேடு விளைவிக்கும் ஒரு கெமிக்கலாகும்.

பால் பெருங்காயம் என்று சொல்லக்கூடிய பெருங்காயம்தான் உடலுக்கு பல நன்மைகளை பயக்கிறது. இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

பெருங்காயப் பொடி தயாரிக்கும் முறை!

நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கி வரும் பெருங்காய கட்டியை சிறிது சிறிதாக உடைத்து,இதனை ஒரு வாணலியில் போட்டு நன்றாக சூடுபடுத்திக் கொள்ள வேண்டும். பின்பு சிறிது நேரம் ஆற விட்டு இதனை நன்றாக பொடி செய்து கண்ணாடி குப்பியில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

கண்ணாடி பாட்டிலில் போடுவதற்கு காரணம், பெருங்காயத் தூளின் வாசனை மற்றும் மருத்துவம் குணம் மாறாமல் இருக்கும்.மேலும் இதனை நீண்ட நாட்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த பொடியை சொத்தைப் பல்லுக்கு எவ்வாறு பயன்படுத்துவது?

பொடி செய்து வைத்த பெருங்காயத் தூளை வானிலில் போட்டு சிறிது சூடுபடுத்தி அந்தத் தூளை சிறிதளவு சூட்டுடன் எடுத்து சொத்தைப்பல் உள்ள இடத்தில் வைத்தால் புழுக்கள் செத்து பல்வலி நொடிப்பொழுதில் குணமாகிவிடும்.