இவ்ளோ நாள் தெரியாம போச்சே!!இதை பற்றி உங்களுக்கு தெரியுமா ??

இவ்ளோ நாள் தெரியாம போச்சே!!இதை பற்றி உங்களுக்கு தெரியுமா ??

சீரகம் என்பது ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் இந்த சீரகத்தை அதிக அளவில் பயிரிடப்படுகின்றது. தமிழகத்தில் மேட்டுப்பாங்கான இடங்களிலும் மலைப்பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றது.இவைகள் எல்லாம் காய்ந்த விதைகளை தான் நாம் சீரகம் என்கிறோம். இவை சமையலுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் மருத்துவ குணமும்  அதிக அளவில் நிறைந்துள்ளது.அதன்படி வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது இந்த சீரகம்.இந்த சீரகம் கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது.

ஒரு சிலருக்கு ஹீமோகுளோபின் பற்றாக்குறை காரணமாக இரத்தசோகை ஏற்படுகிறது. இதற்கு பீட்ரூட் நல்லது என்றாலும், ஒரு சிலருக்கு பீட்ரூட் சாப்பிடுவது பிடிக்காது. அதிலும் நம்முடைய குழந்தைகள் காய்கறி என்றாலே ஒதுக்கி விட்டு சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பர்.

அவர்களுக்கு நாம் சீரகம் தரலாம். இரத்தசோகை உடையவர்களுக்கு ஒரு உன்னதமான மருந்தாக இந்த சீரகம் பயன்படுகிறது இதில் இரும்புச்சத்து, வைட்டமின் பி, வைட்டமின் ஈ ஆகியனவும் புரதம், நார்ப்பொருள், கொழுப்பு முதலியன இதில் இருக்கிறது.

சீரகத்திலிருந்து 56% Hydrocarbons, Terpene,Thymol போன்ற எண்ணெய்ப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதில் Thymol –[anthelmintic againt HOOK WORM infections, and also as an Antiseptic] வயிற்றுப்புழுக்களை அழிக்கவும், கிருமி நாசினியாகவும் பல மருந்து கம்பெனிகளில் மருந்துகளாக பயன்படுத்தப் படுகிறது.எனவே இன்றைய தினம் முதல் சீரகத்தை அனாவசியமாக நினைக்காதீர்கள். நம் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.