கையளவு கருப்பு திராட்சை… இதய ஆரோக்கியத்திற்கு இப்படி சாப்பிடுங்க

கையளவு கருப்பு திராட்சை… இதய ஆரோக்கியத்திற்கு இப்படி சாப்பிடுங்க!!

திராட்சை இந்தியாவில் உள்ள இனிப்பு வகைகளில் தவறாமல் இடம்பெறும் பொருளாகும். ஆனால், இனிப்புகள் மற்றும் குறிப்பாக பண்டிகைகளின் போது அதிகமாகப் பயன்படுத்தப்படும், வழக்கமான திராட்சைகள் பொதுவாக அடர் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆனால், கருப்பு நிற திராட்சையை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?

அவை சிறிய அளவில், சுருக்கமான தோலுடன் சுவைகளை உள்ளடக்கி இருக்கும். முடி உதிர்வைக் குறைப்பது, இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்குவது மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பது முதல் இரத்த சோகையைத் தடுப்பது வரை, கருப்பு திராட்சை உங்கள் உணவில் ஒரு அற்புதமான கூடுதலாகும், ஏனெனில் அவை இயற்கையான ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டிருக்கின்றன மற்றும் இரும்புச்சத்து நிறைந்தவை, என தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ஆயுர்வேத நிபுணர் டிக்சா பாவ்சர் கூறினார்.

உலர்ந்த உணவுப் பொருட்கள் உங்களின் வாத தோஷத்தை அதிகரிக்கலாம் மற்றும் “இரைப்பை பிரச்சினைகளை” அதிகரிக்கலாம் என்பதால், திராட்சையை சாப்பிடுவதற்கு முன் ஊறவைக்குமாறு டாக்டர் பாவ்சர் பரிந்துரைத்தார். மேலும், திராட்சையை ஒரே இரவில் ஊறவைப்பது, ஜீரணிக்க எளிதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

ஆயுர்வேதத்தின் படி கருப்பு திராட்சை பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

ஆஸ்டியோபோரோசிஸுக்கு உதவுகிறது :

கருப்பு திராட்சை பொட்டாசியத்தின் வளமான மூலமாகும். இதில் அதிக அளவு கால்சியம் உள்ளது, இது எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்

நரை முடி மற்றும் முடி உதிர்வை குறைக்கிறது :

கருப்பு திராட்சையில் இரும்புச்சத்து மட்டுமின்றி, அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இது உடலில் உள்ள தாதுக்களை விரைவாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது மற்றும் முடிக்கு சரியான ஊட்டச்சத்தை வழங்குகிறது.

இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது :

வயது அல்லது வாழ்க்கை முறை பிரச்சினைகளைப் பொறுத்து, உலகில் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கருப்பு திராட்சையை உட்கொள்வது, “பொட்டாசியம் இரத்தத்தில் சோடியத்தை குறைக்க உதவுகிறது” என டாக்டர் பாவ்சர் கூறுகிறார். இதனால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

இரத்த சோகையை தடுக்கிறது :

திராட்சைகள் பொதுவாக இரும்பு மற்றும் வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ் ஆகியவற்றின் வளமான மூலமாகும், இது இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. ஒரு கையளவு திராட்சையைத் தொடர்ந்து சாப்பிடுவது இரத்த சோகை அறிகுறிகளைத் தடுக்கலாம்.

கெட்ட கொலஸ்ட்ராலுக்கு எதிராகப் போராடுகிறது :

கருப்பு திராட்சை இரத்தத்தில் உள்ள “எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கிறது” என்று டாக்டர் பாவ்சர் கூறினார். எல்.டி.எல் கொலஸ்ட்ரால் மருத்துவத்தில் ‘கெட்ட கொலஸ்ட்ரால்’ என்றும் அழைக்கப்படுகிறது மற்றும் சாதாரண செயல்பாடுகளைச் செய்ய இதயத்தின் அழுத்தத்தை அதிகரிக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு சில கருப்பு திராட்சைகளை உட்கொள்வது சிறந்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

வாய் ஆரோக்கியத்திற்கு நல்லது :

கருப்பு திராட்சை உங்கள் வாய் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று அமெரிக்காவின் உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. திராட்சையை சாப்பிடுவது பல் சிதைவில் இருந்து உங்களை பாதுகாக்கும். ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, திராட்சைப்பழத்தில் ஐந்து பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் தாவர ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, இதில் ஓலியானோலிக் அமிலங்கள் அடங்கும், அவை பல் சிதைவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகின்றன.

மலச்சிக்கலை போக்குகிறது :

கறுப்பு திராட்சைகள் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்த உணவாக அறியப்படுகின்றன, “இது மலத்தை சிக்கலை போக்குகிறது” என்று டாக்டர் பாவ்சர் கூறினார். நார்ச்சத்து மலச்சிக்கலில் இருந்து உடனடியாக நிவாரணம் அளிப்பதாக அறியப்படுகிறது மற்றும் பல தசாப்தங்களாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

வேறு சில நன்மைகள் : 

*மாதவிடாய் வலியைக் குறைக்க உதவுகிறது

* ஆற்றல் நிலைகளை மேம்படுத்துகிறது

*அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) குறைக்க உதவுகிறது