மருதாணி இலையின் எண்ணற்ற மருத்துவ நன்மைகள்!!

மருதாணி இலையின் எண்ணற்ற மருத்துவ நன்மைகள்!!

மருதாணி இலையைப் பற்றி அறியாதவர்களே இருக்கமுடியாது. மருதாணியில் அளவுக்கு அதிகமான மருத்துவக் குணங்கள் உள்ளதால்தான் நம் முன்னோர்கள் அவற்றை அழகு சாதனப் பொருளாக பயன்படுத்தி வந்தனர். சிலர் வீடுகளின் கொல்லைப் புறத்திலும், தோட்டங்களிலும் வளர்த்து வருகின்றனர். மணமகளை அழகுபடுத்தவும், திருவிழாக் காலங்களிலும் இந்தியப் பெண்கள் இதனை அதிகம் பயன்படுத்துவார்கள்.

இந்தியா முழுவதும் காணப்படும் பெருஞ்செடி மற்றும் சிறுசெடி வகையைச் சேர்ந்தது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.

இதனை அலவணம்,ஐனாஇலை, ஐவணம், மருதோன்றி, சரணம், மருதாணி என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

இதன் பலன்களும் எண்ணற்றவை :

கை, கால் எரிச்சல் :

கை கால்களில் எரிச்சல் உண்டாவதை தடுக்க மருதாணி இலையை நன்கு நீர்விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை கால்களிலும், உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் கை கால் எரிச்சல் உடனே நீங்கும்.

கரு‌ந்தேம‌ல் :

சிலரு‌க்கு கழு‌த்‌திலு‌ம், முக‌த்‌திலு‌ம் கரு‌ந்தேம‌ல் காண‌ப்படு‌ம். இத‌ற்கு ந‌ல்ல கை மரு‌த்துவ‌ம் உ‌ள்ளது.மருதா‌ணி இலையுட‌ன் ‌சி‌றிது ‌கு‌ளிய‌ல் சோ‌ப்பை‌ச் சே‌ர்‌த்து அரை‌த்து பூ‌சி வர ‌விரை‌வி‌ல் கரு‌ந்தேம‌ல் மறையு‌ம்.

நகக்கண் :

நகக்கண்களில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை இவற்றைப் போக்கும் குணமுடையது. மேலும் நகங்களைப் பாதுகாக்கும் அரணாக மருதாணி விளங்குகிறது. நகக் கண்ணில் புண் அல்லது நகச் சுற்று ஏற்பட்டவர்கள் மருதாணி இலையை அரைத்து நகத்தின் மீது பற்று போட்டால் நகக் கண்ணில் ஏற்பட்ட புண்கள் குணமாகும்.

கால் ஆணி :

உ‌ள்ள‌ங்கா‌லி‌ல் ஆ‌ணி ஏ‌ற்ப‌ட்டிரு‌ந்தா‌ல் மருதா‌ணி இலையுட‌ன் ‌சி‌றிது வச‌ம்பு, ம‌ஞ்ச‌ள் க‌ற்பூர‌ம் சே‌ர்‌த்து அரை‌‌த்து, ஆ‌ணி உ‌ள்ள இட‌த்‌தி‌ல் தொட‌ர்‌ந்து க‌ட்டி வர ஒரு வார‌த்‌தி‌ல் குணமாகு‌ம்.

சுளுக்கு நீங்க :

மருதாணி இலையை நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி அதனை சுளுக்கு மற்றும் சிறு காயங்கள் ஏற்பட்ட இடத்தில் ஒற்றடமிட்டால் விரைவில் குணமாகும்.

வலி நிவாரணி :

குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மையுள்ள மருதாணியை தலை வலி நிவாரணியாகவும் பயன்படுத்தலாம். மருதாணி இலைகள் அல்லது அதன் பவுடர் அல்லது பேஸ்ட்டை நெத்தியில் தடவினால் தீராத தலைவலியாக இருந்தாலும் கூட குறைந்து விடும். அதனை சீராக பயன்படுத்தினால் மைக்ரைன் பிரச்னைக்கும் நிவாரணியாக விளங்கும்.

நல்ல தூக்கம் பெற :

மருதாணி யின் பூக்களை தலையணையின் கீழ் வைத்து தூங்கச் சென்றால் நல்ல தூக்கம் வரும். மேலும் மூளையில் ஏற்பட்ட சூட்டை தணித்து உடலுக்கும், மனத்திற்கும் புத்துணர்வை ஏற்படுத்தும்.

கல்லீரல் பாதுகாப்பு:

மஞ்சள் காமாலை போன்ற கல்லீரல் பிரச்னைகளை குணப்படுத்தும் குணங்களை கொண்டுள்ளது மருதாணி. மஞ்சாள் காமாலை என்பது ஆபத்தான
காய்ச்சலாகும். சில நேரம் அதற்கான சிகிச்சையும் சிக்கலாகி விடும். அதனால் மஞ்சள் காமாலையை குணப்படுத்த நல்ல ஆயுர்வேத மருந்தாக மருதாணியை எடுத்து கொள்ளலாம்.

தலை முடி :

அனைத்து வகை தலைமுடி பிரச்னைகளுக்கும் பவுடர் அல்லது பேஸ்ட் வடிவில் உள்ள மருதாணி இலைகளை பயன்படுத்தலாம். வாரம் ஒரு முறை இந்த பேஸ்ட்டை தலை முடியில் தடவினால் பொடுகு குறைந்து,
தலைமுடியை மென்மையாக்கி, பளபளப்பை உண்டாக்கும். மேலும் நரை முடியை மறைப்பதற்காகவும்
பயன்படுத்தலாம்.

இளநரை :

மருதாணி இலைகளை மைய அரைத்து அடை போன்று தட்டையாகத் தட்டி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். இதனை தேவையான அளவு தேங்காய்
எண்ணெயில் போட்டு 21 நாள்கள் வெயிலில் வைத்து பின்னர் வடிகட்டி பத்திரப் படுத்த வேண்டும். இந்த எண்ணெயைத் தலையில் தடவி வரவேண்டும். இதனால் இளநரை மாறுவதுடன் கண்கள் குளிர்ச்சி அடையும். நல்ல தூக்கம் உண்டாகும்.

வெள்ளை படுதல் குணமாக :

6 தேக்கரண்டி அளவு புதிதாக சேகரித்த மருதாணி இலைச் சாற்றை வெறும் வயிற்றில் காலை வேளைகளில் குடிக்க வேண்டும். 10 நாள்கள் வரை இவ்வாறு செய்ய பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் குணமாக்கும்.

மேலும்...

• மருதாணி யின் வேர், பட்டையை அரைத்து பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் அதிக ரத்தப்போக்கு குணமாகும். பித்தத்தைத் தணித்து உடல் நிலையை சீராக்க உதவும். 

• மருதாணி இலைகளை அரைத்து பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.

• மருதாணி விதையிலுள்ள எண்ணெயை உடம்பின் மீது தடவி வந்தால் உடலில் எரிச்சல் தணிந்து குளிர்ச்சியாக்கும்.

• மருதாணி இலைகளை அரைத்து பாதங்களில் வைத்துக் கட்டுவது சிறந்த முறையாக பாரம்பரிய மருத்துவத்தில்
இன்றும் இருந்து வருகின்றது.

• மருதாணியின் பூக்களால் குஷ்ட நோயான தொழு நோயை குணப்படுத்தலாம்.

• மருதாணி இலையை அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூச கொப்புளங்கள் தீக்காயங்கள்
குணமாகும்.

• வாதம், பித்தம் சம்பந்தப்பட்ட நோயைப் போக்கும் குணம் மருதோன்றிக்கு உண்டு.