வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ்… இதை ஏன் இன்னும் ட்ரை பண்ணாம இருக்கீங்க?

வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ்… இதை ஏன் இன்னும் ட்ரை பண்ணாம இருக்கீங்க?

கோடை காலத்தில் அனைவரும் சுரைக்காயை மிகுந்த ஆர்வத்துடன் சாப்பிடுவார்கள். இந்த காய்கறியை சாதாரணமாக உட்கொள்வதைத் தவிர, மக்கள் சுரைக்காய் கூட்டு, எண்ணெய் பொரியல், அவியல் என பல விதமாக தயார் செய்து அசத்துவார்கள். மேலும், ஜூஸ் வடிவிலும் பருகி மகிழ்வர். 

இந்த சுவையான காய்கறியில் அதிக அளவு நார்ச்சத்துடன், பல ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன. இது பல நோய்களைத் தடுக்க உதவுகிறது. தினமும் சுரைக்காய் சாற்றை குடிப்பதன் மூலம், வாத, பித்த மற்றும் கப பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். மேலும் இது மன அழுத்தத்தை போக்கி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

சுரைக்காய் ஜூஸ் தயார் செய்வது மிகவும் எளிது. காய்கறியின் மெல்லிய வெளிப்புற அடுக்கை உரிக்கவும், மீதமுள்ளவற்றை மிக்சியில் போட்டு மென்மையான பேஸ்ட்டைப் போல் அரைக்கவும். வேண்டுமானால் ஜூஸை வடிகட்டிக்கொள்ளலாம் அல்லது அப்படியே குடிக்கலாம். 

பலருக்கு சுரைக்காய் ஜூஸ் சுவை பிடிக்காது. இருப்பினும், அதன் ஆரோக்கிய நன்மைகள் மகத்தானவை. அவற்றை சிம்பிள் முறையில் தயார் செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம். 

சுரைக்காய் சாறுக்குத் தேவையான பொருட்கள்:

சுரைக்காய் – 200 முதல் 300 கிராம்

புதினா இலைகள் – 6-7

சிறிது எலுமிச்சை (பித்தம் உள்ளவர்கள் பயன்படுத்தக் கூடாது)

கல் உப்பு – ருசிக்கேற்ப

சுரைக்காய் ஜூஸ் செய்வது எப்படி?

முதலில் சுரைக்காயை  தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கவும். இப்போது சுரைக்காய் மற்றும் புதினா துண்டுகளை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து சாறு எடுக்கவும். அதன் பிறகு, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு பருகி மகிழவும். 

சுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் :

சுரைக்காய் ஜூஸ் பருகி வருவதன் மூலம் வாத, பித்த, கபாவை போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பலாம். வாதத்தைத் தவிர சளி (கபா) பிரச்சினைகள் உள்ளவர்கள் தினமும் 1 கிளாஸ் சுரைக்காய் சாறு குடிக்க வேண்டும். இது அவர்களின் உடலுக்கு மிகுந்த ரிலாக்ஸைக் கொடுக்கும்.

எடை இழப்பு :

சுரைக்காய் ஜூஸில் நார்ச்சத்து தவிர, வைட்டமின், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து  அதிக அளவில் காணப்படுகின்றன. இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. எனவே, சுரைக்காய் ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகி வரவும். 

செரிமானத்திற்கு உதவுகிறது :

சுரைக்காய் ஜூஸில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது சரியான செரிமானத்திற்கு உதவுகிறது.

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது :

சுரைக்காய் சாற்றில் பொட்டாசியம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது :

சுரைக்காய் சாற்றை தொடர்ந்து பருகி வருவதால் இதயம் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இது இதய ஆரோக்கியத்தை மிகவும் திறம்பட மேம்படுத்துகிறது.

கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது :

பல சமயங்களில் தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணமாக கல்லீரலில் அழற்சி பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு, சுரைக்காய் சாறுடன் சிறிது இஞ்சி சாறு கலந்து குடிக்கவும். இதனை உட்கொள்வதால் கல்லீரல் வீக்கம் குறையும்.