பெண்கள் தினமும் 10 பூசணி விதையாவது சாப்பிட வேண்டும்... ஏன் தெரியுமா...

பெண்கள் தினமும் 10 பூசணி விதையாவது சாப்பிட வேண்டும்... ஏன் தெரியுமா...

பூசணி ஒரு மருத்துவ குணம் கொண்ட தாவரம். அதன் காய் மட்டும் சுவையானதல்ல. அதன் பூ, காய், தண்டு, இலை மற்றும் வேர் என அனைத்தும் ஆயுர்வேதத்தில் மருந்துக்காகப் பயன்படுகின்றன. இதன் விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்திருக்கிறது.

ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று தோன்றும்போது வறுத்த பூசணி விதைகளைச் சாப்பிடலாம். அப்படி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும், குறிப்பாக பெண்களுக்கு என்னென்ன பிரச்சினைகளை சரிசெய்யும் என்று பார்க்கலாம்.

​டைப் 2 நீரிழிவு :

சமீபத்தில் டைப் 2 நீரிழிவால் பாதிக்கப்படுபவர்களில் பெண்கள் அதிகமாக இருக்கின்றனர். குறிப்பாக கர்ப்ப காலத்தில் அதிகம் பேர் நீரிழிவால் பாதிக்கப்படுகிறார்கள்.

பொதுவாக நீரிழிவு பிரச்சினையைின் மிக முக்கியக் காரணமே மோசமான உணவுப் பழக்கங்கள் தான். வீட்டில் மற்றவர்கள் சாப்பிட்டு மீந்து போவதை நிறுத்திவிட்டு பெண்கள் ஆரோக்கியமாகச் சாப்பிடப் பழக வேண்டும்.

டைப் 2 நீரிழிவை கட்டுப்படுத்தும் தன்மை மஞ்சள் பூசணியில் இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் பெண்கள் மஞ்சள் பூசணி விதைகளை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். அப்படி செய்வதால் நீரிழிவு கட்டுக்குள் இருக்கும்.

​பிசிஓஎஸ் :

சமீபத்தில் பெண்கள் மிக அதிக அளவில் பாதிக்கப்படும் பிரச்சினைகளில் ஒன்றாக இந்த பிசிஓஎஸ் இருக்கிறது.

பிசிஓஎஸ் என்பது கருப்பைக்குள் இருக்கும் சினைப்பையில் உருவாகிற நீர்க்கட்டிகள். இந்த பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம் பிரச்சினையால் பெண்களுக்கு குழந்தை வளம் பாதிக்கப்படுவது, தைராய்டு பிரச்சினை, உடல் பருமன் பிரச்சினை ஆகியவையும் ஏற்படுகின்றன.

இந்த பிரச்சினைகள் இருக்கிற பெண்கள் தங்களுடைய உணவுப் பழக்கத்தில் பூசணி விதையை சேர்த்துக் கொள்வது நல்லது.

​முடி வளர்ச்சியை அதிகரிக்க :

பூசணி விதைகளில் அதிக அளவில் ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன. குறிப்பாக பிடாசின் என்னும் அமினோ அமிலம் அதிக அளவில் நிறைந்திருக்கிறது.

அதோடு பூசணி விதைகளில் உள்ள வைட்டமின் சி தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டுவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

பூசணி விதையில் இருந்து கிடைக்கும் எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தலைக்குப பயன்படுத்தினால் தலைமுடி நீண்டு வளரும்.

​சிறுநீர்த் தொற்று :

பூசணி விதையில் உள்ள ஆன்டி - ஆக்சிடண்ட்டுகளும் ஒமேகா கொழுப்பு அமிலங்களும் இதயத்தை மட்டும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதில்லை.

இது உடல் சூட்டைக் குறைத்து உடலுக்குக் குளிர்ச்சியை உண்டாக்கி, சிறுநீர்ப் பாதைத் தொற்றைச் சரிசெய்ய உதவுகிறது.

குறிப்பாக. வெயில் காலத்தில் பூசணி விதையை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

​கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த :

பூசணி விதை உடலில் உள்ள, உடலுக்குத் தேவையான அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்களின் செயல்பாட்டை ஊக்குவித்து, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்டிராலைக் குறைக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உயர் கொலஸ்ட்டிராலைக் குறைக்கவும் இந்த பூசணி விதை உதவுகிறது.

​எலும்புகள் வலிமையாக :

உடலில் கால்சியம் குறைபாடு அதிகமாகும்போது எலும்புகள் பலவீனமாகும். குறிப்பாக, 40 வயதைக் கடக்கும் பெண்களுக்கு இந்த பிரச்சினை மிக அதிகமாகவே இருக்கும்.

பூசணி விதைகளில் உள்ள அமினோ அமிலங்களும் வைட்டமின் சியும் உடலில் கால்சியத்தை அதிகமாக உறிஞ்சப் பயன்படுகிறது. இதனால் மெனோபஸ் சமயங்களில் ஏற்படும் மூட் ஸ்விங் மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த பூசணி விதை உதவுகிறது.

​உயர் ரத்த அழுத்தம் :

நம்முடைய உடல் குறிப்பிட்ட அளவு மக்னீசியத்தை உற்பத்தி செய்து கொள்ளும். அதேசமயம் அதன் அளவு அதிகரிக்கும் உடல் சில ஆரோக்கியக் குறைபாடுகளைச் சந்திக்கிறது. ஆனால் பூசணி விதையில் உள்ள மக்னீசியம் உடலில் உள்ள மக்னீசியத்தின் அளவைக் கட்டுக்குள் வைக்கிறது.

இவற்றில் உள்ள கொழுப்பு அமிலங்கள் உடலில் உள்ள கொலஸ்டிராலைக் கட்டுப்படுத்துவதோடு, நரம்பு மண்டலத்தை அமையதியடையச் செய்கிறது. இதனால் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இயல்பாகவே கட்டுக்குள் இருக்கும்.