மருத்துவகுணம் கொண்ட பாதாம் பிசின்!

மருத்துவகுணம் கொண்ட பாதாம் பிசின்! எந்தெந்த நோய்களை போக்க உதவுகிறது தெரியுமா?

பாதாம் மரத்தில் இருந்து பசை போல வெண்மை கலந்த பழுப்பு நிறத்தில் வடியும் பிசினே பாதாம் பிசின் ஆகும்.
 
இந்த பிசின் பழங்காலத்தில் இருந்தே மருந்தாக பயன்படுத்தி வருகின்றது. பாதாம் பிசினில் அதிகப்படியான நுண்ணூட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.

அத்துடன் அதிக மருத்துவ குணம் கொண்டது கூறப்படுகின்றது. அந்தவகையில் பாதாம் பிசினால்  உள்ள நன்மைகள் என்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.

பாதாம் பிசினில் உள்ள தாதுக்கள் தோல் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்க்கு உறுதியாக நின்று உடலில் தாது (மினரல்ஸ்) பற்றாக் குறையை போக்குகிறது. தோல் வறட்சியை, வெடிப்புகளை குணமாக்கும்.

பெரும்பாலன காலங்கள் வெப்பமாகவே இருப்பதால் உடல் உஷ்ணம் அதிகமாகி அவதிக்கு ஆளாக்குகிறது, உஷ்ணத்தால் உடலில் நீர் பற்றாக் குறை ஏற்பட்டு சிலருக்கு வேறு சில உடல் நல பாதிப்புகளை ஏற்படுகிறது. நீர் சுருக்கு, சிறுநீர் அடைப்பு, சிறு நீரக கல் போன்றவைகள். இதனை தவிர்க்க ஊறவைத்த பாதாம் பிசினை சாப்பிட்டு வர மேற்கூறிய உஷ்ண நோய்கள் தீரும். 

கால தாமத உணவு முறைகளால் உண்டாகும் நெஞ்செரிச்சல் செரிமான கோளாறால் உண்டாகும் வயிற்று வலி போன்றவை நீங்க பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிட்டு வர குணமாகும்.

நீண்ட நாள் நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு உடலில் சத்து இன்றி மெலிந்து இருப்பார்கள், இவர்கள் வாரத்திற்க்கு மூன்று நாட்கள் பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிட்டு வர உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் அத்துடன் நோய் எதிர்ப்பு திறனையும் அதிகரிக்கும்.

ஆண் மலட்டு தன்மை உடையவர்கள் தினமும் இளம் சூடான பசும்பாலில் பாதாம் பிசினை கலந்து குடித்து வந்தால் நரம்புகள் வலு பெற்று மலட்டு தன்மை நீங்கும்.

குழந்தை பெற்ற தாயமார்கள் உடலில் சக்தி இழந்து இருப்பர்கள் பாதாம் பிசின் கலந்த பாலை சாப்பிடுவதால் கருப்பையில் உள்ள நச்சு நீங்கி உடல் வலுவடையும்.