சீரான சிவப்பழகு கொடுக்கும் சீரகம் !!!

முகத்தில் ஒரு சிறிய கருப்பு புள்ளியை தேடினாலும் கண்டுபிடிக்கவே முடியாது. சீரான சிவப்பழகு கொடுக்கும் சீரகம் !!!
 
சமையலறையில் இருக்கக்கூடிய சீரகம், வெந்தயம் இந்த இரண்டு பொருட்களை வைத்து நம்முடைய சரும அழகை மேம்படுத்திக் கொள்ள ஒரு சுலபமான குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுடைய முகத்தில் முகப்பரு, முகப்பரு வந்த இடத்தில் தழும்பு, பிக்மெண்டேசன் என்று சொல்லப்படும் கருந்திட்டுக்கள், கருவளையம் இப்படி எந்த பிரச்சினைகள் இருந்தாலும் சரி இந்த குறிப்பை ட்ரை பண்ணி பார்க்கலாம்.
 
ஒரு சிறிய கிண்ணத்தில் 1 டேபிள்ஸ்பூன் சீரகம், 1 டேபிள்ஸ்பூன் வெந்தயத்தை போட்டு ஒரு முறை கழுவி விட்டு, அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி இதை 8 மணிநேரம் ஊறவைத்து விடுங்கள். அதன் பின்பு ஊற வைத்த தண்ணீரோடு அப்படியே இந்த இரண்டு பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும். இதை விழுது போல அரைத்து ஒரு வடிகட்டியில் மூலம் வடிகட்டி சாறை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். (இந்த இரண்டு பொருட்களும் சேர்த்து அரைத்து வடிகட்டிய சாறு தான் நமக்கு தேவை.)

ஒரு சிறிய கண்ணாடி பாட்டிலில் ஒரு ஸ்பூன் அலோ வெற ஜெல் போட்டுக் கொள்ள வேண்டும். இந்த ஜெல்லுடன் நாம் எடுத்து வைத்திருக்கும், சீரகம் வெந்தயத்தில் இருந்து எடுத்த சாறை கொஞ்சம் கொஞ்சமாக, ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். லேசாக லிக்விட் பதில் நமக்கு ஒரு ஜெல் கிடைத்துவிடும். இதை அப்படியே மூடி போட்டு பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக்கொண்டால் 7 நாட்கள் வரை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு முகத்தை நன்றாக கழுவி விட்டு துடைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு தயாராக வைத்திருக்கும் இந்த ஜெல்லை முகம் முழுவதும் அப்ளை செய்து லேசாக மசாஜ் செய்து கொடுக்க வேண்டும். இது சிறிது நேரத்தில் முகத்தில் இருப்பதே நமக்கு தெரியாது. இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள்‌. மறுநாள் காலை எப்போதும் போல முகம் கழுவிக் கொள்ளலாம்.

தொடர்ந்து இந்த ஜெல்லை முகத்தில் போட்டு வர உங்களுடைய முகத்தில் இருக்கும் அத்தனை பிரச்சினைக்கும் படிப்படியாக தீர்வு கிடைக்கும். சொல்லப்போனால் உங்களுடைய முகம் மிருதுவாக மாறும். சிவப்பழகு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். முகத்தில்  எந்த இடத்தில் உங்களுக்கு பிரச்சனைகள் அதிகமாக உள்ளதோ, அந்த இடத்தில் மட்டும் கொஞ்சம் திக்காக இந்த க்ரீமை அப்ளை செய்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டுக்கு கண்ணுக்கு கீழே கருவளையம். வாய் பகுதியை சுற்றி மூக்கு பக்கத்தில் கருப்பு, இப்படி அந்த இடத்தில் இந்த கிரீமை நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்துகொள்ளலாம்.

சமையலறையில் நம் உணவோடு சேர்த்துக் கொள்ளக் கூடிய எல்லா பொருட்களும், நம்முடைய ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் நன்மை சேர்க்கக்கூடிவை. ஆக இந்த ஜெல்லை முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் ஏதாவது பிரச்சினை வந்து விடுமோ என்ற பயம் நமக்கு தேவை கிடையாது. 13 வயதிற்கு மேலே உள்ள ஆண் பெண் இருவரும் இதை பயன்படுத்தலாம். உங்களுடைய முகத்தில் இருக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் வரை தினமும் இதை பயன்படுத்துவதில் தவறு கிடையாது.