30 நாட்கள் தொடர்ந்து இதை தலையில் தேய்த்து வந்தால் 31 வது நாள் வழுக்கையாக இருக்கும் இடத்திலும் முடி வளர்ச்சியை காண்பது உறுதி!!
30 நாட்கள் தொடர்ந்து இதை தலையில் தேய்த்து வந்தால் 31 வது நாள் வழுக்கையாக இருக்கும் இடத்திலும் முடி வளர்ச்சியை காண்பது உறுதி!!
ஒரு சவாலாக கூட இந்த குறிப்பை நீங்கள் பின்பற்றி பார்க்கலாம். அந்த அளவிற்கு நம்பிக்கையான குறிப்பு இது. எந்த பக்க விளைவுகளும் ஏற்படாத அளவிற்கு ஒரு சில பொருட்களை மட்டும் தான் இந்த குறிப்பில் பயன்படுத்தப் போகின்றோம். உங்களுடைய தலையில் முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது. முடி ரொம்பவும் டிரை ஆகி உடைகின்றது.
முன்னெற்றியில் வழுக்கை போன்ற பிரச்சினை இருக்கிறது என்றாலும் இந்த குறிப்பை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். ஒரு நாள் விடாமல் 30 நாட்கள் தொடர்ந்து இந்த குறிப்பை பின்பற்றினால் 31 வது நாள் நிச்சயமாக முடி வளர்ச்சியில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள். வாங்க இந்த சூப்பரான செலவில்லாத குறிப்பை நாமும் தெரிந்து கொள்வோம்.
இந்த குறிப்புக்கு நமக்கு தேவையான பொருட்கள். அரிசி வடித்த கஞ்சி தண்ணீர், விட்டமின் E கேப்ஸ்யூல், விளக்கெண்ணெய், அவ்வளவு தான். இந்த 3 பொருட்கள் மட்டும் போதும். காலையில் வடித்த அரிசி கஞ்சியை அப்படியே பயன்படுத்தினாலும் சரி, அப்படி இல்லை என்றால், இன்று அரிசி வைத்த கஞ்சியை 24 மணி நேரம் புளிக்க விட்டு அந்த அரிசி கஞ்சியை குறிப்புக்கு பயன்படுத்தினாலும் மிகவும் நல்லது. அன்றே வடித்த அரிசி கஞ்சியை குறிப்புக்கு பயன்படுத்துவதை விட, புளித்த அரிசி கஞ்சியை குறிப்புக்கு பயன்படுத்தினால் பலன் இரட்டிப்பாக கிடைக்கும். ஆனால் புளித்த கஞ்சியில் லேசாக வாடை வீசும் அதை நீங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் – 1/4 கப், விட்டமின் E கேப்ஸ்யூல் – 2, விளக்கெண்ணெய் – 2 டீஸ்பூன், இந்த அளவுகளில் பொருட்களை எடுத்துக்கொண்டு, ஒரு பவுலில் போட்டு நன்றாக ஒரு ஸ்பூனை வைத்து கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும். இந்த ஸ்ப்ரேவை ஃப்ரிட்ஜில் வைத்தால் 7 நாட்கள் வரை கெட்டுப் போகாது. (விட்டமின் E கேப்சூலை வெட்டி உள்ளே இறக்கும் ஜெல்லை மட்டும் குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.)
தினமும் உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது இந்த ஸ்ப்ரேவை மயிர் கால்களில் படும்படி நன்றாக ஸ்பிரே செய்து, மசாஜ் செய்ய வேண்டும். குறிப்பாக முன்னேற்றியில் வழுக்கை இருந்தால் அந்த இடத்தில் இந்த ஸ்பிரேவை அடித்து விரல்களால் லேசாக மசாஜ் செய்து கொடுங்கள். முடியின் நுனி பாகம் வரை இந்த ஸ்பிரேவை அடிக்கலாம் தவறு கிடையாது. நீங்கள் வீட்டில் இருப்பவர்களாக இருந்தால் இந்த ஸ்ப்ரேவை தலையில் அடித்துக் கொண்டு தலைக்கு குளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படியே விட்டுவிடலாம்.
இந்த கஞ்சி தண்ணீரின் வாடை தலையில் அடிக்கிறது என்றால் 30 நிமிடங்கள் இந்த சீரம் தலையில் ஊறிய பின்பு, வெறும் தண்ணீரை ஊற்றி தலையை அலசி கொண்டால் கூட போதும். இந்த ஸ்ப்ரேவியின் மூலம் உங்களுடைய முடிவுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து முடி வளராத இடங்களில் கூட முடியை வளரச் செய்யும். உங்களுக்கு மிகவும் குளிர்ச்சியான உடம்பு என்றால் விளக்கு எண்ணெயை 2 ஸ்பூனுக்கு பதிலாக, 1 ஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ளலாம். விட்டமின் ஈ கேப்ஸ்யூல் பயன்படுத்துவதன் மூலம் பக்க விளைவுகள் வந்து விடுமோ என்ற பயம் வேண்டாம். தாராளமாக தலைக்கு சரியான அளவோடு விட்டமின் ஈ கேப்ஸ்யூல் பயன்படுத்தலாம். அதிலும் எந்த ஒரு தவறும் கிடையாது.
தலைமுடி உதிர்வதற்கு எவ்வளவு பெரிய காரணங்கள் இருந்தாலும் அதை சரி செய்ய நாம் தயார் செய்த இந்த ஒரு ஸ்பிரே போதும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா அடர்த்தியாக முடியை வளர்க்க வேண்டும் என்ற ஆசை கூடிய விரைவில் நிறைவேறும்.