வெறும் வயிற்றில் பெருங்காயம் + தேன் சேர்த்து சாப்பிடுங்க! உடலில் நடக்கும் அதிசயம் ஏராளமாம்...
வெறும் வயிற்றில் பெருங்காயம் + தேன் சேர்த்து சாப்பிடுங்க! உடலில் நடக்கும் அதிசயம் ஏராளமாம்...
தினமும் காலையில் வெறும் வயிற்றில் பெருங்காயம் மற்றும் தேன் உட்கொள்வது கொழுப்பை ஜீரணிக்க உதவுகிறது.
அதுமட்டுமின்றி தேனை, பெருங்காயத்துடன் சேர்த்து பருகினால், கொழுப்பை எளிதில் கரைக்க உதவுகிறது.வயிற்றின் பல்வேறு பகுதிகளில் படிந்திருக்கும் கொழுப்பைக் குறைக்கவும் இந்த முறை பயனுள்ளதாக இருக்கும் மற்றும் வேறு சில நன்மைகளையும் தருகின்றது.
அந்தவகையில் வெறும் வயிற்றில் பெருங்காயத்துடன் தேனை கலந்து உண்பதால் பல நன்மைகள் உண்டு. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
வெறும் வயிற்றில் பெருங்காயம் + தேன் சேர்த்து சாப்பிடுங்க! உடலில் நடக்கும் அதிசயம் ஏராளமாம்
காலையில் ஒரு ஸ்பூன் பெருங்காயத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று உப்புசம் குறையும். இது வீக்கத்தைக் குறைக்கும் மிகவும் பயனுள்ள வழியாகும்.
கோடைக்காலத்தில் பலருக்கு செரிமானத்தில் பிரச்சினை ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இவை இரண்டும் அஜீரண பிரச்சினையை நீக்குவதற்கு உதவியாக இருக்கும். இந்தக் கலவையானது, வயிற்றில் அதிகப்படியான அமிலத்தின் உற்பத்தி ஏற்படாமல் தடுக்கிறது. எனவே, தேன் வயிற்றின் pH அளவை சரிசெய்கிறது. இதனால் அஜீரண பிரச்சினைகள் குறைகிறது.
அசிடிட்டி இருப்பவர்கள் ஒரு ஸ்பூன் பெருங்காயத்தை லேசாக சூடு செய்துக் கொண்டு, அதில் ஒரு ஸ்பூன் தேனில் கலக்கவும். இதை சாப்பிட்டு வெந்நீர் அருந்தவும். சிறிது நேரத்தில் அசிடிட்டி பிரச்சினை சரியாகிவிடும். இந்த பழக்கத்தை தொடர்ந்து பின்பற்றினால், அசிடிட்டி பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.
பெருங்காயத்தை லேசாக சூடாக்கி, பின்னர் தேன் கலந்து சாப்பிடவும். அதன் பிறகு சிறிது தண்ணீர் குடித்துவிட்டு நேராக படுத்துக் கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து வயிற்று வலி, சொல்லாமல் கொள்ளாமல் ஓடுவிடும். நீங்கள் போயே போச்சு வயிற்றுவலி என்று நிம்மதியாக இருக்கலாம்.