மழைக்கால நோய்களில் இருந்து மீள மூலிகை டீ... எப்படி தயாரிப்பது?

மழைக்கால நோய்களில் இருந்து மீள மூலிகை டீ... எப்படி தயாரிப்பது?

மழைக்காலத்தில் எப்போதும் ஏதாவது சூடாக குடித்துக் கொணடோ அல்லது சாப்பிட்டுக் கொண்டோ இருக்க வேண்டும் என்று நினைப்போம். அதுமட்டுமின்றி மழைக்காலத்தில் ஏற்படும் குடிநீர் மாசுபாடு மற்றும் கொசு போன்ற பிரச்சினைகளால் பல்வேறு பருவ கால நோய்கள் உண்டாகும். இவற்றை சமாளிக்க ஆரோக்கியமான மூலிகைகள் கொண்ட மூலிகை எடுத்துக் கொள்வது நல்லது.

இந்தியாவின் பிரபல சமையல்கலை நிபுணரான சஞ்சீவ் கபூர் பல்வேறு ஆரோக்கியமான மற்றும் சுவையான ரெசிபிகளை தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அப்படி அவர் சமீபத்தில் பல்வேறு மூலிகைகள் சேர்த்து பருவ கால நோய்களை சமாளிப்பதற்காக ஒரு டீயை பகிர்ந்திருக்கிறார்.

​மழைக்காலத்தில் மூலிகை டீ குடிப்பதன் நன்மைகள் :

பொதுவாக காஃபைன் நிறைந்த பானங்களை எடுத்துக் கொள்கிறவர்கள் குறைந்தபட்சம் மழைக்காலத்தில் மட்டுமாவது காஃபைன் நிறைந்த பானங்களைத் தவிர்த்து விட்டு, மூலிகைகள் சேர்க்கப்பட்ட இயற்கை பானங்களை எடுத்துக் கொள்ளலாம். இது ஏற்கனவே காஃபைன் எடுத்துக் கொண்டதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அறிகுறிகளைத் தவிர்க்க உதவும்.

மூலிகை டீயில் சேர்க்கப்படும் பல்வேறு வகையான மூலிகைகள் மற்றும் மசாலா டீயில் போதிய ஊட்டச்சத்துக்களையும் நம்மால் பெற முடியும்.

இதைதான் கிராமங்களில் கஷாயம் என்ற பெயரில்உடல்நல குறைபாடுகள் ஏற்படும்போது எடுத்துக் கொள்கிறோம்.
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, நம்முடைய உடலையும் குடல் மற்றும் சருமம் போன்றவற்றை சுத்தம் செய்யவும் உதவுகிறது.

சஞ்சீவ் கபூரின் மூலிகை டீ :

இந்தியாவில் உள்ள பிரபல சமையல் நிபுணரான சஞ்சீவ் கபூர் ஒரு ஸ்பெஷல் மூலிகை டீயை பகிர்ந்திருக்கிறார். அதில் லெமன் கிராஸ், எலுமிச்சை, துளசி, ஏலக்காய், கிராம்பு போன்ற பல்வேறு மூலிகைகளை பயன்படுத்தி இருக்கிறார்.

இது காலங்காலமாக நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தி வந்த பாரம்பரியமான மூலிகைகள். சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவை பருவ காலங்களில் ஏற்படும் தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். நோய்க்கிருமிகளை தாக்கி அழிக்கும். இதிலுள்ள ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் நோய்கள் வராமல் தடுக்கும். அதுமட்டுமின்றி உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.

மூலிகை டீ செய்முறை :

இரண்டு கப் தண்ணீரை நன்கு கொதிக்க வேண்டும். நன்கு கொதித்த நீரில் கிராம்பு, இலவங்கப்பட்டை, லெமன் கிராஸ், துளசி, ஏலக்காய், இஞ்சி போன்றவற்றை லேசாகத் தட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சிறிது நேரம் இதை மூடி போட்டு மூடி வைத்து விட வேண்டும். குடிக்கிற அளவுக்கு வெதுவெதுப்பான நிலைக்கு வரும்போது அதை வடிகட்டி, அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்தால் பருவ கால நோய்களில் இருந்து விடுபட முடியும்.