டயரியா நிக்கவே இல்லையா? இந்த 5 பொருள்ல ஒண்ணு சாப்பிடுங்க... நின்னுடும்...
டயரியா நிக்கவே இல்லையா? இந்த 5 பொருள்ல ஒண்ணு சாப்பிடுங்க... நின்னுடும்...
டயரியா பிரச்சினை வந்தால் நம்முடைய ஒட்டுமொத்த உடலும் வலுவின்றி சோர்வாகிவிடும். அதிலிருந்து மீள்வதற்கு பெரும் போராட்டமே நடத்த வேண்டியிருக்கும். பொதுவாக டயரியா ஏற்பட்டால் பிரெட், பிஸ்கட் போன்றவற்றை சாப்பிட்டு அதை தடுத்து உடனடியாக தடுத்து நிறுத்த முயற்சி செய்வார்கள். ஆனால் டயரியாவை நிறுத்துவது மட்டுமே பிரச்சினை இல்லை. அதிலிருந்து மீள்வதற்கான ஊட்டச்சத்தும் எனர்ஜியும் சேர்ந்து உடலுக்கு தேவைப்படும். அதை கீழ்வரும் ஆரோக்கிய உணவுகளின் மூலம் செய்யலாம்.
நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் பிற மருந்துகள் எடுத்துக் கொள்வது, ஆரோக்கியமற்ற உணவு, ஊட்டச்சத்து குறைபாடு என டயரியா (எ) வயிற்றுப் போக்கு உண்டாக பல காரணங்கள் இருக்கின்றன. இவற்றை நம்முடைய வீட்டிலுள்ள சில எளிய உணவுப் பொருள்களை வைத்தே சரிசெய்து கொள்ள முடியும். அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
டயரியாவை கட்டுப்படுத்தும் இஞ்சி டீ :
இஞ்சி டீ டயரியாவை கட்டுப்படுத்த மிகச்சிறந்த தீர்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இஞ்சியில் ஆன்டி - இன்பிளமேட்டரி, ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் நிறைந்திருப்பதால் இது ஜீரணசக்தியை மேம்படுத்தி டயரியா போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க உதவுகிறது.
அதுமட்டுமின்றி அஜீரணக் கோளாறு மற்றும் வயிறு உப்பசம் ஆகியவற்றோடு அடிவயிற்றுக் கோளாறுகள் பலவற்றையும் தீர்க்க உதவுகிறது.
டயரியாவை கட்டுப்படுத்தும் சாமந்தி டீ :
சாமந்தி டீ குடிப்பது ஜீரண சக்தியை மேம்படுத்த உதவும். அஜீரணக் கோளாறு, வயிறு உப்பசம் ஆகிய பிரச்சினைகளை சரிசெய்து, உண்ணும் உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் முறையாக உறிஞ்சிக் கொள்ள உதவுகிறது.
உலர்ந்த சாமந்தி பூவில் அதிக அளவிலான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் உள்ளன. இவை உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
முறையாக ஜீரணம் ஆகாததாலேயே டயரியா, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன. அதுபோன்ற சமயங்களில் இந்த உலர்ந்த சாமந்தி டீயை எடுத்துக் கொள்வதன் மூலம் டயரியாவை கட்டுப்படுத்த முடியும்.
டயரியாவை கட்டுப்படுத்தும் ஆப்பிள் சீடர் வினிகர் :
டயரியாவால் பாதிக்கப்பட்ட சமயத்தில் ஆப்பிள் சிடார் வினிகர் சிறிதளவு எடுத்துக் கொள்ளும்போது டயரியா கட்டுக்குள் வரும்.
ஆனால் மிகக் குறைந்த அளவில் மட்டுமே வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். அதிகமாக எடுத்துக் கொண்டால் அது எதிர்மறையான விளைவைக் கொடுக்கும்.
இதிலுள்ள ஆன்டி - செப்டிக் பண்புகள் பாக்டீரியா தொற்றுக்களால் ஏற்படும் பாதிப்பை சரிசெய்து, டயரியா மற்றும் வாந்தி போன்ற பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தும்.
டயரியாவை கட்டுப்படுத்தும் வெந்தயம் :
வெந்தயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன என்பது நமக்கு தெரியும். வெந்தயம் டயரியாவை கட்டுப்படுத்துவதற்கு மிகச்சிறந்த இயற்கையாக தீர்வாக அமையும்.
வெந்தயத்தில் உள்ள வழுவழுப்புத் தன்மை டயரியாவை கட்டுப்படுத்தும். அதோடு உடலுக்குப் போதிய அளவு ஆன்டி - ஆக்சிடண்ட்டுகளைக் கொடுக்கிறது.
டயரியாவை கட்டுப்படுத்தும் கேரட் :
கேரட்டில் அதிக அளவிலான ஆன்டி- செப்டிக் பண்புகள் இருக்கின்றன. அதனால் டயேரியா போன்ற பாக்ரேியா தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பை அளிக்கிறது.
டயரியாவால் அவதிப்படும் போது கேரட்டை சூப்பாக செய்து சாப்பிட்டால் டயேரியா நிற்கும். அதோடு டயேரியா ஏற்படும் சமயங்களில் உண்டாகும் உடல் சோர்வை போக்கவும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கேரட் வழங்குகிறது.