முட்டைகோஸ் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ?

முட்டைகோஸ் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? 

நம்மை வியக்கவைக்கும் ஆரோக்கியமான தகவல்!!

ஊதா நிறத்தில் உள்ள முட்டைகோஸை பர்ப்பிள் கேப்பேஜ் என்றும் ரெட் கேப்பேஜ் என்றும் ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். ஆனால் இந்த ஊதா நிறத்தில் உள்ள முட்டை கோஸை நாம் விரும்புவதில்லை.

அனால் இந்த ஊதா நிற முட்டைகோஸின் ஸ்பெஷலே இதை நீங்கள் எப்படி வேண்டு மானாலும் உங்களுக்குப் பிடித்த வகையில் சாப்பிட முடியும். பச்சையாக சாலட் வடிவிலும் சாப்பிடலாம். சமைத்தும் சாப்பிடலாம். வினிகர் சேர்த்து புளிக்க வைத்து நொதிக்க வைக்கப்பட்டு புரோபயோடிக்காக மாற்றியும் சாப்பிடலாம். இப்படி ஏதாவது ஒரு வகையில் எடுத்துக் கொள்ளும்போது பல ஆரோக்கிய பலன்களை பெற முடியும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகின்றது.

ஊதா நிற முட்டைகோஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள் :

ஒரு சிறிய கப் அளவு அதாவது 90 கிராம் ஊதா நிற முட்டைகோஸில் இருந்து கீழ்வரும் அளவு ஊட்டச்சத்துக்களை நம்மால் பெற முடியும். அதோடு கலோரிகளும் மிகக் குறைவு. வெறும் இருபத்தியெட்டு கலோரிகள் மட்டுமே இதில் இருக்கின்றன.

புரதச்சத்து – ஒரு கிராம்

கார்போ1ட்ரேட் – ஏழு கிராம்

நார்ச்சத்து – இரண்டு கிராம்

வைட்டமின் சி – 50.4 மி.கி

வைட்டமின் கே – தினசரி தேவையில் 28 சதவீதம்

வைட்டமின் பி6 – தினசரி தேவையில் 11 சதவீதம்

வைட்டமின் ஏ – தினசரி தேவையில் ஆறு சதவீதம்

பொட்டாசியம் – தினசரி தேவையில் ஐந்து சதவீதம்

தையமின் – தினசரி தேவையில் ஐந்து சதவீதம்

ரிபோஃபிளேவின் – தினசரி தேவையில் ஐந்து சதவீதம்

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊதா முட்டைகோஸ்

ஊதா நிறத்தில் உள்ள முட்டைக்கோஸ் நம்முடைய இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

ஊதா நிற முட்டைக்கோஸின் சிறப்பியல்பு அதற்கு நிறத்தை அளிக்கும் ஃபிளாவனாய்டுகள், ஆன்டி – ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அந்தோசயினின் ஆகியவை இதில் அதிகமாக இருக்கின்றன.

ஆந்தோசயனின்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும்போது குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்க்கான குறைந்த ஆபத்து குறையும்.

ஊதா நிற முட்டைக்கோஸில் தாமிரம் மற்றும் பித்தளை உள்ளிட்ட உலோகங்களின் சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன.

இந்த ஊதா நிற காய்கறியின் மிக முக்கியக் கூறே அதிலுள்ள சல்ஃபோராபேன் எனப்படும் பைட்டோ கெமிக்கல் தான். இந்த சல்ஃபோராபேன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டவை. அதனால் அழற்சி மற்றும் வீக்கம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுகிறது.

குடல் ஆரோக்கியத்துக்கு ஊதா முட்டைகோஸ் :

ஊதா நிற முட்டைகோஸில் அதிக அளவிலான நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதுவும் கரையா நார்ச்சத்துக்களை அதிகமாகக் கொண்டிருக்கிறது. அதனால் இது ஜீரண சக்தியை முறைப்படுத்துகிறது.

இந்த கரையா நார்ச்சத்துக்கள் ப்ரீ-பயோடிக்காக செயல்படுகின்றன. அதாவது நார்ச்சத்துக்களில் பல வகைகள் உண்டு.

இந்த பர்ப்பிள் முட்டைகோஸில் உள்ள ப்ரீ- பயோடிக் எனும் கரையா நார்ச்சத்துக்கள் குடலில் இருக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு சிறந்த எரிபொருளாகப் பயன்படுகிறது. இதனால் குடல் மற்றும் வயிறு ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

எலும்புகளை வலுவாக்கும் ஊதா முட்டைகோஸ் :

ஊதா நிற முட்டைகோஸில் மிக அதிக அளவில் வைட்டமின் கே நிறைந்திருக்கிறது.

அதோடு மக்னீசியம், கால்சியம் மற்றும் ஜிங்க் ஆகியவையும் இந்த முட்டைகோஸில் இருக்கின்றன. அதனால் இந்த முட்டைகோஸை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் இது எலுமு்புகளை உறுதியாக வைத்திருக்கச் செய்யும்.

புற்றுநோயை தடுக்கும் ஊதா முட்டைகோஸ் :

ஊதா நிற முட்டைகோஸ் சில வகை புற்றுநோய்களை எதிர்க்கும் தன்மை கொண்டது. குறிப்பாக முட்டைகோஸ் போன்ற இலைவடிவ காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பதினெட்டு சதவீதம் அளவுக்கு பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து குறைவதாக நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசன் (National Library Of Medicine) வெளியிட்டுள்ள Cruciferous vegetables intake and the risk of colorectal cancer: a meta-analysis of observational studies என்னும் ஆய்வுக் கட்டுரையில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.