உலர் கண் நோய் பிரச்சினையா.. இந்த மூலிகைகளை பயன்படுத்துங்க..

உலர் கண் நோய் பிரச்சினையா.. இந்த மூலிகைகளை பயன்படுத்துங்க.. 

கண்கள். எவ்வளவு முக்கியமான உறுப்பு என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. அத்தகைய கண்களை ஆரோக்கியமாக வைப்பதற்கு செய்ய வேண்டிய ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.

கண்கள் மனித உடலில் மண்டையோட்டை சுற்றி உள்ள மென்மையான பாகங்கள். அன்றாட வாழ்க்கையில் சீராக ஈடுபட இந்த கண்களின் பங்கு மிக மிக முக்கியமானவை. ஆயுர்வேதம் கண்களை பாதுகாக்க பல குறிப்புகளை பரிந்துரைக்கிறது. அதில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

கண்கள் நுண்ணுயிர் தொற்றுகள், கண் புரை, கிளைகோமா, மாகுலர் சிதைவு மற்றும் ஒளிவிலகல் போன்ற பார்வையை பாதிக்கும் மயோபியா, ப்ரெஸ்பியோபியா போன்ற நுண்ணுயிர் தொற்றுகளை தவிர ஒரு முக்கிய நோயான பார்வை உறுப்புகளை பாதிக்கிறது.

உலர் கண் அல்லது வறட்சியான கண் :

எல்லா பருவகாலங்களிலும் வறண்ட, குளிர்ந்த, குளிர்காலம் மற்றும் வெப்பமான கோடைக்காலங்களில் மட்டும் அல்லாமல் ஈரமான பருவமழை காலங்களிலும் கூட உலர் கண்கள் பிரச்சினை வரலாம்.

வறண்ட கண்கள் முதன்மையாக கண்ணீர் சுரப்பு பிரச்சினைகளால் உண்டாகின்றன. கண்களில் தொடர்ச்சியான ஈரப்பதம் அவசியம் இது கார்னியா மற்றும் சளி சவ்வு ஆகியவற்றின் வெளிப்புற காட்சி உறுப்புகளுக்கு உயவு போன்றவற்றுக்கு உதவுகிறது. இந்த செயல்பாட்டில் பிறழ்வுகள் உண்டாகும் போது பொதுமான அல்லது குறைபாடுள்ள கண்ணீர் படலங்கள் உருவாகிறது. இது கண்களை வறட்சிக்கு ஆளாக்குகிறது.

உலர் கண் காரணமாக ஆயுர்வேதம் சொல்வது என்ன?

ஆயுர்வேதத்தில் இந்த உலர் கண் சிண்ட்ரோம் ஆனது Shushkakshipaka என்று அழைக்கப்படுகிறது. இது அதிகப்படியான வறட்சி அல்லது ருக்ஷதா மற்றும் மோசமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் தூண்டப்பட்ட வாத மற்றும் பித்த தோஷங்களால் தூண்டப்படுகிறது.

மேலும் இந்நோய் புகை மண்டலத்தில் நீண்ட நேரம் இருப்பது மாசு, தூசி ஆகியவற்றை எதிர்கொள்வது, நீண்ட நேரம் தொலை தூர பொருள்களை பார்த்துகொண்டிருப்பது. போதுமான அல்லது தொந்தரவான தூக்கத்தை கொண்டிருப்பது, தூக்கமின்மை போன்றவற்றாலும் கூட இந்த பிரச்சினைகளை எதிர்கொள்வதாக கூறுகிறது.

உலர் கண் நோய் சரி செய்ய ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் மூலிகைகள் :

உலர் கண்ணுக்கு திராட்சை :

திராட்சை குளிர்ச்சியான பண்புகளை கொண்டுள்ளது. இது கண்களில் எரிச்சலை தணிக்கும் மற்றும் ஈரப்பதத்தை அளிக்கும் ஆந்தோசயனின் ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளது. கண் இமைகள் மற்றும் கண்களின் விளிம்புகளை சுற்றி சர்க்கரையுடன் கலந்த திராட்சை பேஸ்ட்டை பயன்படுத்துவது உலர் கண்களை போக்குவதில் பலனளிக்கும்.

உலர் கண்ணுக்கு நெய் :

கண் இமைகள் மற்றும் இமைகளின் மூலைகளை சுற்றி சிறிது நெய்யை தடவி , சில நிமிடங்கள் வைத்திருந்தால் இது கண் உறுப்புகளில் வறட்சியை போக்குகிறது.

பசு நெய் கொழுப்பு அமிலங்களால் நிறைந்துள்ளது. இது உலர் கண் நோய்க்குறியை குணப்படுத்தும் அற்புதமான இயற்கை தீர்வு. கண் இமைகள் மற்றும் இமைகளின் மூலைகளை சுற்றி நெய்யை தடவி சில நிமிடங்கள் வைத்திருந்தால் இது பார்வை உறுப்புகளில் வறட்சியை போக்குகிறது.

உலர் கண்ணுக்கு வல்லாரை :

வல்லாரை இலைகளில் இருந்து உலர்ந்த பொடியை எடுத்து மூக்கு வழியாக அளிக்கப்படும் நஸ்யா சிகிச்சை கண்களுக்கு செல்லும் பாதைகளை சுத்தப்படுத்துகிறது. இது கண் வறட்சி உட்பட பல உ டல்நல குறைபாடுகளுக்கு சஞ்சீவியாக செயல்படுகிறது. இதை மூக்கு துவாரங்கள் வழியே பயன்படுத்தும் போது கண்களுக்கு செல்லும் பாதைகளை சுத்தப்படுத்துகிறது மற்றும் கண்ணீர் சுரப்பை புதுப்பிக்க உதவுகிறது. இது உலர்ந்த கண்களை சரி செய்ய உதவுகிறது.

உலர் கண்ணுக்கு திரிபலா :

குளிர்ந்த நீரில் கரைத்த திரிபலா கரைசலை கொண்டு கண்களை கழுவுவது கண்களில் அரிப்பு உணர்வை தணிக்க உதவுகிறது. இது நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் ஆகிய மூன்று மூலிகைகளின் கலவை. இது பைட்டோநியூட்ரியண்ட்கள் மற்றும் நன்மையான ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்த ஒரு சக்திவாய்ந்த ஆயுர்வேத கலவை. இதை கொண்டு கண்களை சுத்தம் செய்யும் போது இது உலர் கண் நோய்க்குறியை எதிர்த்து போராட செய்கிறது.

உலர் கண்ணுக்கு சந்தனம் :

சந்தனம் வறண்ட சருமத்துக்கு சிறப்பாக உதவக்கூடும். இது ஆயுர்வேதத்தில் நிரூபிக்கப்பட்ட ஆயுர்வேத தீர்வும் கூட. சந்தனத்தை விளக்கெண்ணெயில் குழைத்து மெல்லிய அடுக்காக பூசுவது எரிச்சலை நீக்குகிறது. இது கண் வறட்சியை போக்குகிறது.