கதவிடுக்கில் விரல் மாட்டினால் வலி ஓவரா இருக்குமே.. உடனடியா இந்த வைத்தியம் செய்யுங்க!!

கதவிடுக்கில் விரல் மாட்டினால் வலி ஓவரா இருக்குமே.. உடனடியா இந்த வைத்தியம் செய்யுங்க!!

அடிபடுவது சகஜம் தான். ஆனால் கைவிரல்களில் காயம் ஏற்பட்டால் வலியை வார்த்தையால் சொல்ல முடியாது. உடனடி சிகிச்சையாக செய்ய வேண்டியது என்ன என்பதை பார்க்கலாம்.

நாம் எதிர்பாராத சில சமயங்களில் நம் கை விரல்களில் காயம் ஏற்படுவது உண்டு. உதாரணமாக ஒரு கைப்பந்து விளையாடும் போதோ அல்லது கதவை மூடும் போதோ தெரியாமல் நம் கை விரல்களில் காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இது போன்ற விபத்துக்களால் விரலில் வீக்கம் மற்றும் சிவத்தல் ஏற்படலாம். இப்படி ஏற்படும் விபத்துக்களின் போது விரல்களில் உள்ள தசைநார்களில் கிழிசல் உண்டாகிறது. இதனால் பயங்கர வலி ஏற்படுகிறது.

சில சமயங்களில் தசை நார்கள் சேதமடைந்து எலும்பு முறிவை உண்டாக்கலாம். இதனால் வலி, விரல்களில் இறுக்கம், பொருட்களை பிடிப்பதில் சிரமம் போன்றவை ஏற்படுகிறது. இப்படி விரல்களில் ஏற்படும் அடியை எப்படி வீட்டு வைத்திய முறைகள் மூலம் சரி செய்யலாம் என அறிந்து கொள்வோம்.

 விரல்களில் ஏற்படும் காயத்தால் உண்டாகும் அறிகுறிகள் :

துடி துடிக்கும் அளவுக்கு வலி அதிகமாக இருக்கும்.

விரலில் ஏற்படும் வீக்கம் நாட்கள் அல்லது வாரங்கள் வரை கூட நீடிக்கும். விரல்கள் உடைந்து போயிருந்தால் அறிகுறிகள் மிக மோசமாக இருக்கும்.

விரல்கள் காயமடைய காரணங்கள் :

பாதிக்கப்பட்ட விரலில் வலி உண்டாதல்
பொருட்களை பிடிப்பதில் சிரமம் ஏற்படுதல்

காயமடைந்த விரல் சிவந்து போதல் மற்றும் வீக்கம்

விரல் உடைந்து போயிருந்தால் ஏற்படும் அறிகுறிகள் :

திடீரென ஏற்படும் அடியால் உங்கள் விரல் பாதியாக வளைந்திருக்கும். இந்த மூட்டு ப்ராக்ஸிமல் இன்டர்ஃபாலஞ்சியல் மூட்டு (PIP) என்று குறிப்பிடப்படு கிறது. இதனால் எலும்புகளை இணைக்கும் தசைநார்கள் கிழிகின்றன. விரல்களில் ஏற்பட்ட காயத்தை விரைவில் சரி செய்ய இயற்கை வழிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

விரல் காயங்களுக்கு ஐஸ் பேக் ஒத்தடம் :

விரலில் காயம் ஏற்பட்ட உடனேயே ஐஸ் பேக் ஒத்தடம் கொடுத்து வரலாம். இந்த ஐஸ் பேக் ஒத்தடத்தை 15-20 நிமிடங்கள் வைத்து வரலாம்.

ஐஸ் பேக் ஒத்தடம் வலியை குறைக்க உதவுகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு விளைவுகளால் வீக்கத்தை குறைக்க முடியும்.மேலும் இரத்த ஓட்டத்தை சீராக்கி காயத்தை தீவிரமாக்காமலும் தடுக்க முடியும்.

விரல் காயங்களுக்கு எப்சம் உப்பு :

ஒரு பெரிய டாப்பில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி அதில் ஒரு தேக்கரண்டி எப்சம் உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அடிபட்ட விரலை அந்த தண்ணீரில் 15-20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இதை தினமும் பல முறை செய்து வருவது நல்லது.

எப்சம் உப்பில் உள்ள மக்னீசியம் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது விரல்களில் ஏற்படும் வீக்கம், வலி இவற்றை தணிக்க உதவுகிறது.

விரல் காயங்களுக்கு கற்றாழை ஜெல் :

1-2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவ வேண்டும். 15-20 நிமிடங்கள் உலர விட வேண்டும். இதை தினமும் பல முறை செய்து வரலாம்.

கற்றாழை ஜெல்லில் ஏற்படும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் பாதிக்கப்பட்ட விரல்களில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை போக்க உதவுகிறது.

விரல் காயங்களுக்கு ஆப்பிள் சிடார் வினிகர் :

1 தேக்கரண்டி மஞ்சள் தூளுடன் 4 தேக்கரண்டி தேங்காயெண்ணெய் சேர்த்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விரல்களில் இந்த பேஸ்ட்டை தடவி 15-20 நிமிடங்கள் விட வேண்டும்.

உலர்ந்த பிறகு தண்ணீரில் கழுவிக் கொள்ளுங்கள். இதை தினமும் 1-2 முறை செய்து வரலாம். மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற பொருள் அழற்சி எதிர்ப்பு மற்றும் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது விரல்களில் வலி, வீக்கம் மற்றும் சிவத்தல் பிரச்சினைகளை போக்க உதவுகிறது.

விரல் காயங்களுக்கு லாவெண்டர் எண்ணெய் :

1 தேக்கரண்டி ஆப்பிள் சிடார் வினிகரை 1 தேக்கரண்டி தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு சுத்தமான காட்டன் பஞ்சை அதில் நனைத்து அடிபட்ட இடத்தில் தடவ வேண்டும். பிறகு 15- 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இதை தினமும் 2-3 முறை செய்து வரலாம். ஆப்பிள் சிடார் வினிகரின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கம் மற்றும் வலிகளை போக்க உதவுகிறது.

விரல் காயங்களுக்கு மஞ்சள் தூள் :

2 தேக்கரண்டி தேங்காயெண்ணெயுடன் 3 சொட்டுகள் லாவெண்டர் எண் ணெயை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த எண்ணெயை விரல்களில் தடவி மசாஜ் செய்து வாருங்கள். ஒரு நாளைக்கு 1-2 முறை செய்து வரலாம்.

லாவெண்டர் எண்ணெய் வலி நிவாரணியாக செயல்படுகிறது. இந்த எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் விரலில் ஏற்படும் வீக்கம் மற்றும் அழற்சியை போக்க உதவுகிறது.

விரல் காயங்களுக்கு தடுப்பு முறைகள் :

பாதிக்கப்பட்ட விரல் சரியாகும் வரை ஓய்வை மேற்கொள்ள வேண்டும்.

காயத்தை மோசமாக்கும் விளையாட்டு மற்றும் பிற உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிருங்கள். நன்றாக ஓய்வெடுக்க வேண்டும்.

முழுவதுமாக குணமாகும் வரை விரலில் கட்டு போட்டுக் கொள்ளவும்.

ஓரளவு குணமானதும் விரலுக்கு சில சிறிய பயிற்சிகளை கொடுக்கலாம்.

விரலை அசைக்காமல் வைத்திருந்தால் தான் வலி சரியாகும் என்று நினைத்து சிலர் அசைக்கவே மாட்டார்கள். ஆனால் அது தவறானது விரலில் சில பயிற்சிகளை செய்ய வேண்டும்.

 சிலருக்கு உள் காயம் இருக்கும் ரத்தம் இல்லாமல் காயம் உண்டாகியிருக்கும். இந்த வலி தீவிரமாக இருக்கும்.

இவையெல்லாம் செய்த பிறகும் வலி தீவிரமாக இருந்தால் தவிர்க்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.