தயிர் `Brain Food` என அழைக்கப்படுவதன் காரணம் தெரியுமா..!!

தயிர் `Brain Food` என அழைக்கப்படுவதன் காரணம் தெரியுமா..!!

தயிரில் பல விதமான சத்துக்களும் பல அற்புதமான மருத்துவ குணங்கள் இருப்பதை அறிந்து நமது முன்னோர்கள், அதனை உணவில் அதிகம் பயன்படுத்தினர். அதுவும் தென்னிந்திய உணவில் தவிர்க்க முடியாத உணவு என்றல் அது தயிர் சாதம் தான்.

நினைவாற்றலை பெருக்கும்  :
   
மூளையை அமைதி படுத்துவதோடு, நினைவாற்றலையும் வழங்கும் டிரிப்டோபன் என்ற வேதிப்பொருளை கொண்டது தயிர். டிரிப்டோபன் காரணமாக நியூரான்கள் ரீசார்ஜ் செய்யப்பட்டு, மூளையில் சிந்தனையை தூண்டப்படுகிறது. அதனால் தான் தயிர் பிரெயின் புட் என அழைக்கப்படுகிறது. அது மட்டுமல்ல வேறு பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.

புரோபயாடிக் தன்மை :
   
தயிரில் உள்ள புரோபயாடிக் தன்மை செரிமான உறுப்புகள் சிறப்பாக செயல்பட உதவுகின்றன. தயிர் ஜீரணிக்க எளிதானது.  பால் தயிராக உறையும் போது அதில் உள்ள லாக்டோஸ் உடைக்கப்படுவதால் லாக்டோஸ் அலர்ஜி அல்லது பாதிப்பு ஏற்படுபவர்களும் தயிரை  உட்கொள்ளலாம்.

பற்கள், எலும்புகளுக்கு வலு சேர்க்கும் :
   
பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் நிறைந்த, தயிர் பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக்குகிறது. இது கீல்வாதத்தைத் தடுக்கிறது

இதயத்திற்கு இதமானது :
   
தினமும் தயிர் சாப்பிடுவது கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும், இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. இதனால், இதயத்தை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது :
   
தயிரில் உள்ள எளிதில் ஜீரணிக்கக்கூடிய புரதம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை கலந்த தயிர் உணவை தவிர்ப்பது நல்லது.