தாழம்பூ

தாழம்பூ

மின்னல் பட்ட உடனே மலரும் தாழை !  
'சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போல' என்ற உவமை

சிவனின் சாபம் பெற்றதால் பூஜையில் தாழம்பூவைச் சேர்க்க மாட்டார்கள். 

ஆனால், உத்தர கோசமங்கை கோயிலில் மட்டும் வழிபாட்டில் தாழம்பூ சேர்த்துக் கொள்ளப் படுகிறது. 

தாழையின் நறுமணமிக்க மகரந்தத்
தூளை திருநீறு என்பர்.  நீறு பூசியும் சிவன் தலையில் அது இடம்
பெறவில்லை எனக் குமரகுருபரர் பாடுகிறார். 

எட்டாம் நூற்றாண்டில் இருந்த திருப்புல்லாணியின் சூழலை வருணிக்கும் போது வெளுத்த
மடல்களையுடைய கைதை இங்கு இருந்ததாக திருமங்கை
யாழ்வார் குறிப்பிடுகிறார். 

ஆனால், தற்போது அங்கு  இம்மரம் இல்லை.

கடல் அரிப்பிலிருந்து கரையோரங்களைக் காக்கும் தாழை...

ராமநாதபுரம் மாவட்டக் கடற்கரைப் பகுதிகளில் இயற்கையாக வளர்பவை தாழை மரங்கள்; 

பேரிடரைத் தடுக்க இயற்கை நமக்கு வழங்கிய கொடை. இலக்கியங்களில் நெய்தல் திணைக்குரிய மரமாகப் போற்றப்படும் தாழை, 

ராமேஸ்வரம் தீவு, மேலமுந்தல், தாழையடி, ஏழுபிள்ளை காளியம்மன் கோயில் உள்ளிட்ட பல இடங்களில் பெரியளவில் காணப் படுகின்றன. 

மண மிக்க தாழம்பூ பூக்கும் குறுமரமான தாழையை கைதை’ எனவும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. 

அழிந்து வரும் இம்மரங்களைக் கடற்கரை முழுவதும் பயிரிட்டு வளர்ப்பதின் மூலம் கடலோரப் பகுதிகளைக் கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்களும் கோரியுள்ளனர்.

இது பற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.
இராஜகுருவிடம் பேசினோம். '

பாண்டேசி  எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வித்திலைத் தாவரமான தாழையின் தாவரவியல் பெயர் பாண்டனஸ் டெக்டோரியஸ் (Pandanus tectorius). 

மணற் பாங்கான கடற்கரைப்
பகுதிகள், நீர்நிலைகளின் கரையோரங்களில் இது அதிகளவில் வளர்கிறது. 

இம்மரம் 25 அடி வரை உயரமாக வளரும். 
இதன் இலையின் ஓரங்களில் முள் இருக்கும். அடிமரத்தில் விழுதுகள் இருக்கும். பூவில் ஆண்
பெண் வேறுபாடுகள் உள்ளது. ஆண் பூ தான் மணமிக்க தாழம்பூ. 

வெளிறிய மஞ்சள் நிறத்தில் இருக்கும் இப்பூ மலர்ந்த ஒரே நாளில் கீழே விழுந்து விடும். 

ஆண் மலர் காய் காய்ப்பதில்லை. பெண்  வகையில் பூவும், காயும் அன்னாசிப்பழம் போன்ற அமைப்பில் இருக்கும். 

ராமேஸ்வரம் நம்பு நாயகி அம்மன்
கோயில் பகுதியில் பெண் மரம் அதிகளவில் காணப்படுகிறது

தொடும் போது இலையில் இருக்கும் முள் கையை தைக்கும் என்பதால் இதை 'கைதை'  என்கிறார்கள். 

குறிஞ்சிப் பாட்டில் 83-வது மலராகக் குறிப்பிடப்படும் கைதை, 

தாழையின் மலரான தாழம்பூ ஆகும். 
நம்புதாளை, வேதாளை, தாழையூத்து, பூந்தாழை, தாழைக்காடு, தாழையூர் எனப் பல ஊர்கள் தாழையின் பெயராலே உருவாகியுள்ளன. 

தாழம்பூ, கைதகப் பூ எனச் சித்த மருத்துவத்தில் சொல்லப்
படுகிறது. 

குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் தாழை பற்றி பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. 

தலை விரித்த பேய் போல தாழையின் பச்சை மடல்கள் பரவி விரிந்துள்ளதாக அகநானூறில் வெங்கண்ணனார் கூறுகிறார். 

நாரை கோதுகின்ற சிறகு போல, தாழையின் அரும்புகள் விரிந்து மலர்வதாகக் குறுந்தொகையும், அன்னப்பறவை போல மலர்வதாகச் சிறு பாணாற்றுப் படையிலும் கூறுகின்றன.

இலையில் உள்ள முட்கள் சுறா மீனின் பற்கள் போலவும், சொரசொரப்பான தாழையின் அடிப்பகுதி இறால் மீனின் முதுகு போலவும், கூர்மையான முனை உள்ள இதன் மொட்டு யானையின் 
தந்தம் போலவும், மலர் முதிர்ந்து தலை சாய்த்து நிற்பது மான் தலை சாய்த்து நிற்பது போலவும், தாழம்பூ மலர்ந்து மணம் பரப்புவது,  விழா நடைபெறும் இடத்தில் கமழும் தெய்வ மணம் போலவும் உள்ளதாக நற்றிணையில் நக்கண்ணையார் கூறுகிறார்.

தாழையின் நறுமண மிக்க மகரந்தத்தூளை திருநீறு என்பர். நீறு பூசியும் சிவன் தலையில் அது இடம்
பெறவில்லை எனக் குமரகுருபரர் பாடுகிறார். எட்டாம் நூற்றாண்டில் இருந்த திருப்புல்லாணியின் சூழலை வருணிக்கும்போது வெளுத்த மடல்களையுடைய கைதை இங்கு இருந்ததாக திருமங்கையாழ்வார் குறிப்பிடுகிறார். ஆனால், தற்போது அங்கு  இம்மரம் இல்லை.

மணமிக்க தாழம்பூ கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. அம்மைநோய் கண்ட வீட்டில் தாழம்பூவைக் கட்டித் தொங்க விடுவதால் அக்கிருமிகள் அழிகின்றன. 

ஓலைச் சுவடிகளைப் பூச்சி அரிக்காமல் பாதுகாக்க இப்பூ பயன்படும். 
இதன் காயை அழகுக்காக விழாப்
பந்தலில் கட்டித் தொங்கவிடுவர். 

இதன் விழுது வீட்டுக்கு வெள்ளை
யடிக்கவும், நார்  ஊஞ்சலாடவும் பயன்
படுகிறது. 

இதன் ஓலையில் இருந்து தாழைப்பாய் உருவாகிறது. 

தாழம்பூவில் இருந்து வாசனை தைலம் எடுக்கப் படுகிறது.

பாரம்பரிய நிலம் சார்ந்த மரங்கள் அழிந்து வருவதால் இயல்பான இயற்கைச் சூழ்நிலை மாறிவருகிறது. 

மண்ணரிப்பு, சுனாமி, கடல்சீற்றம் 
ஆகிய பேரிடரைத் தடுக்கும் தாழை மரங்களைக் கடற்கரைப் பகுதிகள் முழுவதும் அடர்த்தியாக வளர்ப்பதன் மூலம் இதுபோன்ற பாதிப்புகளிலிருந்து மக்களையும், கடற்பகுதிகளையும் பாதுகாக்க முடியும்" என்றார்.

மின்னல் பட்ட உடனே மலரும் தாழை ! என்ற விளக்கத்தை கேட்டு வியந்த எம்.ஜி.ஆர் !

தாழம் பூ என கூறப்படும் 
தாழை மலர்கள் மின்னல் படுவதால் தான் மலர்கிறது என்ற கூற்றை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா ? 

இதனை மறுக்க முடியாது. ஏனெனில் சங்ககால புலவர்கள் முதல் தற்போதைய பல கவிஞர்கள் வரை பலர் தாழம் பூ குறித்த இந்த மலர்ச்சியை தங்களது கவிதையில் குறிப்பிட்டுள்ளனர். 

உதாரணத்திற்கு நாடோடி மன்னன் படத்தில் ஒரு பாடலில், கவிஞர் சுரதா 'சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போல' என்ற உவமையை பயன்
படுத்தியுள்ளார். 

இந்த வரிகளை கவனித்த எம்.ஜி.ஆர், 
அது எப்படி சாத்தியம் ? 

மின்னல் கண்டு தாழம் பூ எப்படி மலரும் என வினாவியுள்ளார். 
கவிஞர் சுரதா கையாண்டது, 

"கலிங்கத்துப் பரணி" யிலிருந்து....
இதற்கு கவிஞர் சுரதா, குறுந்தொகை பாடலில் உள்ள இந்த வரிகளை ஆதாரமாக காட்டிய போது  எம்.ஜி.ஆரே வியந்து மகிழ்ந்தாராம். 

இதற்கான அறிவியல் விளக்கம் என்னவென்றால், தாழை செடி கிளைகளின் இறுதியே தாழம் பூவாக உருமாற்றம் அடையும்.
 
பொதுவாக தாவரங்கள் செழிப்பாக வளர நைட்ரஜன் இன்றியமையாதது. 
மழை பொழியும் காலங்களில் மின்னலானது காற்றில் உள்ள நைட்ரஜனை உடைத்து காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் கலந்து மண்ணை வந்தடைகிறது. 

இந்த சமயத்தில் தாவரங்கள் செழிப்பாக வளர்கின்றன. உற்று 
கவனித்தால் தான் தெரியும், 

சாதாரண பாசன நீரை காட்டிலும் மழைப் பொழிவு ஏற்பட்ட நேரத்தில் பயிர்கள் செழிப்பாக வளர்ந்திருக்கும்.

தாழை மலர் நைட்ரஜன் பற்றாக்
குறையில் உள்ள போது, மின்னலுடன் மழை பெய்கையில் தனக்கான ஊட்டச்சத்தை எடுத்துக் கொண்டு உடனடியாக மலர்ந்து விடுகிறது. 

மற்ற நாட்களை காட்டிலும் மின்னலுடன் மழை பெய்த பின்னர் பார்த்தால் அதிக தாழை மலர்கள் அதிக அளவில் மலர்ந்திருக்கும். 

மின்னலும் தாழை மலர்கள் மலர ஊக்கு
விப்பானாக செயல்படுகிறது.

ஆனால் சங்க கால பாடலான குறுந்
தொகையிலும் அறிவியல் விளக்கத்துடன் இடம் பெற்றது தான் பெரிதும் வியப்பளிப்பதாக உள்ளது என மக்கள் திலகமும் வியந்துள்ளார்.