இந்த பொடியை தினமும் காலையில் நீரில் கலந்து குடிச்சு பாருங்க! தொப்பை காணாமல் போயிடுமாம்!!

இந்த பொடியை தினமும் காலையில் நீரில் கலந்து குடிச்சு பாருங்க! தொப்பை காணாமல் போயிடுமாம்!!

பொதுவாக சோம்பு, சீரகம், ஓமம் மற்றும் பெருங்காயம் போன்றவை நம் வீட்டு சமையலறையில் காணப்படும் மசாலா பொருட்களாகும்.

இந்த மசாலா பொருட்கள் அனைத்திலும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தேவையான மருத்துவ பண்புகள் ஏராளமாக நிறைந்துள்ளன.

இந்த நான்கு பொருட்களும் ஆயுர்வேதத்தில் மருந்துகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக இந்த நான்கு பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆயுர்வேத பொடி உடல் எடையை வேகமாக குறைக்க பெரிதும் உதவி புரியும். தற்போது இந்த பொடியை எப்படி தயாரிப்பது? என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

பொடியைத் தயாரிப்பது எப்படி?

சீரகம், சோம்பு, ஓமம் மற்றும் பெருங்காயத்தை சரிசம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

• பின் அதை லேசாக வறுத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு சேமித்து வைக்க வேண்டும்.  

• ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் அரைத்த ஆயுர்வேத பொடியை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

• பின் அந்த நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். இது தவிர இந்த பொடியை, தினமும் சாப்பிடும் சாலட்டின் மீதும் தூவி சாப்பிடலாம்.  

எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது?

• இந்த ஆயுர்வேத பொடி செரிமானத்தை மேம்படுத்தும். 

• ஆயுர்வேத பொடியை உட்கொள்வதன் மூலம், உடலின் மெட்டபாலிசம் சீராக இருக்கும். 

° இந்த பொடி இது பசியைக் கட்டுப்படுத்த உதவுவதால், கண்ட நேரத்தில் கண்ட உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைத்து, அதிக கலோரிகளை உட்கொள்வதைத் தடுக்கிறது.

° பொடியை தினமும் உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு வேகமாக குறைந்து, விரைவில் சிக்கென்ற உடலைப் பெற முடியும்.

° நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்து, உடல் எடையைக் குறைக்க விரும்பினால், இந்த ஆயுர்வேத பொடி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.