வெண்டைக்காய் ஊறல் நீர் தரும் எண்ணற்ற மருத்துவ பலன்கள்!!

வெண்டைக்காய் ஊறல் நீர் தரும் எண்ணற்ற மருத்துவ பலன்கள்!!

வெண்டைக்காய் நீர் தரும் எண்ணற்ற மருத்துவ பலன்களை பற்றி இப்பதிவில் காண்போம். எலும்புகளை வலுவாக்க 8 மணி நேரம் ஊற வைத்துத் தினமும் காலையில் கப் குடித்தால் போதும் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்குகிறது.

வெண்டைக்காய் நீர் என்பது வெண்டைக்காயை வேக வைத்தோ அல்லது அரைத்து எடுக்கும் நீரோ கிடையாது. வெண்டைக்காயை ஊற வைத்திடும் நீர் தான் அது.

முதலில் மூன்று, நான்கு வெண்டைக்காய்களை எடுத்துத் கொள்ளுங்கள், அதனை சுத்தமாக கழுவி தலைப்பகுதியையும் வால் பகுதியையும் வெட்டி விடுங்கள். பின்னர் அதனை நீளவாக்கில் வெட்டி சற்று பெரிய பாத்திரத்தில் போட்டு வெண்டைக்காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். குறைந்தது எட்டு மணி நேரம் வரை ஊற வேண்டும். ஒரு இரவு ஊறவைத்து விட்டு மறுநாள் காலையில் அந்த நீரை குடிக்கலாம். இந்த நீர் எண்ணற்ற மருத்துவ பலன்களை கொண்டிருக்கிறது.

மருத்துவ பலன்கள்:

இதில் இருக்கும் ஃப்லோட் கர்ப்பிணிப் பெண்களுக்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் நல்லது.

எலும்பு தொடர்பான நோய்கள், கை கால் மூட்டு வலி வராமல் தடுத்திடும். எலும்புகளை வலுவாக்க இந்த வெண்டைக்காய் சாறு தினமும் பருகலாம்.

நம் உடலில் இருக்கும் டாக்ஸின்களை நீக்க உதவுகிறது இதனால் உணவு செரிமானம் சீராக நடைப்பெற்று வயிறு தொடர்பான கோளாறுகள் சரியாகும்.

வெண்டைக்காய் நீர் தொடர்ந்து குடித்துத் வர புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். வெண்டைக்காயில் இருக்கும் லெக்டீன் புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. அதோடு அல்சைமர் நோய் பாதிப்பினை தீவிரமடையாமல் வைத்திருக்க உதவுகிறது.

மேலும் குடலிறக்கம் போன்ற நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம். ரத்த சோகையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இந்த நோய் மிகச்சிறந்த பலன்களை தரும்.

இந்த நீரை குடிப்பதனால் ரத்த செல்கள் வேகமாக உற்பத்தி ஆக உதவுகிறது.
இதனால் ரத்த சோகை கட்டுப்படும். இதில் அதிகப்படியான மினரல்ஸ் மற்றும் விட்டமின்கள் இருக்கின்றன.

அவற்றில் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சியும் அடங்கும். அதோடு இதில் இருக்கும் மக்னீசியம் ரத்தத்தை அதிகப்படுத்துத்கிறது.

வெண்டைக்காய் நீர் தொடர் இருமல், வறட்டு இருமல் இருப்பவர்கள் தொடர்ந்து வெண்டைக்காய் ஊற வைத்த நீரை குடித்துத் வர நல்ல பலன் கிடைக்கும்.

இதில் இருக்கும் ஆன்ட்டி பாக்டீரியாக்கள் மற்றும் ஆண்ட்டி செப்டிக் துகள்கள் தொண்டையில் ஏற்பட்டிருக்கும் பாக்டீரியா தொற்றினை நீக்கச் செய்திடும்.

பலரையும் பயமுறுத்துத்ம் ஓர் வியாதி என்றே சொல்லலாம்.வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் உடலில் இருக்கும். தண்ணீர் சத்து எல்லாம் சட்டென்று குறைந்து விடுவதால் ஒருவர் சுயநினைவின்றி விழுவதற்கும் காரணமாக அமைந்திடும். அதனால் வயிற்றுப் போக்கு என்றால் கொஞ்சம் ஜாக்கிரதை யாக இருக்க வேண்டியது அவசியம்.

நம் உடலில் இருந்து அதிகப்படியான மினரல்ஸ்கள் இதனால் வெளியிடும். அதனை சரிகட்டவும் வயிற்றுப் போக்கினை நிறுத்தவும் குடிக்கலாம்.