தீராத தலைவலி,கழுத்துவலி, நரம்புவலி சரியாக நொச்சி இலை தைலம் தயாரிக்கும் முறை

தீராத தலைவலி,கழுத்துவலி, நரம்புவலி சரியாக நொச்சி இலை தைலம் தயாரிக்கும் முறை

தேவையான மூலிகைகள்

1.நொச்சிக் கொழுந்து – 40 கிராம்
2.பூ நாகம் – 40 கிராம்
3.மிளகு – 20 கிராம்
4.நல்லெண்ணெய் – 300 மி. லி
5.பசும்பால்– சிறிதளவு

செய்முறை

நொச்சிக் கொழுந்து, பூ நாகம், மிளகு இவற்றைப் பசும்பால் விட்டு அரைத்து கொள்ளவும்

அரைத்த இந்த கலவையை நல்லெண்ணையில் கலந்து மெழுகு பதமாகக் கொதிக்கவைத்து காய்ச்சி சுண்ட வையுங்கள்

காய்ச்சிய இந்த எண்ணெய் 4 நாள்களுக்கு ஒரு முறை தலைக்கு தேய்த்து ஊறவைத்து சுடுநீரில் குளித்து வர நீண்ட நாள் தலைவலி, கழுத்து வீக்கம், கழுத்து நரம்பு வலி முதலியன தீரும்.

குறிப்பு:

தைலம் தேய்த்து குளித்த அன்று புளி சேர்க்காமல் உணவு உட்கொள்ளவேண்டும். பகல் தூக்கம், வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.ஓய்வு நாளில் தேய்த்து குளியுங்கள் இதனால் உடல் சூடும் குறையும்...