தேனில் ஊற வைத்த பேரிச்சம்பழம்! சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தேனில் ஊற வைத்த பேரிச்சம்பழம்! சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் தான் பேரிச்சம்பழம். இது ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரிச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. 

 பேரிச்சம் பழத்தில் கார்போ ஹைட்ரேட், க்ளுகோஸ், ப்ரக்டோஸ், நார்ச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள் (தாது உப்புகள்) மற்றும் பாலிபீனால்கள், பீனாலிக் அமிலம் நிறைந்துள்ளது. பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்குகின்றது. 

இவ்வளவு நன்மைகள் நிறைந்த பேரிச்சம்பழத்தினை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதனால் பல நன்மைகள் உண்டாகும்.  

 அந்தவகையில் தேனில் ஊற வைத்த பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். 

எடுத்துக் கொள்ளும் முறை  :

ஒரு கண்ணாடி பாட்டிலில் விதையில்லாத பேரிச்சம் பழத்தைப் போட்டு, பேரிச்சம் பழம் மூழ்கும் அளவு தேன் ஊற்றி மூடி வைத்து, 3 நாட்கள் கழித்து சாப்பிட வேண்டும்.

 தேனில் ஊற வைத்த பேரிச்சம் பழத்தை தினமும் காலை மற்றும் மாலையில் என ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலினுள் மாற்றம் தெரியும். 

நன்மைகள் :

   பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், இரத்த நாளங்களில் உள்ள அடைப்புக்கள் நீக்கப்பட்டு, உடலினுள் இரத்த ஓட்டம் ஆரோக்கியமான அளவில் இருக்கும்.

  பேரிச்சம்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், உடலில் இரத்தத்தின் அளவு அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து விரைவில் விடுபடலாம். 

  தேனில் ஊற வைத்த பேரிச்சம்பழத்தை சாப்பிடுவதன் மூலம், மலச்சிக்கல் நீங்கி, குடலியக்கம் சீராக்கப்படும். முக்கியமாக இதனால் குடல் புற்றுநோய் வரும் அபாயம் தடுக்கப்படும்.

 பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படுவது தடுக்கப்பட்டு, உடல் எடையை வேகமாக குறையும்.  

 தேனில் ஊற வைத்த பேரிச்சம்பழம், இதய செயல்பாட்டை ஆரோக்கியமாக வைத்து, இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும்.