நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறதா சாத்துக்குடி பழம் !!
நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறதா சாத்துக்குடி பழம் !!
சாத்துக்குடி காய்ச்சல், அம்மை, பேதி, சளி, இருமல் என எல்லா நோய்க்கும் நல்ல பலத்தை கொடுக்கும். சாத்துக்குடியில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சாத்துக்குடி பழத்தில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடியை பழமாகவோ, சாறாகவோ கொடுப்பது மிகவும் நல்லது. சாத்துக்குடி அதிகளவு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவாகும். சாத்துக்குடி சாறு சாப்பிட்டு வர மூட்டுவாதம், எலும்பு பலவீனம் நீங்கும்.
சாத்துக்குடி பசியின்மை, வாந்தி, குமட்டலை விரட்டும். ஒரு டம்ளர் நீரில் இஞ்சி துண்டுகளை தட்டி போடவும். அதனுடன் சாத்துக்குடி சாற்றை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதன்பின் அதை வடிகட்டி எடுத்து தேன் சேர்த்து குடித்து வர வேண்டும். இது வயிற்று புண்களை அகற்றும். செரிமானத்தை சீராக்கும். பசியை தூண்டி, வாந்தியை தடுக்கும். ருசியின்மையை போக்கும். வயிற்று வலியை குணமாகும்.
சாத்துக்குடியில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால் சிறுநீரக கோளாறுக்கு மருந்தாகிறது. குறைவான எரிசக்தி கொண்டதால், உடல் எடை கூடுவதை தடுக்கும். உடலுக்கு பலத்தை கொடுக்கும். ஈறுகளில் ஏற்படும் வீக்கம், பற்கள் ஆடுவது, வாய்ப்புண் போன்றவற்றிருக்கு சிறந்த மருந்து சாத்துக்குடியாகும்.
ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது.
சாத்துக்குடி சாற்றில் நீர்விட்டு வாய் கொப்பளித்தால், வாயில் துர்நாற்றம் ஏற்படுத்தும் கிருமிகள் வெளியேறும், ஈறு வீக்கம் தணியும் மற்றும் பற்களுக்கு பலத்தை கொடுக்கும்.