சோப்புகளின் உண்மைநிலை!!!

சோப்புகளின் உண்மைநிலை!!!

அமெரிக்காவில் மனிதர்கள் பயன்படுத்த தகுதியற்றது என்று தடைசெய்யப்பட்ட  குளியல் சோப் தான் இன்று இந்தியாவில் அதிக விற்பனை ஆகின்றது!!!  

விளம்பரங்களில் புதுப்புது சோப்கள் தினசரி அறிமுகமாகின்றன. பாடிவாஷ் , ஃபேஸ்வாஷ் , சருமத்தை மேம்படுத்தும் க்ளீன்செர் cleanser என உடலை சுத்தப்படுத்தும் சோப்புப் பொருட்களின் வடிவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. எங்கள் சோப்தான் பெஸ்ட் என்றுதான் எல்லா விளம்பரங்களுமே சொல்கின்றன. ஆனால், நிஜம் அப்படி இல்லை. எல்லா சோப்களும் எல்லோருக்கும் ஒத்துவராது என்பதைப் போல சிலவகை யாருக்குமே ஒத்துவராது என்பதும் உண்மை. அப்படி இவற்றில் என்னதான் இருக்கின்றன. எது எல்லாம் உங்கள் சோப்பில் இருக்கக் கூடாது? வாங்க பார்க்கலாம்.

சருமம் எனும் அரண்

நம் உடலுக்குத் தேவையான அடிப்படையான ஊட்டச்சத்துக்கள் உணவைத் தவிர எதன் மூலம் உடலுக்குக் கிடைக்கின்றன தெரியுமா? தோல். ஆமாம் நமது சருமத்தில் உள்ள நுண்ணிய துவாரங்கள், சூரிய ஒளியில் இருந்தும், காற்றில் இருந்தும், சூழலில் இருந்தும் நம் உடலுக்கு அவசியத் தேவையான ஊட்டச்சத்துக்களை கிரகித்து உடலில் சேர்க்கிறது. சுமார் 22 சதுர அடி பரப்பளவு கொண்ட நம் சருமம், தன் மீது வந்துசேரும் பொருட்களில் 60 சதவிகிதத்தை தன்னிடமிருந்து ரத்தத்தில் கலக்கிறது. அப்படித்தான் வைட்டமின்களையும் தாது உப்புக்களையும் நாம் உடலுக்குப் பெறுகிறோம். துரதிர்ஷ்டவசமாக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் மாசுகளையும், வேதிப் பொருட்களையும் கூட நாம் ரத்தத்தில் தோல் மூலமாகச் செலுத்துகிறோம் என்பதுதான் மோசமான விஷயம். 

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்புப் பொருட்களில் உள்ள வேதிப் பொருட்கள், நம் சருமத்துக்கு அலர்ஜி ஏற்படுத்துவதோடு, ஹார்மோன் கோளாறுகள், பாலியல் கோளாறுகள், சிலவகைப் புற்றுநோய்கள் உட்பட பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக நான்கு பொருட்கள் உங்கள் சோப்பில் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்...

பாரபென்ஸ் (Parabens): இதை, ஈஸ்ட்ரோஜன் போலிகள் (Estrogen mimickers) எனலாம். இந்த வேதிப்பொருள் உள்ள சோப்பைப் பயன்படுத்தும்போது, அது ரத்தத்தில் கலந்தால், ரத்தத்தில் அதிக ஈஸ்ட்ரோஜன் இருப்பதாகக் கருதி உடல் பல்வேறு எதிர்வினைகளைச் செய்கின்றன. குறிப்பாக, தசை அடர்த்தியைக் குறைக்கிறது, கொழுப்பு சேமிப்பது அதிகமாகிறது. பூப்பெய்துதல் துரிதமாகிறது, பாலியல் கோளாறுகளை உருவாக்குகிறது. எனவே, பாரபென் இல்லாத சோப்புகள் சிறந்தவை.

சல்ஃபேட் (Sulfates): சோப்களில் நுரை வருவதற்காக இந்த வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, எஸ்.எல்.எஸ் எனப்படும் சோடியம் லாரியல் சல்ஃபேட் (Sodium lauryl sulfate), எஸ்.எல்.இ.எஸ் (SLES) எனப்படும் சோடியம் லாரத் சல்ஃபேட் (Sodium laureth sulfate) போன்றவையே பயன்படுத்தப்படுகின்றன. சல்ஃபேட்கள் சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய் பசையைப் பாதிக்கின்றன. சென்ஸ்சிடிவ் சருமம் உள்ளவர்கள், சல்ஃபேட் அதிகம் உள்ள சோப்களைப் பயன்படுத்தும்போது எக்ஸீமா போன்ற சரும நோய்கள் உருவாகின்றன.

டிரைகுளோசான் (Triclosan): ஆன்டிபாக்டீரியல் சோப்களில் இந்த வேதிப்பொருள் அதிகம் காணப்படுகிறது. சமீபத்திய ஆய்வுகளில் டயாக்ஸின் (Dioxin) எனப்படும் புற்றுநோயைத் தூண்டும் கார்சினோஜன்கள் இந்த சோப்பில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. மேலும், இந்த வேதிப்பொருள் ரத்தத்தில் அதிகரிக்கும்போது ஹார்மோன் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. நாளமில்லா சுரப்பிகளைப் பாதிக்கின்றன. குறிப்பாக, தைராய்டு பிரச்னைகள் அதிகரிக்கின்றன.

நறுமணப் பொருட்கள்: நறுமணப் பொருட்கள் என்று சொன்னாலும் இதில் என்னவெல்லாம் உள்ளன என்று துல்லியமாக வரையறுத்துவிட இயலாது. ஏனெனில், சோப்களில் உள்ள நறுமணப் பொருட்கள் என்பவை பல்வேறு வேதிப்பொருட்களின் காக்டெய்ல். எஃப்.டி.ஏ போன்ற நிறுவனங்கள்கூட நறுமணத்துகாக எவை எல்லாம் சேர்க்கப்படுகின்றன என்ற விவரங்களைக் கேட்பது இல்லை. ஏனெனில், அவை ஒவ்வொரு சோப் நிறுவனத்துக்குமான ரகசிய ஃபார்முலா எனப்படுகின்றன. பெரும்பாலும், தாலேட்ஸ் போன்ற புற்றுநோயை உருவாக்கும் சிந்தெடிக் பொருட்கள் அதிமாகச் சேர்க்கப்படுகின்றன. இவை உடலின் மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதித்து அலர்ஜி, மைக்ரேன் தலைவலி, ஆஸ்துமா போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும்.

மோசமான சோப்பை அன்றாடம் பயன்படுத்தும்போது நோயை நாம் விலை கொடுத்து வாங்குவதாகவே பொருள். எனவே நல்ல தரமானதாக பார்த்து வாங்குவதே நல்லது. 

 பெரும்பாலும் ஊடகங்கள்  விளம்பரம் செய்யும் சோப் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்பு தான் அவை  நமக்கு  சில வருடங்களில் தோல் நோயை உண்டாக்குபவையே!!!!