சருமம் அப்படியே தங்கத்திற்கு பாலிஷ் போட்டது போல பளபளவென ஜொலிக்க....

இதை ஒரு முறை உடல் முழுவதும் போட்டு தேய்த்து குளித்துப் பாருங்கள். சருமம் அப்படியே தங்கத்திற்கு பாலிஷ் போட்டது போல பள பளவென ஜொலிக்கும்!!!

அழகு குறிப்பு என்றாலே அதை நிறைய பேர் முகத்திற்கு மட்டும்தான் பயன்படுத்துவார்கள். உடல் அழகை பற்றி கவலைப்படுவதை கிடையாது. நம்முடைய கைகள் கால்கள் இவையும் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்றால், நம்முடைய உடல் முழுவதும் தங்கம் போல ஜொலிக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. பின் சொல்லக்கூடிய குறிப்பை பின்பற்றினாலே போதும். உங்களுடைய உடல் முழுவதும் பாலிஷ் போட்டது போல பள பளன்னு இருக்கும்.

நிறைய பேரை நான் பார்த்திருப்போம் காலில் நெயில் பாலிஷ் போட்டு செருப்பு போட்டு இருந்தால் அவர்களுடைய கால்களை பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும். சில பேருடைய கைகளில் நெயில் பாலிஷ் போட்டு ஒரே ஒரு மோதிரம் போட்டு இருப்பார்கள் அவர்களுடைய கைகள் பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருக்கும். எப்படி இவர்களுடைய சருமம் மட்டும் இவ்வளவு அழகாக உள்ளது என்று நம்முடைய கை, கால்களை பார்க்கும்போது லேசாக வருத்தம் நிறைய பேருக்கு வந்திருக்கும். அந்த வருத்தத்தை சரி கட்டவே இந்த பதிவு.

இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்தப் போகும் பொருட்கள் 3. சூரியகாந்தி விதை, தேங்காய் துருவல், ஜாதிக்காய் பொடி. இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து கலப்பதற்கு தேங்காய் பால் பயன்படுத்தலாம். அல்லது அரிசி வடித்த கஞ்சி பயன்படுத்தலாம். அப்படி இல்லை என்றால் ரோஸ் வாட்டர் அல்லது தண்ணீர் எதை வேண்டும் என்றாலும் உங்களுடைய சருமத்திற்கு ஏற்ப நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரொம்பவும் வறட்சியான சருமமாக இருந்தால் தேங்காய் பால் பயன்படுத்துங்கள். ரொம்பவும் ஆயில் ஸ்கின்னியாக இருந்தால் ரோஸ் வாட்டர் அல்லது தண்ணீர் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்க ஸ்கின் நார்மலான ஸ்கின் ஆயிலியாகவும் இருக்காது. டிரை ஆகவும் இருக்காது என்றால் அரிசி களைந்த தண்ணீர் அல்லது அரிசி வடித்த கஞ்சி தண்ணீர் பயன்படுத்தலாம்.

சூரியகாந்தி விதைகள். சன் பிளவர் சீட்ஸ் என்று இதை சொல்லுவார்கள். இது பெரும்பாலும் டிபார்ட்மென்டல் ஸ்டோரில் கிடைக்கின்றது. இல்லை என்றால் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளுங்கள். வாங்கிய சூரியகாந்தி விதைகளை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து சல்லடையில் சலித்து எடுத்த பொடியை குறிப்புக்கு பயன்படுத்த வேண்டும். ரொம்பவும் கொரகொரப்பாக இருக்கக்கூடிய சூரியகாந்தி விதைகளை அப்படியே குறிப்புக்கு பயன்படுத்தினால் அது ரொம்பவும் சொரசொரப்பாக இருக்கும். சருமத்தில் தேய்த்து குளிக்க முடியாது.

ஒரு சிறிய கிண்ணத்தில் சூரியகாந்தி விதை பொடி – 2 ஸ்பூன், தேங்காய் துருவல் – 1 ஸ்பூன், ஜாதிக்காய் பொடி – 1/2 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் போட்டு இதை பேஸ்ட் ஆக தயார் செய்ய உங்கள் சருமத்திற்கு ஏற்ற திரவியத்தை ஊற்றி நன்றாக கலந்து உங்களுடைய கழுத்துப் பகுதியில் இருந்து கால் பகுதி வரை உடல் முழுவதும் நன்றாக ஸ்கிரப் செய்து 2 நிமிடம் தேய்த்து அதன் பின்பு தண்ணீர் ஊற்றி குளிக்க வேண்டும். (முகத்திற்கு இதை பயன்படுத்துவது அவ்வளவு சரியானது அல்ல  ஏனென்றால் இது ஸ்க்ரப் சொரசொரப்பாக இருக்கும். முகத்தில் இருக்கும் சருமன் சாஃப்ட்டாக இருக்கும்.)

இந்த ஸ்க்ரப்பரை பயன்படுத்திய பின்பு சோப்பு போட்டு குளிப்பதாக இருந்தாலும் குளிக்கலாம். அப்படி இல்லை என்றால் நலுங்கு மாவு, குளியல் பொடி எது இருந்தாலும் அதை பயன்படுத்தி நீங்கள் குளித்துக் கொள்ளலாம். வாரத்தில் மூன்று நாட்கள் இந்த ஸ்கிரப்பரை பயன்படுத்தி வாருங்கள். உங்களுடைய சருமத்தில் என்ன பிரச்சனை இருந்தாலும் அந்த பிரச்சனையை சரி செய்யக்கூடிய குறிப்பு தான் இது.

சில பேருக்கு கழுத்து பகுதிகளில் முதுகு பகுதிகளில் எல்லாம் கூட குறுகுறுவாக இருக்கும். அதாவது கொப்பளங்கள் இருக்கும். அதையெல்லாம் சரி செய்யவும் இந்த ஸ்க்ரப்பர் உதவியாக இருக்கும். உடம்பில் இருக்கக்கூடிய டெட் செல்லை நீக்கி ஒரு சில நாட்களில் உங்களுடைய தோல் பளபளப்பாக மாறிவிடும். நீங்க வேணா ட்ரை பண்ணி பாருங்க.