சர்க்கரை நோயை விரட்டும் இன்சுலின் இலை டீ..

சர்க்கரை நோயை விரட்டும் இன்சுலின் இலை டீ.. 

உலகம் முழுவதும் வேகமாக அதிகரிக்கும் நோய்களுள் சர்க்கரை நோயும் உண்டாகும்.

இதற்கு பல மருந்துகள் இருந்தாலும் இதனை இயற்கை முறையே சிறந்த வழியாகும்.

அந்த வகையில் காஸ்டஸ் பிக்டஸ் என்ற இந்த இன்சுலின் செடி சக்கரை நோயை அடியோடு விரட்ட உதவி புரிகின்றது.

இந்த இன்சுலின் செடியில் உடம்புக்கு தேவையான இரும்புச் சத்து, புரோட்டீன் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களான டோகோபரோல், அஸ்கார்பிக் அமிலம், ஸ்டீராய்டுகள், β- கரோட்டின், டெர்பெனோயிட்கள் மற்றும் ஃபிளவனாய்டுகள் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

இது சர்க்கரை நோய் மற்றுமின்றி சிறுநீரகம், கல்லீரல், புற்றுநோய் போன்ற பிரச்சினைகளையும் போக்கும் வல்லமை உடையது.

இதனை டீ போட்டு குடிப்பிதனால் சக்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம். தற்போது இந்த டீயினை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

• 5-7 இன்சுலின் இலைகள்
• 4 கப் தண்ணீர்
• தேன்

பயன்படுத்தும் முறை :

இன்சுலின் இலைகளை கழுவி காய
வைத்து எடுத்து கொள்ளுங்கள். ஒரு
பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க
வையுங்கள்.

பின்னர் கொதிக்கின்ற தண்ணீரில்
இலைகளை போடவும்.

தண்ணீர் பாதியளவு வற்றும் வரை
கொதிக்க விட வேண்டும். பிறகு வடிகட்டி ஒரு கப்பில் எடுத்து கொள்ளுங்கள்.

இறுதியாக சுவைக்கு தேனை சேர்ந்து
கலந்து குடிக்கவும். நாளடைவில் நல்ல
மாற்றத்தை காணலாம்.

முக்கிய குறிப்பு :

கருவுற்ற பெண்கள், பாலூட்டும்
தாய்மார்கள் இந்த செடியை சாப்பிடக்
கூடாது. ஏனெனில் இது ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

இலையை அப்படியே பச்சையாக
சாப்பிடுவதை தவிருங்கள். இதன்
கடினமான தன்மை எரிச்சலை உண்டு
பண்ணக் கூடும்.