இன்ஸ்டண்ட் க்ளோ.. பிரகாசமான சருமத்துக்கு

இன்ஸ்டண்ட் க்ளோ.. பிரகாசமான சருமத்துக்கு ’மஞ்சள்-தயிர்-தேன்’ கலந்த ஃபேஸ் பேக்.. எப்படி பயன்படுத்துவது?

பளபளப்பு இல்லாத மந்தமான சருமத்துடன் நாம் அனைவரும் போராடுகிறோம். உங்கள் தோல் வகைக்கு ஏற்றவாறு சமையலறையில் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு நீங்களே செய்யக்கூடிய ஃபேஸ் மாஸ்க் இங்கே உள்ளன.

இதை பயன்படுத்தி, உங்கள் பளபள சருமத்தை மீட்டெடுங்கள்!

தயிர் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக் :

இந்த ஃபேஸ் பேக் வீக்கத்தைக் குறைக்கவும், முகப்பருவை குணப்படுத்தவும், தோல் செல்களை மீண்டும் உருவாக்கவும் மற்றும் வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த மாஸ்க் உங்களுக்கு குறைபாடற்ற, ஆரோக்கியமான சருமத்தை இணையற்ற பிரகாசத்துடன் கொடுக்க முடியும். பார்ட்டிக்கு செல்வதற்கு முன் இதைப் பயன்படுத்துவது நல்லது. இயற்கையாகவே, பளபளப்பான சருமம் மேக்கப்பை மேம்படுத்தும்.

தேவையான பொருட்கள்:

2 தேக்கரண்டி தயிர்

1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்

எப்படி உபயோகிப்பது:

தயிரையும், மஞ்சள் தூளையும் நன்கு கலந்து பேஸ்ட் செய்து, சுத்தமான சருமத்தில், அப்ளை செய்து மெதுவாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து’ வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.

பலன்கள்: 
மஞ்சள் உடனடி பளபளப்பையும் பிரகாசத்தையும் தரும். இது சருமத்தை உள்ளே இருந்து சுத்தப்படுத்துகிறது மற்றும் அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தை ஆரோக்கியமாகவும், தொற்றுநோய்களிலிருந்து விலக்கவும் செய்கிறது.

குறிப்பு: 
மஞ்சளை அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் அது சருமத்தை அப்படியே மஞ்சளாக்கி விடும்.

தயிர் மற்றும் தேன் ஃபேஸ் பேக் :

இந்த ஃபேஸ் பேக் வறண்ட மற்றும் டிஹைட்ரேட்டிங்  சருமம் உள்ளவர்களுக்கு சிறப்பாக வேலை செய்யும். தேன்’ சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது மற்றும் நன்கு நீரேற்றப்பட்ட சருமம் தானாகவே பிரகாசமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். நிலையான நீரேற்றத்திற்கு, வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துவதை விட சிறந்த வழி எதுவுமில்லை. வறண்ட சருமம் எளிதில் வீக்கமடையும், எனவே, சருமத்தில் ஈரப்பதம் மற்றும் மென்மையான பொருட்களைப் பயன்படுத்துவது முக்கியம். ஒரு பேட்ச் சோதனை பரிந்துரைக்கப்படுகிறது.

தேவையான பொருட்கள்:

1 தேக்கரண்டி தயிர்

1 தேக்கரண்டி தேன்

எப்படி உபயோகிப்பது:

ஒரு கிண்ணத்தில் அனைத்து பொருட்களையும் கலந்து சுத்தமான முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

பலன்கள்: 
தயிர் சருமத்தில் நன்றாக இருப்பது மட்டுமின்றி, அதில் உள்ள லாக்டிக் அமிலம் மற்றும் புரோபயாடிக்குகள் வறண்ட சருமத்தை மென்மையாக்கி வீக்கத்தை தணிக்கும். தேன், மேலே குறிப்பிட்டுள்ளபடி, அழற்சி எதிர்ப்பு மற்றும் மிகுந்த ஈரப்பதத்தை வழங்குகிறது.

எந்தவொரு ஃபேஸ் பேக்கிற்கும்’ நீண்ட கால முடிவுகளைக் காட்ட, குறைந்தது மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு தொடர்ந்து பயன்படுத்துவது அவசியம்.

நீங்கள் புதிதாக ஒரு அழகு பராமரிப்பு வழக்கத்தை தொடங்கினால், அதை மிகைப்படுத்தாதீர்கள். ஆரம்பத்தில் ஏழு நாட்களுக்கு ஒருமுறை செய்வது நல்லது. உங்கள் சருமம் அதற்கு செட் ஆனபின், நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம்.

இருப்பினும், உங்கள் தோல் மருத்துவர் குறிப்பிட்ட எதையும் பரிந்துரைக்காத வரையில்’ எதுவும் இரண்டு முறைக்கு மேல் செய்யக்கூடாது.