சிறுநீர் எரிச்சலுடன் சொட்டு சொட்டாக போகிறதா?

சிறுநீர் எரிச்சலுடன் சொட்டு சொட்டாக போகிறதா? 
நீர்க்கடுப்பு 5 நிமிடத்தில் மாயமாய் மறைய சின்ன வெங்காயம் போதுமே!!

சில சமயங்களில் உடல் சூடு காரணமாக உடலில் இருக்கும் நீர் வற்றி சிறுநீர் வருவதில் தடை உண்டாகிறது. இதனால் எரிச்சலும், வலியும் அதிகரிக்கும். சிறுநீர் கழிக்கும் போது சரியாக வராமல் சொட்டு சொட்டாக போக ஆரம்பிக்கும். இதை அப்படியே கவனிக்காமல் விட்டு விட்டால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகவும் வாய்ப்புகள் உண்டு எனவே சிறுநீரக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய இந்த நீர்க்கடுப்பு பிரச்சினையை ரொம்ப சுலபமாக ஐந்தே நிமிடத்தில் மாயமாய் மறைய செய்ய உங்கள் வீட்டில் இந்த ஒரு பொருள் இருந்தால் போதும். அது என்ன? எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பது போன்ற ஆரோக்கிய தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

சிறுநீரக எரிச்சல், உடல் சூடு காரணமாகவும், தொற்று காரணமாகவும் ஏற்படுகிறது. சில சமயங்களில் பொதுக் கழிப்பறையை பயன்படுத்துவதன் மூலமும், சுத்தமின்மை காரணமாகவும் சிறுநீர் வரும் பாதையில் தொற்றுகள் ஏற்படுகிறது. இதை யூரினரி இன்பெக்சன் என்று கூறுவார்கள். இதனால் சிறுநீர் பாதையில் வீக்கம் உண்டாகி சிறுநீர் வரும் பொழுது வலி ஏற்படுகிறது. சிறுநீர் வருவதிலும் இடையூறுகள் ஏற்படுகிறது. எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் உங்களுக்கு சிறுநீர் வரும் பொழுது எரிச்சலும், வலியும் ஏற்படும்.

உடல் சூடு வெப்பம் அதிகரித்து உடலில் இருக்கும் நீர் எல்லாம் வற்றிவிட்டால் இன்னும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். சில சமயங்களில் சிறுநீர் கழிக்கும் போது ரத்தம் வருவதற்கும் நிறையவே வாய்ப்புகள் உண்டு, இதனால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இந்த ஒரு பொருள் இருந்தால் ரொம்பவே சுலபமாக இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

நீர்க்கடுப்பு என்பது சிறுநீர் கழிக்கும் பொழுது வரக்கூடிய அசவுகரியத்தை அப்படி கூறுவார்கள். கடுப்பது போன்ற உணர்வு, சிறுநீர் கழித்தவுடன் ஏற்படக்கூடிய வலி ரொம்ப சுலபமாக நீக்க நிறையவே தண்ணீர் பருக வேண்டும். மேலும் அதனுடன் ஒரு ஐந்து சின்ன வெங்காயத்தை முழு தோலையும் உரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதை நன்கு கழுவி விட்டு பின்பு வாயால் மென்று சாறுடன் அப்படியே முழுங்க வேண்டும். இது சற்று காரமாக இருக்கும் எனவே நீங்கள் ஒரு முறை மென்ற பின்பு சிறிது அளவு தண்ணீர் ஊற்றி முழங்கி விடுங்கள். இதனால் அதன் காரத்தன்மை குறையும்.

சிரமப்பட்டு நான்கிலிருந்து ஐந்து வெங்காயங்களை சாப்பிட்டு பின்னால் ஒரு லிட்டர் அளவிற்கு தண்ணீர் பருக வேண்டும். ஒரு லிட்டருக்கு மேல் உங்களால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு தண்ணீரை பருகிக் கொள்ளுங்கள். பத்து நிமிடத்தில் எல்லா வலியும் பறந்து சிறுநீர் பாதையில் இருக்கும் தொற்றினால் ஏற்பட்ட வீக்கம் மறைந்து சிறுநீர் கழிப்பதில் இருந்து வந்த தடைகள் நீங்கும். மேலும் உடல் உஷ்ணம் தணிந்து உடல் குளிர்ச்சியாகி சட்டென நீர் கடுப்பு பிரச்சினை மாயமாய் மறைந்து போகும்.

இதற்காக பல வழிகளை நாடாமல், இந்த இயற்கையான நாட்டு வைத்தியத்தை கடைபிடித்து பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படும் ரிசல்ட் கிடைக்கும். உஷ்ண உடல் கொண்டவர்கள் கண்டிப்பாக குறைந்தது ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். தண்ணீரின் அளவை நீங்கள் குறைத்தால் நீர் கடுப்பு பிரச்சனை அடிக்கடி வர ஆரம்பிக்கும். ஒருமுறை வந்துவிட்டால் இது அடிக்கடி வரும். மேலும் இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகும். இதனால் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தாக முடிய கூடும், கவனம் தேவை.