40 நாட்களில் உங்கள் வயிற்றிலிருக்கும் தொப்பையை கரைக்கக்கூடிய சக்தி இந்த பொருளுக்கு உண்டு?

40 நாட்களில் உங்கள் வயிற்றிலிருக்கும் தொப்பையை கரைக்கக்கூடிய சக்தி இந்த பொருளுக்கு உண்டு? 

அதை எப்படி பயன்படுத்துவது தெரியுமா? 

இன்று மாறி இருக்கும் இந்த உலகில் பெரும்பாலானவர்களுக்கு வயது வித்தியாசம் கூட இல்லாமல் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை உடல் எடை அதிகரிப்பது ஆகும். ஆண், பெண், குழந்தைகள் கூட சீரான அளவுகளில் தன்னுடைய உடல் எடையை வைத்துக் கொள்வதில்லை. இயற்கையாக நாம் சாப்பிடும் அன்றாட உணவில் இருந்து வந்த ஆரோக்கியம், இப்போது குறைந்துள்ளதால் வந்த மாற்றம் தான் இது! 40 நாட்களில் உங்களுடைய பெரிய தொப்பையை கரைக்கக் கூடிய சக்தி இந்த ஒரு பொருளுக்கு உண்டு! அது எந்த பொருள்? அதை எப்படிப் பயன்படுத்துவது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம். 

உடல் எடையை கணிசமாக குறைக்க கூடிய ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. ‘இஞ்சிக்கு மிஞ்சிய மருந்து இல்லை’ என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடிய இந்த இஞ்சி வயிற்றில் இருக்கும் கழிவுகளை நீக்கி வயிற்றுப் பிரச்சினைகளைத் தீர்க்கும் அதீத சக்தி படைத்தது. இஞ்சியில் இருக்கும் இந்த காட்டம், நம் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கு உரிய அருமருந்தாக செயல்படுகிறது.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஆண், பெண் வித்தியாசமின்றி தாராளமாக அன்றாட உணவில் இந்த இஞ்சியை இப்படி பயன்படுத்தலாம். இஞ்சியை முதலில் இடித்து அதிலிருந்து சாற்றை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இஞ்சி சாறை அடுப்பில் வைத்து லேசாக சுண்ட விட வேண்டும். கொஞ்சம் சுண்டியதும், அதில் தேவையான அளவிற்கு தேன் சேர்த்து இரண்டு நிமிடத்தில் அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த இஞ்சி சுரசத்தை சாப்பிடுவதற்கு முன்பு காலையில் ஒரு கரண்டி சாப்பிட வேண்டும். அதற்குப் பிறகு சிறிது நேரம் கழித்து நீங்கள் சாதாரணமாக மற்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். அதன் பிறகு மாலை நேரத்தில் வயிறு காலியாக இருக்கும் போது ஒரு கரண்டி சாப்பிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் சுட வைத்து குடிக்க வேண்டும். இதை சாப்பிட்ட உடன் சுடு தண்ணீர் தான் கண்டிப்பாக குடிக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இது போல தொடர்ந்து 40 நாட்கள் கஷ்டப்பட்டு நீங்கள் செய்து பாருங்கள், நிச்சயம் நல்ல ஒரு மாற்றம் உங்கள் உடலில் தெரிய ஆரம்பிக்கும்.

இதைத்தான் சாப்பிடுகிறோமே என்று கண்ட கண்ட பொருட்களையும், எண்ணெயில் பொரித்த பொருட்களையும் நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் ஒன்றும் செய்ய முடியாது! உணவு கட்டுப்பாடு என்பது இல்லாமல், எந்த ஒரு விஷயத்திலும் உடல் எடையைக் குறைத்து விட முடியாது. எனவே மூன்று வேளை சாதாரண உணவுடன், இதை 40 நாட்கள் செய்து பார்த்தால் நல்ல ஒரு மாற்றம் தெரியும். அது மட்டுமல்லாமல் தினமும் ஏதாவது ஒரு டம்ளர் அளவிற்கு வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு அல்லது பூசணி சாறு இந்த மூன்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து பருகி வர வேண்டும். உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்கி தேவையற்ற தசைகளை கரையச் செய்யும் இந்த அற்புத சாற்றுக்கு ஈடு இணை இல்லை எனவே உங்களால் எது முடியுமோ, அந்த சாற்றை தினமும் ஒரு டம்ளர் இந்த நாற்பது நாட்கள் பருகி வாருங்கள். 40 நாட்களில் இந்த இரண்டு விஷயத்தையும் செய்பவர்களுக்கு எந்த காரணத்தினால் தொப்பை இருந்தாலும், அது உடனே கரைந்து விடும்.