இத்தனை நாள் இது தெரியாமல் போய்விட்டதே! முட்டையில் இவ்வளவு பயனா!!

இத்தனை நாள் இது தெரியாமல் போய்விட்டதே! முட்டையில் இவ்வளவு பயனா!!

முகம் பளிச்சிட :

ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்பு முட்டையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி குறைந்தது 30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

இறுதியில் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி துணியால் முகத்தைத் துடைத்து மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.

முடி கருப்பாகவும் நீளமாகவும் வளர இதனை செய்யலாம்.l :

இரண்டு முட்டைகளில் இருந்து பெறப்பட்ட வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதில் மூன்று டீஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறை கலந்து கொள்ள வேண்டும்.

தயார் செய்யப்பட்ட  இந்த கலவையை தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.

விரைவில் முடி உதிர்வு பிரச்சினை சரியாகும். இவ்வாறு செய்து வந்தால் முடி கருப்பாகவும் நீளமாகவும் வளரும்.

கைகளை வறட்சியின்றி வைக்க இதை செய்யலாம் :

கைகளை வறட்சியின்றி வைப்பதற்கு வீட்டிலுள்ள பொருள்களை வைத்தே மாய்ஸ்சரைசரைத் தயாரிக்கலாம்.

அதற்கு முட்டையின் மஞ்சள் கரு தேன் ஆலிவ் எண்ணெய் சர்க்கரை எலுமிச்சை ஆகியவற்றைக் கலந்து வைத்துக் கொள்ளவும்.

ஒவ்வொரு முறையும் கைகளைக் கழுவும் போது இதனைப் பயன்படுத்தலாம்.

இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பாத்திரங்கள் துலக்கியிருந்தாலும் துணிகள் துவைத்திருந்தாலும் கைகள் வறண்டு போகாமல் மென்மையாகவே இருக்கும்.