பல்வேறு நோய்களை தீர்க்கும் அற்புத மருத்துவ குணம் நிறைந்த நன்னாரி வேர் !!
பல்வேறு நோய்களை தீர்க்கும் அற்புத மருத்துவ குணம் நிறைந்த நன்னாரி வேர் !!
நன்னாரி வேர் சித்த மருத்துவத்தில்
அதிகமாக பயன்படுத்தப் படுகிறது. உடலில் உள்ள சூட்டை குறைக்க, சிறுநீர் கடுப்பு, தலவலி, வாதநோய்கள், பித்தம், செரிமான கோளாறு, பால்வினை நோய்கள் ஆகியவற்றிக்கு சிறப்பாக செயல்படும்.
நன்னாரி வேரை பொடியாக்கி சம அளவு கொத்தமல்லி தூளை சேர்த்து பாலில் கலந்து குடித்து வர பித்த நோய்கள், வயிறு, குடலில் உண்டாகும் நோய்கள் அனைத்தும் தீரும்.
நன்னாரி வேரை பொடியாக்கி 5 கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வர இரத்தத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். மேலும் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கிறது.
நன்னாரி வேரை இடித்து நீரில் போட்டு அதில் சிறிது கருப்பட்டி கலந்து அந்த நீரை குடிக்க செரிமான கோளாறுகள் நீங்கும்.
நன்னாரி இலை, வேர் இரண்டையும் நன்றாக அலசி நெய் விட்டு வதக்கி மிளகு, உப்பு, புளி சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும். மேலும் பித்தத்தையும் குறைக்கும்.
நன்னாரி சூரணத்தை 5 கிராம் அளவு எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து சாப்பிட்டு வர நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, மூலச்சூடு, வறட்டு இருமல் ஆகியவை தீரும்.
நன்னாரி வேரை நன்றாக உலர்த்தி பொடியாக்கி 2 கிராம் அளவு தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அதிக பித்தம் தீரும். இந்த பொடியை கற்றாழை சாறுடன் கலந்து சாப்பிட வண்டு கடி பாதிப்பு நீங்கும்.