குழந்தையின் எடையை அதிகரிக்கும் நேந்திரம் பொடி

குழந்தையின் எடையை அதிகரிக்கும் நேந்திரம் பொடி 

ஆரோக்கிய நன்மைகள் பின்வருமாறு :-
பீமன் கைக்குழந்தை என்று இந்த பொடியை அழைப்பர்:-

1. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
2. உடல் எடையை அதிகரிக்க உதவுவதில் சிறந்தது.
3. கார்போஹைட்ரேட், விட்டமின்கள், தாதுக்கள் ஆகியவை நிறைந்துள்ளன.
4. கரோடினாய்டு சத்து இருப்பதால் பனி மற்றும் மழை காலங்களில் கூட குழந்தைக்கு நேந்திரம் கூழைக் கொடுக்கலாம். சளி பிடிக்காது.
5. ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பசும்பால் கலந்து நேந்திரம் கூழை செய்து கொடுக்கலாம்.
6. ஒரு நாளைக்கு ஒரு முறை இந்த கூழைக் கொடுக்கலாம். காலை உணவாகக் கொடுப்பது சிறப்பு.
இருமல், சளி போன்ற எதுவும் பிடிக்காது என்பதால் தாராளமாக இதை உங்கள் குழந்தைக்கு கொடுக்கலாம்.
7. செரிமான கோளாறுகளை நீக்கும்.
நார்ச்சத்து நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் இருக்காது.

 சாப்பிடும் முறை
 நேந்திர பழக்கஞ்சி

தேவையானவை
நேந்திரம் பொடி – 2 டேபிள் ஸ்பூன்
பனை வெல்லம் அல்லது கருப்பட்டி – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்

செய்முறை
ஒரு பவுலில் நேந்திரம் பொடியை போட்டு அதில் சாதாரண தண்ணீர் சிறிதளவு ஊற்றி கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் பனை வெல்லம் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, வெல்லத்தைக் கரைக்கவும்.
அதேசமயம் இன்னொரு பாத்திரத்தில் கரைத்து வைத்த நேந்திரம் பொடி கலவையைப் போட்டு மிதமான தீயில் வைத்துக் கிண்டவும்.
கலவையை கிண்டிக்கொண்டு இருக்கும்போதே நெய் ஊற்றி, மேலும் நன்கு கிளறவும்.
பின்னர் கரைத்து வைத்த வெல்லத்தைக் கொட்டி கலக்கவும்.
2-3 நிமிடங்களில் நேந்திரம் கூழ் வெந்துவிடும்.
இந்த கூழ் இளஞ்சூடாக இருக்கும்போது, குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.