பூனைக்காலி விதை பொடி பயன்கள் :

பூனைக்காலி விதை பொடி பயன்கள் :

பூனைக்காலி விதையை சித்த மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தக்கூடிய மூலிகையாகும். பூனைக்காலி விதை என்பது அதிக வெப்பம் உள்ள பகுதியில் வளரக்கூடியது. இந்த விதையின் பூவானது காய்த்து ஒவ்வொரு காயிலும் 7 விதைகள் இருக்கும். காய்களின் மேல் புறம் மென்மையான சுனை போன்று இருக்கும். அதனால் இதற்கு இது வெல்வெட் பீன் என்று பெயர் வைத்து அழைக்கிறார்கள். இவை மென்மையாக இருந்தாலும் உடலில் பட்டால் நமைச்சலை ஏற்படுத்தும். இந்த பதிவில் பூனைக்காலி விதையில் எப்படி பொடி தயாரிக்கலாம், பூனைக்காலி விதையானது எந்த மாதிரியான நோய்களை குணப்படுத்தும் என்பதை இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

பூனைக்காலி விதை பொடி செய்யும் முறை:

• பூனைக்காலி விதை

• தண்ணீர்விட்டான் கிழங்கு

• நிலப்பனை கிழங்கு

• நத்தை சூரி விதை

• சாலாமிசிரி

• சிறுபீளை

• அமுக்கிரான் கிழங்கு

மேல் கூறிய அனைத்தையும் சமமான அளவிற்கு எடுத்து நன்றாக சுத்தம் செய்து பொடி செய்துக்கொள்ளவும். இந்த பவுடரை தினமும் அரை டீஸ்பூன் அளவு எடுத்து அரை டம்ளர் அளவு வெதுவெதுப்பான நீரில் கலந்து 21 நாட்கள் வரை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலே கூறியுள்ள அனைத்து பொருள்களும் நாட்டு மருந்து கடைகளில் எளிமையாக கிடைக்கும்.

நரம்பு தளர்ச்சி குணமாக:

வயதாகி விட்டாலே அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனையில் ஒன்று இந்த கை கால் நடுக்கம், நரம்பு தளர்ச்சி பிரச்சனை. பூனைக்காலி விதையை பொடி செய்து அதனை அரை கிராம் அளவு எடுத்து பாலில் சேர்த்து குடித்து வர நரம்பு தளர்ச்சி, கை கால் நடுக்கம் போன்ற அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.

ஆண்மை அதிகரிக்க :

பெரும்பாலும் ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் பூனைக்காலி விதை முதலிடத்தில் இருக்கிறது. பல நாட்களாக தாம்பத்திய உறவில் நிலைகொள்ளாமல் இருப்பவர்களுக்கு இந்த பூனைக்காலி விதை பொடியினை எடுத்து வந்தால் விரைவில் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். ஆண்மை அதிகரிக்க பூனைக்காலி விதை, ஜாதிபத்திரி, சமுத்திரப்பச்சை சூடம் வசம்பு போன்ற பொருள்களை சமமான அளவு எடுத்து தினமும் காலை, மாலை என இரு வேளையிலும் அரை கிராம் முதல் ஒரு கிராம் வரை பாலுடன் சேர்த்து குடிப்பதன் மூலமாக ஆண்மை அதிகரிக்கும்.

வயிறு சம்பந்தமான பிரச்சனை :

சிலருக்கு அடிக்கடி வயிற்றில் எதாவது தொந்தரவு வந்துக்கொண்டே இருக்கும். வயிற்றில் புண், அல்சர் போன்ற பல பிரச்சனைகள் வரும். வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைக்கும் ஒரு நல்ல தீர்வு எதுவென்றால் பூனைக்காலி விதை, சுக்கு, திப்பிலி, கிராம்பு, வெண் சித்திர மூலம், வேர்ப்பட்டை பூனைக்கண் குங்கிலியம், இவற்றை எடுத்து அதனுடன் நீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்து வைத்துள்ளதை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். தினமும் ஒரு உருண்டை வீதம் காலை, மாலை சாப்பிட்டு வருவதன் மூலமாக வயிற்றிலுள்ள புழுக்கள் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.

யானைக்கால் குணமாக :
 
யானைக்கால் நோய் இருப்பவர்கள் பூனைக்காலி வேரினை நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும். யானைக்கால் பிரச்சனை இருப்பவர்கள் அரைத்து வைத்துள்ள பூனைக்காலி வேரினை பற்றுப்போட்டு வந்தால் யானைக்கால் நோய்க்கு நல்ல பலன் கிடைக்கும்.