சட்டுனு எடை குறைக்கனுமா? இந்த ஜூஸை தவறாமல் குடிச்சாலே போதும்!!

சட்டுனு எடை குறைக்கனுமா? இந்த ஜூஸை தவறாமல் குடிச்சாலே போதும்!!

இன்றைக்கு பலரும் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சினை தான் உடல் எடை.

சிலருக்கு உடல் எடை அதிகமாக இருப்பதால் மூச்சு பிரச்சனை, அதிகமாக எந்த வேலைகளும் செய்ய முடியாது. உடல் எடை கூடுவதனால் டயட் என்ற பெயரில் உணவு முறைகளை சரியாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

இதனால் கூட உடலில் பின் விளைவுகள் பல ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் எடையினை எளிமையான முறையில் குறைக்கலாம்.

அதற்கு இயற்கை பானங்கள் பெரிதும் உதவுகின்றது. தற்போது அதில் ஒன்றான சூப்பரான பானம் ஒன்றை பார்ப்போம்.  

தேவையான பொருட்கள் :

எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்.
வெல்லம் – ஒரு டீஸ்பூன்.
வெதுப்பான நீர் – ஒரு டம்ளர்.

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி வெதுவெதுப்பாக சூடாக்கி இறக்கி கொள்ள வேண்டும்.

வெதுவெதுப்பான நீரில் வெல்லத்தை சேர்த்து நன்கு கலந்து பின் அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்தால் பானம் தயாராகிவிடும்.

தினமும் காலையில் எழுந்ததும் காபி, டீக்கு பதிலாக வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடித்து வந்தால் உடல் எடையை வேகமாக குறைக்க முடியும்.