இல்லற வாழ்வு, தாம்பத்தியம் இனிக்கும் உறவு

இல்லற வாழ்வு, தாம்பத்தியம் இனிக்கும் உறவு

❤ கூச்சம் வேண்டாம்
------------------------------------
மனித குலத்தின் அற்புதமான கண்டுபிடிப்பு இல்லறம். குடும்பத்தின் கட்டுக்கோப்புக்கு காவல் அரணாக விளங்குவது தாம்பத்ய உறவு. தங்களுக்குள் பேசிக் கொள்ளக்கூட தம்பதியருக்குள் தயக்கம். கேட்டால் அநாகரிகம் என்ற தவறான கருத்து. இதுவே நிலைத்த மகிழ்ச்சிக்கு உலை வைக்கிறது.

❤ தாய்ப்பாலைப் போன்றது
------------------------------------
வாழ்வதற்கு உணவு எவ்வாறு அவசியமோ, அதைப்போல தாம்பத்ய உறவு வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். குழந்தை வளர்ச்சிக்கு வேண்டிய முழு சக்தியும் ஊட்டமும் எப்படி தாய்ப்பாலில் உருவாகி சுரக்கிறதோ, அதேபோல் இல்வாழ்வில் உடல் வளர்ச்சிக்கும் நலனுக்கும் வேண்டிய ஊக்க சக்தியும் உணர்வுகளும் தாம்பத்யத்தால் உருவாகின்றன. எனவே உடல் உறவு இல்லாத இல்வாழ்க்கை முழுமையான வாழ்க்கையாக அமையாது.

❤ பருவம் தூண்டும் ஏக்கம்
------------------------------------
திருமணம் முடிந்தவுடன் தம்பதியினருக்கு ஏற்படும் ஏக்கம் இயற்கையானதே. பருவ காலத்தில் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் உள்ளத்தில் முளை விடுவது இந்த ஏக்கம். ஏக்கத்தை அறவழியில் நின்று குடும்ப ரீதியில் தணிக்கும் முறைதான் திருமணம். பின்னர் முதலிரவில் தணிகிறது ஏக்கம்.

❤ மின் விளக்குகளைப் போல...
------------------------------------
இல்வாழ்வின் உடல் உறவு, உணர்வு மையங்களைத் தூண்டி சீரிய முறையில் அங்கங்கள் செயல்படுமாறு செய்து அறிவு வளர வகை செய்கிறது; உடல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. சுவிட்ச் போட்டவுடன் கணப் பொழுதில் மின்சாரம் பாய்ந்து மின் விளக்குகள் எரிவதுபோல், தம்பதியினர் சேர்ந்தவுடன் உணர்வுகள் தூண்டப்படுகின்றன. விளைவு, சுரப்பிகளும் தசை நாண்களும் நரம்புகளும் மெருகேற்றப்பட்டு, நுண்ணிய அறிவும் தெள்ளிய எண்ணமும் மேலோங்கி நிற்கும்.

❤ அடிப்படை ரகசியங்கள்
------------------------------------
ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்ற முதுமொழியைப் பொய்யாக்க தம்பதியினருக்கு ஆசையா? இதற்கு தொடர் தாம்பத்ய உறவினால் ஏற்படும் அடிப்படை ரகசியங்களைத் தெரிந்துகொள்வது நல்லது. அன்பு, பரஸ்பரம் மதித்தல், ஒத்துப்போதல், கோபப்படாமல் எப்போதும் சிரித்த முகத்துடன் இருத்தல், உணவு-ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துதல், உடற்பயிற்சி, செய்யும் தொழிலில் திறமையை வளர்த்துக்கொள்ளுதல், வாழ்க்கையைத் திட்டமிடுதல் ஆகியவற்றுக்குத் தொடர் உடல் உறவு உதவும். இல்லற வாழ்வு சிறக்கும்.

❤ சேர்ந்துப் படுத்தால்கூட...
------------------------------------
உடல் நலமோ அல்லது மன நலமோ குன்றிய காலத்திலும்கூட கனிவாகப் பேசுதல், சிரித்த முகத்தோடு செயல்படுதல், அன்புகொண்டு அரவணைத்தல், நெருங்கிப் படுத்து இதமான உணர்வுகளை ஊட்டுதல் போன்ற செயல்கள் மிக முக்கியமான இயற்கை மருத்துவமாக அமையும். பல சமயங்களில் பெரும்பாலான இளம் வயதினர் கோபத்துக்கு இடம் கொடுத்து உடல் உறவு எனும் மென்மையான உணர்வு தலைதூக்க விடாமல் செய்து விடுகின்றனர். நாளடைவில் நோய்கள் தலைதூக்கும். கோபம் குடியைக் கெடுக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

💔 ஆர்வம் குறைவது ஏன்❓
------------------------------------
வயது ஆக, ஆக இன்ப உணர்வுகளின் தரம், வேகம், விறுவிறுப்பு, அளவு, அற்புதங்கள் நிகழ்த்தும் தன்மை அனைத்தும் மாறுபடும். இதற்கு தம்பதியினரின் மனப்பாங்கே காரணம். குடும்பக் கவலைகள், கூடிவரும் பொறுப்புகள், வாழ்க்கைச் சுமைகளின் அழுத்தங்கள், பிள்ளைகளின் வருங்காலம் பற்றிய எதிர்பார்ப்புகள் ஆகியவற்றால் இளமைக்கால வேகம் குறைந்து உல்லாச உணர்வுகள் ஊக்கம் பெறுவதில்லை. விளைவு, ஊட்டச் சத்துகளும், ரத்த ஓட்டமும், பிராண வாயுவும் குறைவாகக் கிடைத்து, செயல் திறன் குறையும். இந் நிலை வேண்டாமே.

💚 இயற்கை அளித்த மாமருந்து💚
------------------------------------
பொன்னால் ஆன ஆபரணங்களைப் பார்த்தும் அணிந்தும் மனித இனம் சந்தோஷப்படுகிறது. பொன்னும் பொருளும் வாழ்க்கையில் மிக முக்கியமான தேவை இல்லை. ஆனால், உடலின் தேவையைத் தரவும், உள்ளத்தின் தாகத்தைத் தணிக்கவும், மனதின் அழுத்தங்களைக் குறைக்கவும், நோய் இன்றி உடல் நலம் காக்கவும் தாம்பத்ய உறவு அடிப்படை. இது இயற்கை அளித்த நலம் தரும் மாமருந்து.

❤ தொடரும்
------------------------------------
மரபுச் சங்கிலி மரபுச் சங்கிலியில் ஒரு இணைப்பு மரணத்தால் துண்டிக்கப்படுகிறது. ஆனால் அதே சமயம் புதியதாய் பிறக்கும் குழந்தை, மரபுச் சங்கிலியில் புதியதாய் ஒரு இணைப்பை ஏற்படுத்தி மகிழ்ச்சிக்கு வித்திடுகிறது. இதற்கு வித்திட்டது இல்வாழ்வின் உடல் உறவு. மரபு என்பதில் பல பண்புகள் அடங்கியுள்ளன. மரபை ஒட்டிய பல பாணிகள், தோற்றத்திலும் நோக்கிலும் செயலிலும் புதிதாகப் பிறந்த சிசுவின் பல வளர்ச்சிக் கட்டங்களில் வெளிப்படுகின்றன.

❤ உறவு மறுக்கப்படுதல் கூடாது
------------------------------------
இல்வாழ்க்கையின் அடிப்படையான உடல் உறவை தெரிந்தோ, தெரியாமலோ, காரணத்துடனோ, காரணமின்றியோ தம்பதியர் பலர் அலட்சியப்படுத்தி விடுகின்றனர். இந்த அலட்சியம் பல நேரங்களில் குடும்பத்தின் அடித்தளத்தையே அசைத்து விடுகிறது. உறவு மறக்கப்படும் அல்லது மறுக்கப்படும் இல்வாழ்க்கை கொடு நரகமாகிவிடும். இத்தகைய நிலையில் கணவன்-மனைவியிடையே கசப்புணர்வு மேலோங்கும்.

💔 துன்பங்கள் ஏன்❓
------------------------------------
இல்வாழ்வில் உடல் உறவு இல்லாமை அல்லது போதாமைதான் துன்பங்களுக்குக் காரணம் என உறுதியாகக் கூற முடியும். உறவை மறந்ததால் ஒத்துப்போகும் தன்மை குறைகிறது. கோபம் அதிகரிக்கிறது. எரிச்சலும், சிடுசிடுப்பும் மேலோங்குகின்றன. இதன் விளைவாக, கணவன், மனைவி இருவரும் ஒருவரிடமிருந்து ஒருவர் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தொலைதூரத்துக்குச் சென்று விடுகின்றனர். பழிவாங்கும் நிலைக்குக்கூடச் சென்று விடுகின்றனர். சில சமயங்களில் மாற்றாரோடு உறவு; சில சமயங்களில் மண முறிவு.

❤ சிற்றின்பம் அல்ல
------------------------------------
ஆணையும் பெண்ணையும் ஆண்டவன் படைத்தான். அவர்கள் இடையே காதலையும் கவர்ச்சியையும் படைத்தான். காதலுக்கு அடிப்படையாக அன்பையும், தியாகத்தையும் மனிதர்கள் இதயத்தில் தோற்றுவித்தான். எனவே கணவன்-மனைவி இடையே ஏற்படும் கலவி இன்பம் கண நேர பொழுதுபோக்கு அல்ல. அது நிலைத்த மகிழ்ச்சிக்கான முதலீடு. நிச்சயமாக சிற்றின்பம் அல்ல. அது பேரின்பம்.

💘 சிற்றின்பம் எது❓
------------------------------------
சமூகத்தாலும், மனசாட்சியாலும் அங்கீகரிக்கப்படாத முறையற்ற வழிகளில் அயலாருடன் பெறும் கண நேர சந்தோஷமே சிற்றின்பம். குறிப்பாக மனைவி அல்லாத மாற்றாரோடு கொள்ளும் உறவு, தீமையானது; இச்சைக்காகச் செய்யும் கொச்சையான செயல். நோய்களைத் தருவது. அது நல் உறவாகாது. மரபு காக்காது. ஒழுக்கத்துக்கு அப்பாற்பட்டது. கரம் கைப்பற்றிய இனிய இல்லாளுடன் சந்தோஷமாகக் கொள்ளும் உடல் உறவே உத்தமமானது.

💝 அன்பை வளர்க்கும்
------------------------------------
முறையான தாம்பத்யஇல்வாழ்வில் ஏற்படும் உடல் உறவு பல நன்மைகளை அளிக்கக்கூடியது. இனம் (குழந்தை உருவாதல்.) காக்கும்; கோபத்தைப் போக்கி அன்பை வளர்க்கும். குணம் காக்கும். உடலுக்குத் தேவையான ரத்தம், பிராண வாயு, உயிர் ஊட்டச் சத்து பங்கீட்டை அதிகரித்து உடல் நலம் காக்கும். ஞாபக சக்தி வளர வழி வகுக்கும். உற்சாகத்தோடு, சுறுசுறுப்போடு ஆக்க செயலில் ஈடுபட வைக்கும்.

❌ குழந்தை பெறும் இயந்திரமா❓
------------------------------------
"நாங்கள் என்ன குழந்தை பெறும் இயந்திரமா?, எதுக்கு அடிக்கடி உடல் உறவு'--இது இன்றைய பெண்களின் கூக்குரல். ஆணுக்குப் பெண் நிச்சயமாக அடிமை இல்லை. கணவன்-மனைவி இருவரும் சமமானவர்கள். "ஈருடல் ஓர் உயிர்' என்ற உயர்ந்த இல்லற தத்துவத்தை மனத்தில் கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டும். மென்மை உணர்வு, எல்லையற்ற தாங்கும் சக்தி, அற்புதமான ஆற்றல் கொண்டவள் பெண். இத்தகைய பெருமை வாய்ந்த பெண்ணுக்குத்தான் தாய்மைப் பேறை அளித்துள்ளார் இறைவன்

💢 தனி வாழ்வு சுகம் தருமா〽
------------------------------------
இல்வாழ்வு இதமான இன்ப உணர்வைத் தரும்; தனி வாழ்வு முரணான இன்ப உணர்வைத் தரும். இல்வாழ்வு உற்சாகமூட்டும்; தனி வாழ்வு பதற்றத்தை ஏற்படுத்தும். இல்வாழ்வின் உடல் உறவு களைப்பைப் போக்கும்; தனி வாழ்வு களைப்பை உண்டாக்கும். இல்வாழ்வில் கோபம் குறையும்; தனி வாழ்வில் கோபம் அதிகமாகும். இல்வாழ்வில் அன்பு அதிகமாகும்; தனி வாழ்வில் அன்பு குறையும். இல்வாழ்வில் ஒத்துப் போகும் தன்மை ஏற்படும்; தனி வாழ்வில் ஒதுங்கிப் போகும் மனப் போக்கு ஏற்படும்.

💢 சலிப்புக்குப் பதில் ஏக்கம்
------------------------------------
ஆண்கள் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குப் புறப்படும்போது, "ஏண்டா வீட்டுக்குப் போறோம்' என்ற சலிப்பும் சோர்வும் மனதில் தோன்றக்கூடாது. மனைவிக்கும் கணவனுக்கும் இடையே பரஸ்பரம் ஈர்ப்பும், மையலும் இருக்க வேண்டும். இதில் மனைவியின் பங்கு மகத்தானது. தனது மனைவியை கணவன் எப்போதும் காதலுடன் நினைத்திருக்க வேண்டும். மனைவியை நினைத்தால் கோபமோ அல்லது வெறுப்போ வரக்கூடாது.

எப்போது வீட்டுக்குப் போகப் போகிறோம், மனைவியின் முகத்தைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆவல்-ஏக்கம் கணவன் மனத்தில் எப்போதும் இருக்க வேண்டும். கணவன் இத்தகைய மன நிலையைப் பெறுவது, அந்த மன நிலையிலேயே நீடித்திருப்பது ஆகியவை மனைவியின் போக்கைப் பொருத்தே அமையும்.

⭕ பெண்களுக்கு அறிவுரை ஏன்❓
------------------------------------
தம்பதியினரிடையே பரஸ்பரம் ஈர்ப்பு, காதலுக்கு பெண்களை மையப்படுத்துவதற்கு குறிப்பிட்ட காரணம் உண்டு. பெண்களுக்கு என்றே நளினம், வனப்பு, நயம் மிக்க ஈர்ப்பு விசை, இனிமைப் பண்புகள் என இறைவன் வாரி வழங்கியுள்ளான். அதே நேரத்தில் ஆண்களுக்கு இத்தகைய பண்புகளை வழங்குவதில் இறைவன் ஓரவஞ்சனை காண்பித்துள்ளான் என்பதற்கு ஆராய்ச்சிகள் எதுவும் தேவையில்லை.

எனவே இயற்கையிலேயே இனிமையான பண்புகளைப் பெற்றுள்ள பெண், தன் கணவனை இசைவுடன் நடத்தி இல்வாழ்வில் அனைத்து இன்பங்களையும் அடைய வேண்டும். இருவரும் பரஸ்பரம் அன்புடன் நடப்பது அவசியம். வாழ்வில் நலம் பெருகும். ஆரோக்கியம் அதிகரிக்கும். ஆயுள் கூடும்.

🈶 தண்ணீர் மோட்டார்போல...
------------------------------------
நாம் மோட்டாரை போட்டுவிட்டுப் பேசிக் கொண்டிருக்கிறோம்; இயக்கத்தை மோட்டார் நிறுத்தாமல் தொடர்ந்து தண்ணீரை மேலேற்றிக் கொண்டே இருக்கும். அதேபோன்று இணைந்து படுத்த தம்பதியினர் தூங்கிக்கொண்டிருக்கும்போது, இருவர் உடலிலும் சூடு, இதமான உணர்வு ஆகியவை உள்ளுணர்வுகளை அதிகமாக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். சுருக்கமாக கணவனுக்கு ஏற்படும் பல நோய்களுக்கு மாமருந்து மனைவியே--மனைவிக்கு ஏற்படும் நோய்களுக்கு மருந்து கணவனே.

❤ உடல் உறவு - நல்ல உடற்பயிற்சி❤
------------------------------------
உடல் உறவும் நல்ல உடற்பயிற்சிதான். ஆச்சரியமாக இருக்கிறதா? தம்பதியினர் அணைத்து, சேர்ந்து படுத்துத் தூங்கும்போது உடலின் அடிப்படை எரிபொருள் தேவை அதிகரிக்கிறது. தூக்கத்திலும்கூட உடல் உறுப்புகள் அதிக உணர்வுகளைப் பெறுவதோடு, ஊட்டச் சத்துக்களும் பிராண வாயுவும் அவற்றுக்கு அதிகமாகக் கிடைக்கின்றன. மெய்மறந்த ஆனந்த பரவசம் மனதுக்குக் கிடைக்கிறது. இந்த ஆனந்த பரவசம் உடற்பயிற்சியில் கிடைப்பதில்லை.

💗 இல்வாழ்வு "தூரம்' தேவையில்லை💗
------------------------------------
முன்பெல்லாம் மாதவிலக்கு ஏற்பட்டவுடன், பெண்களுக்கு ஓய்வு கொடுத்து அவர்களது உடலையும் உள்ளத்தையும் நன்கு பாதுகாத்து வந்தனர். தற்போது நாகரிகம் வளர்ந்துவிட்டது; வாழ்வில் அமைதியின்மையும் அலைச்சலும் அதிகமாகிவிட்டது. தம்மைத் தனிமைப்படுத்தி வைப்பதை பெண்கள் இழிவாகக் கருதும் காலம் இது.

மேலும் மாதவிடாயின்போது பெண்கள் சுத்தத்தைப் பராமரிக்கத் தேவையான வசதிகள் இப்போது உள்ளன. எனவே பழைய பழக்கம் மாறி மாதவிடாய்க் காலத்திலும்கூட ஆணுடன் இணைந்து தூங்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது தவறில்லை. ஆனால், உடல் உறவு கொள்வது நல்லது அல்ல.

🈸 இல்வாழ்வு--மாதவிடாய்க் கோளாறுகள் மறைய...
------------------------------------
"கல்யாணம் செஞ்சா அதெல்லாம் சரியாப் போயிடும்'-இக் குரலை பல குடும்பங்களில் கேட்டிருப்பீர்கள். மாதவிலக்குக் கோளாறுகள் பல. அடிக்கடி மாதவிலக்கு வருவது, நீண்ட காலம் கழித்து வருவது, மாதவிலக்கு வரும்போது வயிற்றில் அதிக வலி ஏற்படுவது, கோபம் வருவது, காய்ச்சல் வருவது, அதிக ரத்தப்போக்கு, வெள்ளைபடுவது போன்ற பல கஷ்டங்கள் பெண்களுக்கு உண்டு. திருமணத்துக்குப் பிறகு சீரான உடல் உறவு மூலம் மாயைபோல் மேலே சொன்ன அனைத்துக் கஷ்டங்களும் நீங்கி விடும். எனவே இல்வாழ்வில் உடல் உறவு, இன்பம் சார்ந்த மருந்து.

❤ இல்வாழ்வு--ஆஸ்துமா ஓரம்போ
------------------------------------
கணவனோ அல்லது மனைவியோ ஆஸ்துமாவினால் பாதிக்கப்படுவது உண்டு. நோய் வருவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும்கூட, இல்வாழ்வின் உடல் உறவின் மூலம் இந் நோயைக் கட்டுப்படுத்த முடியும்; பின் விளைவுகளைத் தவிர்க்க முடியும். ஏனெனில் உடல் உறவின்போது ஏற்படும் உணர்ச்சிகளால் அட்ரினலின் (அக்ழ்ங்ய்ஹப்ண்ய்ங்), கார்டிசோன் (இர்ழ்ற்ண்ள்ர்ய்ங்) எனும் சுரப்புகள் மிகுந்து சுரக்கும்.

இவைதான் ஆஸ்துமாவினால் அவதிப்படும் நோயாளிகளுக்கு மருந்தாகத் தரப்படும் ஹார்மோன்கள். இயற்கையிலேயே உடலுக்கு உள்ளேயே கிடைக்கும் ஹார்மோன்களைப் பெறும் வகையில் உறவு கொண்டு நலம் பெறலாமே. மருந்துகளோடு உறவும் இருந்தால், நன்மை அதிகமாகும்.

❤ இல்வாழ்வு--ஐம்புலன்களுக்கு நிகரானது
------------------------------------
பார்த்துப் பரவசப்படுதல், கேட்டு மகிழ்தல், அணைத்து ஆனந்தப்படுதல், அனுபவித்துச் சுவைத்தல், முகர்ந்து கிறங்குதல் போன்ற ஐம்புலன் இன்பமும் ஒருசேர அனுபவிக்க உகந்த முறையிலேயே மனித உடல் படைக்கப்பட்டுள்ளது. இதைத்தான் ""கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள'' என வள்ளுவர் கூறியுள்ளார். அதாவது, கண், காது, மெய், வாய், மூக்கு ஆகிய ஐம்புலன்களாலும் ஒட்டுமொத்தமாக அடையக்கூடிய பேரின்பம், "ஒண்டொடியாளிடம்' (மனைவியிடம்) உள்ளது என்று வள்ளுவர் அன்றே காதல் உணர்வை விவரித்துள்ளார்.

❤ பால்வினை நோய்கள்-உஷார்
------------------------------------
"கொனோரியா', "சிபிலிஸ்' என பால்வினை நோய்கள் பல உண்டு. சில பால்வினை நோய்கள் உடனே வெளிப்படும்; சில பல நாள்களுக்குப் பின் தெரியவரும்; சில பல மாதங்களுக்குப் பிறகு, வருஷங்களுக்குப் பிறகு தொல்லை கொடுக்கும். "கொனோரியா' எனும் நோய் சிறுநீர் வெளிவரும் துவாரத்தை குறுகலாக்கி சிறுநீர் வரும் வழியில் அடைப்பை ஏற்படுத்தும்.

"சிபிலிஸ்' எனும் நோய் ஆண்-பெண் குறியில் புண்ணை ஏற்படுத்தும் மிகக் கொடிய நோய். இவற்றையெல்லாம்விட ஆளையே உருக்குலைக்கும் எய்ட்ஸ் மிகவும் கொடியது. பலர் இந் நோய்களை மறைத்து தகாத உறவை மேற்கொள்வார்கள் என்பது உறுதி. எனவே திருமணம் ஆகாத இளம் பருவத்தினரே---திருமணம் வரை வாழ்க்கையில் முன்னேறும் வழியைப் பாருங்கள். சொந்தத் துணைக்காகப் பொறுத்திருங்கள். அது என்றும் சுகமே.

❤ திருமணம் ஒரு சிறையா❓
------------------------------------
திருமணம் ஒரு சிறை. அதைச் செய்துகொண்டு ஒருவனிடம் அல்லது ஒருத்தியிடம் வாழ்நாள் முழுவதும் அடிமையாவதா? சொந்த சுதந்திரத்தை ஏன் பலி கொடுக்க வேண்டும்? எதைச் செய்ய வேண்டும் என்றாலும் அடுத்தவரின் அனுமதிக்காக ஏன் காத்திருக்க வேண்டும்? ---இவை இன்றைய கல்வி அறிவு பெற்று சுயமாகச் சம்பாதிக்கும் பெரும்பாலான பெண்கள், சில இளைஞர்களின் கேள்விக் கணைகள். திருமணத்தை விரும்பாமல் முதிர் கன்னிகளாக வாழும் சில பெண்களும் உள்ளனர்.

கணவன்-மனைவி உறவு என்பதெல்லாம் அர்த்தமற்ற சமூகப் போர்வைகள். இந்தப் பந்தம் இன்றியே ஆணும் பெண்ணும் சேர்ந்து கலந்து வாழலாமே என்ற தவறான சிந்தனைகள் உருவாகியுள்ள காலம் இது. ஆனால், குடும்ப வாழ்க்கையெனும் இல்லறம்தான், இருப்பதிலேயே சிகரமான அறம் என்பது வள்ளுவரின் கூற்று. இல்லறத்தால் எள்ளளவும் தீமை இல்லை.

💘 வாழ்க்கைக்கு அர்த்தம் வேண்டுமா❓
------------------------------------
இப் பிறப்பும் ஒருமுறைதான். இல் வாழ்க்கையும் ஒருமுறைதான். அறியா மழலைப் பருவம், அறியும் கல்வித் தகுதிகள் பெறும் காலம், உறங்கிக் கழிக்கும் காலம், பொருள்கள் தேடலுக்காக ஓடோடி உழைக்கும் காலம், நோய் நொடிகள் தாக்கும் காலம், ஒன்றும் செய்ய முடியாமல் முடங்கிப் போகும் முதுமைக் காலம் என்று நம் வாழ்நாளில் கழிந்துபோகும் காலத்தைக் கணக்கிட்டால், வாழ்க்கை இவ்வளவு குறுகியதா என்ற மலைப்பு ஏற்படும்.

அறம் என்பதே குடும்ப வாழ்க்கைதான் என்று வள்ளுவரே சிறப்பிக்கும் இல்லறத்தைப் புறக்கணிப்பது வாழ்க்கையையே புறக்கணிப்பதாகும். இல்லறம் என்ற குடும்ப அறம், திருமண அறம் வாழ்க்கையின் முழுமைக்கு வித்திடுகிறது. வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கொடுக்கிறது.

♒ இது நோய் அல்ல❗
------------------------------------
ஆண், பெண் சேர்வதற்கு முன்பே விந்து வெளியாகும் நிலை பல ஆண்களிடம் பொதுவாகக் காணப்படுகிறது. மோக உணர்வு திடீரென அதிகமாவதே இதற்குக் காரணம். பல நாள்களுக்குப் பிறகு தொடர்பு கொள்வதால் அதுவரை அடக்கி வைக்கப்பட்ட மோக, தாக உணர்வுகள் கட்டுக்கடங்காமல் தலைதூக்கி நிற்கும். இதனால் ஆண்களுக்கு விந்து சீக்கிரம் வெளியேறும்.

இதனால்தான் ஆண் உறுப்பில் விரைவில் விறைப்பு போய் விடுகிறது என்று மனம் கலங்குவர். இதை ஒரு பெரிய குறையாகக் கருதத் தேவையில்லை. மீண்டும் மீண்டும் உறவு வைத்துக் கொள்வதால், நாளடைவில் இப் பிரச்சினை சரியாகிவிடும். இது நோய் அல்ல. மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதிலும் தவறில்லை.

♒ கரு உருவாகும் அதிசயம்❗
------------------------------------
ஒரு ஆணுக்கு 2 முதல் 5 மில்லி லிட்டர் விந்து உற்பத்தியாகிறது; ஒரு மில்லி லிட்டர் விந்தில் 3 கோடி முதல் 5 கோடி உயிர் அணுக்கள் இருக்கும். உடலுறவுக்குப் பின், இந்தக் கோடி உயிர் அணுக்கள் அணி வகுத்துச் செல்ல, மாதத்தில் ஒரு முறை மட்டுமே வெளிவரும் பெண் முட்டை மட்டும் சுயம்வரம் போல் தனித்து நின்று கரு உருவாகிறது.

அதாவது ஒரே ஒரு உயிர் அணுவுடன் மட்டும் பெண் முட்டை சேர்ந்துவிட்டு, மற்ற கோடி உயிர் அணுக்களை அழித்து விடுகிறது. இந்த அதிசயம் கர்ப்பப் பைக்குள் கண்ணுக்கும் கருத்துக்கும் தெரியாத மாய சக்திபோல் நிகழ்கிறது.

💊 "முட்டைக்கு' கணக்கு உண்டு
------------------------------------
பெண்ணுக்கு மாதத்தில் ஒரு நாள் முட்டை வெளியேறுவதில் கணக்கு உண்டு. மனைவிக்கு மாதவிலக்கு வந்து எத்தனை நாளிலிருந்து எத்தனை நாள் வரையில் தொடர்புகொண்டால் கருத்தரிக்க வாய்ப்பு உண்டு என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். பொதுவாக பெண்களுக்கு 28-30 நாள்களில் மாதவிலக்கு வருவது உண்டு.

அப்படி முறைப்படி தவறாமல் வந்துகொண்டு இருந்தால், அவர்களுக்கு 14, 16 நாள்களில் கருப்பையிலிருந்து பெண் முட்டை வெளியாகும். எனவே நான்கு நாள்கள் முன்பும், பின்பும் அதாவது 10-ம் நாளிலிருந்து 20 நாள்கள் வரை தொடர்ந்து உடல் உறவு வைத்துக் கொள்வதன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு ஏற்படும். ஆனால் பெண்களுக்கு மாதவிலக்கு கோளாறு இருந்தால், இந்தக் கணக்கு எடுபடாது.

💊 "சமையல் அறையும்' முக்கியம்
------------------------------------
இல் வாழ்க்கையில் கட்டில் அறையைப் போன்று சமையல் அறையும் முக்கியப் பங்கு வகிப்பதை மனைவி மறந்துவிடக் கூடாது. உணவில்லையென்றால் உல்லாசம் பொங்காது; சல்லாபம் நிலைக்காது. உடல் உறவுக்கு உணவு மிகவும் அவசியமானது. எனவே உணவின்றி உறவு இல்லை; உறவின்றி உணர்வில்லை; உணர்வின்றி உயிர் இல்லை. 

💓 #இல்லறம்_சிறப்படைய...💓

இல்லறம் நல்லறமாகச் சிறப்படைய தம்பதியினர் இருவரும் என்ன செய்ய வேண்டும்❓

🚹 #கணவன்… செய்ய வேண்டியவை❓

மனைவியைத் தவிர பிறர் எவரையும் நாடக்கூடாது; 

மனைவியை அன்புடன் நடத்த வேண்டும்; 

சிறு சிறு குறைகளை பெரிதுபடுத்தி புண் படுத்தும் சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

🚺#மனைவி_செய்ய_வேண்டியவை❓

கணவனை கண்ணும் கருத்துமாக உபசரிக்க வேண்டும்; 

அவனுக்கு நல்ல தோழியாக, ஆசானாக, தனியறையில் நல்ல இணையாக, நல்ல வழிகாட்டியாக நடந்துகொள்ள வேண்டும்; 

கணவனுக்கு ஊக்கம் தந்து, மனம் அலைபாயாமல் தன்னிடமே நிலைக்குமாறு அவரை மகிழ்வித்து, தானும் மகிழ்ந்து வாழ வேண்டும். 

குறிப்பாக எந்த விஷயத்துக்கும் பதற்றப்படாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். 

பதற்றம் இல்லையேல் வாக்குவாதம், சண்டையும் இருக்காது.